இந்திய தேர்தல் ஆணையத்தின்
வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளில்
போட்டியிட உள்ள வேட்பாளர்கள்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து
30.03.2026 முதல் 06.04.2026 வரை
(விடுமுறை தினங்கள் நீங்கலாக)
தங்களது வேட்பு மனுக்களை
தாக்கல் செய்யலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மார்ச். 28. –
இதுகுறித்து
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.
அறிவிக்கை நாள்
: 15.03.2026
வேட்புமனு தாக்கல் துவங்கும் நாள்
: 30.03.2026
வேட்புமனு தாக்கல் செய்திட கடைசி நாள்
: 06.04.2026
வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் நாள்
: 07.04.2026
வேட்பு மனு திரும்ப பெற கடைசி நாள்
: 09.04.2026
தேர்தல் நடைபெறும் நாள்
: 23.04.2026
வாக்கு எண்ணிக்கை நாள்
: 04.05.2026
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும்
போட்டியிட உள்ள வேட்பாளர்கள்
தங்களது வேட்பு மனுக்களை
30.03.2026 முதல் 06.04.2026 வரை
(31.03.2026, 01.04.2026, 03.04.2026 05.04.2026)
ஆகிய விடுமுறை தினங்கள் நீங்கலாக
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேரில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை தாக்கல் செய்யலாம்.
சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர்
51.ஊத்தங்கரை (தனி)
வேட்பாளர் மனு தாக்கல் செய்யும்
இடம்/அலுவலகம்
தேர்தல் நடத்தும் அலுவலர்
வட்டாட்சியர் அலுவலகம், ஊத்தங்கரை.
திரு.என்.சிவக்குமார்,
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நல அலுவலர்,
கிருஷ்ணகிரி.
----------------------------------.
52.பர்கூர்
வட்டாட்சியர் அலுவலகம், பர்கூர்.
திருமதி.அ.அபிநயா,
தனித்துணை ஆட்சியர்,
சமூக பாதுகாப்பு திட்டம், கிருஷ்ணகிரி.
---------------------------------.
53.கிருஷ்ணகிரி
வருவாய் கோட்டாட்சியர் |
அலுவலகம், கிருஷ்ணகிரி.
திரு.என்.ஷாஜகான்,
வருவாய் கோட்டாட்சியர், கிருஷ்ணகிரி,
----------------------------------.
54.வேப்பனஹள்ளி
வட்டாட்சியர் அலுவலகம், சூளகிரி,
திருமதி.டி.ஆர். கீதாராணி,
மாவட்ட வழங்கல் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்,
கிருஷ்ணகிரி,
-------------------------------------.
55.ஓசூர்
சார் ஆட்சியர் அலுவலகம், ஒசூர்.
திருமதி.ஆக்ரிதி சேத்தி, இ.ஆ.ப.,
சார் ஆட்சியர்,
ஒசூர்.
---------------------------------------.
56.தளி
வட்டாட்சியர் அலுவலகம்,
தேன்கனிக்கோட்டை.
திரு.பழனி,
உதவி ஆணையர் (ஆயம்),
கிருஷ்ணகிரி.
மேலும், வேட்புமனுக்களை ஆன்லைனில் http://suvidha.eci.gov.in
என்ற இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்யலாம்.
ஆனால் வேட்பு மனுவினை இணையதளம் வாயிலாக 05.04.2026 வரை மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்.
எனினும் ஆன்லைன் வேட்புமனுவினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு
உரிய ஆவணங்களுடன் நேரில் வேட்பாளரோ/ வேட்புமனுவினை முன்மொழிபவரோ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / நிர்ணயிக்கப்பட்ட முதன்மை உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக
ஆன்லைன் மனுவில் குறிப்பிட்டுள்ள நாள்
மற்றும் நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.
காலை 11.00 மணிக்கு முன்னரும்,
மாலை 3.00 மணிக்கு பின்னரும் வரப்பெறும் வேட்புமனுக்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
மேலும் வேட்பு மனுக்களை
வேட்பாளர்கள் தாக்கல் செய்திடும் போது
இந்திய தேர்தல் ஆணையத்தால்
அறிவுறுத்தியவாறு
கீழ்க்கண்ட நடைமுறைகளை
கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது
கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள்
வேட்பு மனு தாக்கல் செய்யும்
முந்தைய நாளிலிருந்து மட்டுமே
தேர்தல் செலவினத்திற்காக
புதியதாக வங்கி கணக்கினை
தொடங்க வேண்டும்.
ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள
வங்கி கணக்கு விவரம்
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
அனைத்து வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், அஞ்சலகங்களில் புதியதாக வங்கி கணக்கு தொடங்கலாம்.
வங்கி கணக்கு வேட்பாளர் பெயரிலோ அல்லது வேட்பாளர் மற்றும் அவரது தேர்தல் முகவர் ஆகியோர் கொண்ட கூட்டு வங்கி
கணக்காவோ தொடங்கலாம்.
வேட்பாளர் அவரது குடும்ப உறுப்பினர்களை கூட்டாக கொண்டு வங்கி கணக்கு தொடங்க கூடாது.
வங்கி கணக்கு விவரத்தினை
வேட்பு மனு தாக்கல் செய்யும்போது
தரவேண்டும்.
வேட்பு மனுவுடன்
வேட்பாளர் சம்மந்தப்பட்ட Form 26 Affidavit ஒன்றினை First Class Magistrate / Notary Public சான்றுடன் தாக்கல் செய்ய வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய
டெபாசிட் தொகை ரூ.10000/-
ரொக்கமாகவோ /Treasury Challan
மூலமாகவோ தேர்தல் நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும்
(ஆன்லைனில் வேட்பு மனு அளித்தால் ஆன்லைனில் டெபாசிட்
தொகை செலுத்தலாம்)
காசோலை /வரைவோலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /
பழங்குடியினருக்கான வேட்பு மனு தாக்கல் டெபாசிட் தொகை ரூ 5000/- ஆகும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /
பழங்குடியினர் எனில்
அசல் சாதி சான்றினை
வேட்பு மனுவுடன் தாக்கல்
செய்ய வேண்டும்.
வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது
தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள்
3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே
தேர்தல் நடத்தும் அலுவலரிடம்
மனு அளிக்க அனுமதிக்கப்படுவர்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள்
பிரசார வாகனத்திற்கு
தேர்தல் நடத்தும் அலுவலர் /
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே அனுமதி பெறவேண்டும் என
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
---------------------------------------.