"தேர்தல் திருவிழா –
தமிழ்நாட்டின் பெருவிழா"
54. வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதி
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
54. வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சூளகிரியில்
மண்டல தேர்தல்
பொறுப்பு அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்பு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி. மார்ச். 25. -
சூளகிரியில்
மண்டல தேர்தல்
பொறுப்பு அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
54. வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
சூளகிரி வட்டாட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
தேர்தலில் பணியாற்ற உள்ள
மண்டல தேர்தல் பொறுப்பு
அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்பு நடைபெற்றதை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
மார்ச் 25-ம் தேதியன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின் படி,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு,
சூளகிரி வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேர்தலில் பணியாற்ற உள்ள
மண்டல தேர்தல் பொறுப்பு
அலுவலர்களுக்கான
பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில்
வாக்குச்சாவடிகளில் முன்னேற்பாடு பணிகள், வாக்குப்பதிவு அன்று கடைபிடிக்க
வேண்டிய நடைமுறைகள்
குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
தொடர்ந்து,
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள
தேர்தல் கட்டுப்பாட்டு அறை,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை,
அவற்றின் பாதுகாப்பு,
தபால் வாக்கு மையம்,
கணக்குகள் பராமரிப்பு பிரிவு,
தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்புமனுக்கள் பெறும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள்,
பாதுகாப்பு பணிகள்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள்,
அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்,
இதுவரை VIGIL App மற்றும் நேரடியாக தேர்தல் தொடர்பாக வரப்பெற்ற புகார்கள்,
அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்,
சூளகிரி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்,
மனுதாக்கலின் போது பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அனுமதிப்பது குறித்து
ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது,
வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
வட்டாட்சியர்கள்
திரு.ரமேஷ்,
திருமதி.மகேஸ்வரி,
திரு.பெருமாள்,
திரு.பரிமேலழகன்,
திருபூவிதன்,
திரு.சின்னசாமி,
திரு.இளங்கோ
மற்றும்
துணை வட்டாட்சியர்கள்,
வருவாய் ஆய்வாளர்கள்,
உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள்,
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
--------------------------------------.