தளி தொகுதியில்
வாக்குச்சாவடிகள்
குறைப்பு இல்லை
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி சட்டமன்றத் தொகுதியில்
27 வாக்குச்சாவடிகள் குறைப்பு என்று
நாளிதழ்களில் வெளியான செய்திகள்
முற்றிலும் உண்மைக்குப்
புறம்பானவை என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் விளக்கம்
கிருஷ்ணகிரி. ஏப்ரல். 01. -
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தளி சட்டமன்றத் தொகுதியில்
27 வாக்குச்சாவடிகள் குறைப்பு என்று நாளிதழ்களில் வெளியான செய்திகள்
முற்றிலும் உண்மைக்குப்
புறம்பானவை என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
56 தளி சட்டமன்றத் தொகுதியில்,
2021 ஆம் ஆண்டில் இருந்த
348 ஓட்டுச்சாவடிகள்
2026 தேர்தலுக்காக 321 ஆகக் குறைக்கப்பட்டதாகவும்.
இதனால் மலைக் கிராம மக்களின்
ஓட்டுப்பதிவு பாதிக்கப்படும் என
தினமலர் மற்றும்
காலைக்கதிர் நாளிதழ்களில்
01.04.2026 அன்று வெளியான செய்தி
உண்மைக்கு புறம்பானது
மற்றும்
தவறான தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், 56 தளி சட்டமன்றத் தொகுதியில், 2021 ல் இருந்த 348 என்ற எண்ணிக்கை COVID காலகட்ட உதவி ஓட்டுச்சாவடிகளை உள்ளடக்கியது.
2021 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில்,
தளி தொகுதியில் 302 வழக்கமான ஓட்டுச்சாவடிகள் மட்டுமே இருந்தன.
COVID-19 தொற்றுநோய் காரணமாக,
1000-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளில் உதவி ஓட்டுச்சாவடிகளை அமைக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி 46 உதவி ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 348 ஆனது.
இவை COVID காலத்திற்கு மட்டும் உரிய தற்காலிக ஏற்பாடு நிரந்தர ஓட்டுச்சாவடிகள் அல்ல.
COVID நிலை சீரானதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலேயே தளி தொகுதியில் ஓட்டுச்சாவடிகள் 305ஆக (303 வழக்கமான 2 உதவி) சரிசெய்யப்பட்டிருந்தன. 348 லிருந்து குறைந்தது 2026 க்காக மட்டும் செய்யப்பட்டதல்ல.
2026 தேர்தலில் ECI வழிகாட்டுதல்களின்படி சீரமைப்பு உண்மையில் பயன்பாடு அதிகரித்துள்ளது.
2026 தேர்தலுக்காக
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி
ஓட்டுச்சாவடிகள்
சீரமைக்கப்பட்டுள்ளது.
1200-க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரித்து 15 புதிய ஓட்டுச்சாவடிகள் உருவாக்கப்பட்டன.
பண்டுரங்கந்தொட்டி கிராம மக்கள்
2 கி.மீ. தூரம் செல்ல வேண்டிய
நிலையில் இருந்ததால்,
அவர்களின் கோரிக்கைக்கிணங்க
மிலிதிக்கியில் 661 வாக்காளர்களுக்காக
புதிய ஓட்டுச்சாவடி
அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், வழக்கமான ஓட்டுச்சாவடிகள்
இப்போது 321 ஆக உள்ளன.
எந்த ஓட்டுச்சாவடியிலும் 1200.க்கும் அதிகமான வாக்காளர்கள் இல்லாததால் ஓட்டுச்சாவடிகள் தேவையில்லை. இது குறைவல்ல, சிறந்த திட்டமிடலின் அறிகுறி.
மேலும், மலைக்கிராம வாக்காளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற
கவலை தேவையற்றது.
68 மலைப்பகுதி ஓட்டுச்சாவடிகளை -
குறிப்பிட்டு சிறப்பு SVEEP விழிப்புணர்வு நடவடிக்கைகள் முனைப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தனி வாக்காளர் பதிவு சீரமைப்பு (SIR) காலத்தில், தேர்தல் பதிவு அதிகாரி பேலக்கரை, லட்சுமிபுரம். பித்திரெட்டி, கடமக்குட்டை அல்லஹள்ளி, சித்தாபுரம், கொட்டையூர் கொல்லை, போல்கா கொல்லை, இனாம் நந்திமங்கலம் உள்ளிட்ட பழங்குடி கிராமங்களுக்கு நேரில் சென்று ஒவ்வொரு வாக்காளரையும் பதிவு செய்து
'எந்த வாக்காளரையும் விட மாட்டோம்"
என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கொள்கையை உறுதிப்படுத்தினார்.
இப்பகுதிகளில் 2021 ஐ விட அதிக வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களை
நம்ப வேண்டாம்.
கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் நிர்வாகம் சுதந்திரமான நியாயமான மற்றும்
முழுமையான தேர்தலை நடத்த
உறுதிபூண்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
------------------------------------.