ஒசூர் திட்டப்பணிகள்
மாவட்ட ஆட்சித்தலைவர்
நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள
அரசு தலைமை மருத்துவமனை,
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
இராமநாயக்கன் ஏரி
மற்றும்
சாந்தபுரம் பகுதிகளில்
ரூ.582.54 கோடி மதிப்பில்
புதியதாக அமைக்கப்பட்டு வரும்
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு
ஒசூர். மார்ச். 3. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஒசூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள
அரசு தலைமை மருத்துவமனை,
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
இராமநாயக்கன் ஏரி மற்றும்
சாந்தபுரம் பகுதிகளில்
ரூ.582.54 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் மார்ச் 3-ம் தேதியன்று
(03.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனை
ஓசூர் அரசு மருத்துவமனையை
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக
தரம் உயர்த்தப்பட்டு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்களால்
16.02.2026 அன்று கானொளிக்காட்சி மூலம்
திறந்து வைக்கப்பட்டது.
தற்போது இப்புதிய கட்டிடத்தில்
அரசு தலைமை மருத்துவமனை
இடம் மாற்றம் செய்யப்பட்டு
நோயாளிகளுக்கு சிகிச்சை
வழங்கப்பட்டு வருகிறது.
மார்ச் - 3-ம் தேதியன்று
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்
அரசு தலைமை மருத்தவமனையில்
வெளிப்புற நோயாளிகள்
சிகிச்சை பிரிவு,
தோல் மருத்துவம்,
தொற்றாநோய் பிரிவு,
பல் மருத்துவம்,
பொது அறுவை சிகிச்சை பிரிவு,
மனநல மருத்துவம்,
பொது மருத்துவ பிரிவு,
ஒருங்கிணைந்த ஆலோசனை
சோதனை மையம்,
காது, மூக்கு, தொண்டை
சிகிச்சை பிரிவு,
செவித்திறன் பரிசோதனை,
கண் மருத்துவ பிரிவு,
தாய்சேய் நல பிரிவு
மற்றும் கழிப்பறைகள்,
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி
ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருத்துவமனையை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க
மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
பாதாள சாக்கடை திட்டப்பணிகள்
தொடர்ந்து,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட
ராமநாயக்கன் ஏரி
மற்றும்
சாந்தபுரம் பகுதிகளில்
புதியதாக அமைக்கப்பட்டு வரும்
பாதாள சாக்கடை திட்டப்பணிகளை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
ஓசூர் மாநகராட்சி
பாதாள சாக்கடை திட்டத்திற்கு
ரூ.582.54 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தற்போதைய (2024),
இடைக்கால (2039) மற்றும்
உச்சகட்ட (2054) மக்கள் தொகை
முறையே 2.24, 2.96 மற்றும்
3.91 இலட்சம் என்ற அடிப்படையில் இக்காலகட்டங்களில் நாளொன்றுக்கு
உருவாகும் கழிவுநீரின் அளவு முறையே
24.72, 32.65 மற்றும்
43.12 மில்லியன் லிட்டர் என
கணக்கிடப்பட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
இத்திட்டத்தில்
கழிவு நீர் சேகரிப்பு கட்டமைப்பாக
110 மி.மீ முதல் 800 மி.மீ வரை
விட்டமுள்ள UPVC, DWC மற்றும்
HDPE குழாய்கள் 325.14 கி.மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டு,
14,125 இயந்திர இறங்கு குழிகள்
அமைக்கப்பட உள்ளன.
இவற்றின் மூலம் சேகரிக்கப்படும்
கழிவு நீர்,
11 கழிவு நீரேற்று நிலையங்கள் மற்றும்
37 கழிவு நீர் உந்து நிலையங்கள் மூலமாக உந்தப்பட்டு
இரண்டு சுத்திகரிப்பு நிலையங்களான
சாந்தாபுரம் ஏரியில் அமைக்கப்பட உள்ள
12.513 எம்.எல்.டி சுத்திகரிப்பு திறன் கொண்ட
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
மற்றும்
ராமநாயகன் ஏரியில் அமைக்கப்பட உள்ள
20.133 எம்.எல்.டி சுத்திகரிப்பு திறன் கொண்ட
கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள்
(SBR Technology) மூலம் சுத்திகரிப்பு
செய்யப்பட உள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்,
குழாய்கள் மூலம் அருகில் அமைந்துள்ள சாந்தாபுரம் மற்றும் ராமநாயகன் ஏரிகளுக்கு உந்தப்பட்டு பாதுகாப்பாக வெறியேற்றப்பட உள்ளது.
இத்திட்டத்தின் கழிவுநீர் சேகரிப்பு
கட்டமைப்பு பணிகள்
தற்போது 33 விழுக்காடு மற்றும்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள்
40 விழுக்காடு முடிக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள பணிகளை இலக்கிட்டபடி
ஜூலை-2027 -க்குள் முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணிகளை தரமாகவும்,
விரைவாகவும் முடிக்க
பொறியாளர்களுக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது,
ஓசூர் மாநகராட்சி ஆணையர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம்
இ.ஆ.ப,
முதன்மை மருத்துவ அலுவலர்
மரு.லட்சுமி ஸ்ரீ,
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்
திருமதி.திவ்யா,
உதவி செயற்பொறியாளர்கள்
திரு.ரங்கோத் சிங்,
திருமதி.தமிழரசி.
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
-----------------------------------.