கொலமங்கலம் ஒசபுரம்
சீதா உடனுறை
ஸ்ரீராமர் திருக்கோயிலில்
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு
அபிஷேக பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
ஒசபுரம் கிராமத்தில்
ஸ்ரீராமநவமி முன்னிட்டு
சீதா உடனுறை ஸ்ரீராமர் திருக்கோயிலில்
32அடி உயரம் கொண்ட
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு
13-வது ஆண்டு அபிஷேக பூஜை விழா
தேன்கனிக்கோட்டை. மார்ச். 28. -
32அடி உயரம் கொண்ட
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமி
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஒன்றியம்
ஒசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள
பிரசித்தி பெற்ற பழமையான
சீதா உடனுறை ஸ்ரீராமர் திருக்கோயிலில்
ஸ்ரீராமநவமி முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைந்துள்ள
32அடி உயரம் கொண்ட
ஸ்ரீவீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு
13-வது ஆண்டு அபிஷேக பூஜை விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் அருகே உள்ள
ஒசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள
பழமையான சீதா உடனுறை ஸ்ரீ ராமர் திருக்கோயிலில்
மார்ச் 27-ம் தேதியன்று
ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
ரோஜா மலர்கள்
கொட்டி சிறப்பு பூஜை
அதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 32 அடி உயரம் கொண்ட
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு
13 ஆம் ஆண்டாக ரோஜா மலர்களால்
அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டது.
ஆஞ்சநேயர் மீது மூட்டை மூட்டையாக
ரோஜா மலர்கள் கொட்டப்பட்டு
சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
இந்த சிறப்பு பூஜையில்
முன்னாள் ஊராட்சி தலைவர்
திரு.ஜெயராமன்
திரு.மஞ்சுநாத்
ஊராட்சி செயலாளர்
திரு.மாதேஷ்
மற்றும் ஏராளமானவர்கள்
கலந்து கொண்டனர்.
அன்னதானம்
இதில் ஒசபுரம், எச்.செட்டிப்பள்ளி, கூட்டூர், ஜோதிபுரம், கூலிசந்திரம், போத்தசந்திரம்,
சங்கராயணபுரம், குந்துமாரனப்பள்ளி, தம்மண்டரப்பள்ளி, ஜே.காருப்பள்ளி,
கெலமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.அனைவருக்கும் அன்னதானம்
வழங்கப்பட்டது.
ராமநவமியை முன்னிட்டு
சீதா உடனுறை ஸ்ரீராமர் கோயில் வளாகத்தில்
காலை 10 மணிக்கு
திருமல திருமதி
சிவகுமாரி பாகவதாரணி
அவர்களால் ஹரிகதை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தபலா – சுப்பிரமணி
கீபோர்டு - ஏக்கலூர் மஞ்சு – ஆகியோர் இசைக்கருவிகளை சிறப்பாக வாசித்தனர்.
---------------------------------.