கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஓசூரில், மாநகராட்சி வணிக வளாகம் உட்பட
ரூ. 20.12 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள்
முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
காணொளி வாயிலாக
திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி எம்.பி.
திரு. கோபிநாத்,
ஓசூர் எம்எல்ஏ
திரு. ஒய்.பிரகாஷ்
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு. S.A. சத்யா.Ex.MLA.
ஆகியோர் பங்கேற்பு
ஒசூர், மார்ச். 14. -
ஓசூரில், மாநகராட்சி சார்பில்
ரூ. 20.12. கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட
புதிய வணிக வளாகம்
மற்றும்
அரசுப் பள்ளி கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை
முதலமைச்சர்
திரு. மு.க.ஸ்டாலின்
அவர்கள்
மார்ச். 13-ம் தேதியன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மாநகராட்சி வணிக வளாகம்
தமிழகத்தின் தொழில் நகரமான
ஓசூரின் உட்கட்டமைப்பை
மேம்படுத்தும் வகையில்,
பல்வேறு வளர்ச்சி திட்டப்
பணிகளை தமிழக அரசு
செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில்,
ஓசூர் பேருந்து நிலையம் அருகே
ரூ. 19.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள மாநகராட்சி வணிக வளாகம் மற்றும்
சென்னத்தூர் பகுதியில் உள்ள
மாநகராட்சிப் பள்ளியில்
ரூ.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள
கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் உட்பட மொத்தம் ரூ. 20.12 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை
முதலமைச்சர் அவர்கள்
மார்ச் 13-ம் தேதியன்று காணொளி காட்சி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்காக
திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து,
ஓசூர் மாநகராட்சி வணிக வளாகத்தில்
நடைபெற்ற விழாவில்
கிருஷ்ணகிரி எம்.பி.
திரு.கோபிநாத்
ஓசூர் எம்எல்ஏ
திரு. Y.பிரகாஷ்
ஓசூர் மாநகராட்சி மேயர்
திரு. S.A. சத்யா.Ex.MLA.
ஆகியோர் ரிப்பன் வெட்டி
குத்துவிளக்கேற்றி வைத்தனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் ஆணையாளர்
திரு. முகமது சபீர் ஆலம்,
மாநகர சுகாதாரக் குழு தலைவர்
திரு. N.S.மாதேஸ்வரன்,
வரி கமிட்டி தலைவர்
திரு. சென்னீரப்பா,
மாமன்ற உறுப்பினர்கள்,
அரசு அலுவலர்கள் மற்றும்
பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
-----------------------------------.