100% வாக்களிப்போம்
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்
தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்று
விழிப்புணர்வு வாசகம் எழுதப்பட்ட
ஹீலியம் பலூனை பறக்கவிட்டு,
விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து
துவக்கி வைத்து,
விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி. ஏப்ரல். 04. –
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல்-2026
100% வாக்களிப்போம்
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல்-2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக வளாகத்தில்,
வாக்காளர்கள் தேர்தலில்
100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (04.04.2026)
விழிப்புணர்வு ஹீலியம் பலூனை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மேல் பறக்கவிட்டு,
விழிப்புணர்வு வாகனத்தை
கொடியசைத்து துவக்கி வைத்து
கலைப்பண்பாட்டுத்துறை சார்பாக
விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்-2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
கையெழுத்து இயக்கம்,
உறுதிமொழி,
விழிப்புணர்வு பேரணி,
ஒட்டுவில்லைகள்,
எல்.இ.டி. வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு,
இருசக்கர வாகன பேரணி,
கோலப்போட்டி,
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டிகள்,
செல்பி பாயிண்ட்,
விழிப்புணர்வு முத்திரை,
சிறுதானிய விதைகள் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு வாசகம்,
விவசாயிகள் கலந்து கொண்ட
டிராக்டர், மாட்டுவண்டிகள் மற்றும்
இருசக்கர வாகனங்களின்
பிரச்சார பேரணிகள்,
சிலம்பாட்டம்,
கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
என பல்வேறு விழிப்புணர்வு
நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதனைத்தொடர்ந்து,
இன்று (04.04.2026) வாக்காளர்கள்
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026ல்,
100 சதவிகிதம் வாக்களிப்பதன்
முக்கியத்துவத்தை
உணர்த்தும் வகையில்,
விழிப்புணர்வு ஹீலியம் பலூனை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு
மேல் பறக்கவிடப்பட்டது.
மேலும், விழிப்புணர்வு வாகனத்தை
கொடியசைத்து துவக்கி வைத்து, கலைப்பண்பாட்டுத்துறை சார்பாக
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
நடைபெற்றது.
எனவே, வாக்காளர்கள் நடைபெற உள்ள
சட்டமன்ற பொதுத்தேர்தலில்
100 சதவிகிதம் வாக்களித்து
தங்களின் ஜனநாயக கடமையை
ஆற்றவேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
ஊடக மைய அலுவலர்
திரு.சு.மோகன்,
உதவி திட்ட அலுவலர்
திரு.தண்டபாணி,
ஊரக வளர்ச்சி முகமை
கண்காணிப்பாளர்
திரு.சிவபிரகாசம்,
தேர்தல் விழிப்புணர்வு
ஒருங்கிணைப்பாளர்
திருமதி.புவனேஸ்வரி,
திருமதி.சித்ரா தேவி
மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
---------------------------------------------.