ஒசூர் டீல் நிறுவனம்
20 குடிநீர் சுத்திகரிப்பான்கள்
நன்கொடை
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
கட்டுப்பாட்டிலுள்ள சமூக நீதி விடுதிகளுக்கு,
ஒசூர் டீல் நிறுவனம்
(டைட்டன் இன்ஜினியரிங் அண்ட்
ஆட்டோமேஷன் லிமிடெட்)
சமூக பொறுப்பு நிதியின் கீழ் வழங்கிய
ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில்
25 லிட்டர் கொள்ளளவு கொண்ட
20 குடிநீர் சுத்திகரிப்பான்களை
விடுதி காப்பாளர்களிடம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்கள்.
ஒசூர். பிப். 25. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள
சமூக நீதி விடுதிகளுக்கு,
ஒசூர் டீல் நிறுவனம்
(டைட்டன் இன்ஜினியரிங் அண்ட்
ஆட்டோமேஷன் லிமிடெட்)
சமூக பொறுப்பு நிதியின் கீழ் வழங்கிய
ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில்
25 லிட்டர் கொள்ளளவு கொண்ட
20 குடிநீர் சுத்திகரிப்பான்களை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பிப்ரவரி 24-ம் தேதியன்று
விடுதி காப்பாளர்களிடம் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூரில் டீல் நிறுவனம் அமைந்துள்ளது.
இந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு
சமூக நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர் அவர்களின்
வேண்டுகோளின்படி,
டீல் நிறுவனம்
(டைட்டன் இன்ஜினியரிங் அண்ட்
ஆட்டோமேஷன் லிமிடெட்) சார்பாக,
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
தலா ரூ.16,000 வீதம்,
ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில்
25 லிட்டர் கொள்ளளவு கொண்ட
20 குடிநீர் சுத்திகரிப்பான்களை
அரசு சமூக நீதி விடுதிகளுக்கு வழங்கப்பட்டதையடுத்து,
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் முன்னிலையில்
விடுதி காப்பாளர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திருமதி.பத்மலதா,
டீல் நிறுவன பெரு நிறுவன
சமூகப் பொறுப்புணர்வு
திட்டத் தலைவர்
திரு.பாஸ்கர்,
துணை இயக்குநர்
திரு.விக்னேஸ்வரன்,
டீல் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு
திட்ட அதிகாரி
திரு.பிரபு,
வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை)
திரு.வெங்கடேசன்,
குடிநீர் சுத்திகரிப்பான் விநியோகஸ்தர்
திரு.வாசுதேவன்.
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
---------------------------------------------.