கோயம்புத்தூர் இராணுவ ஆள் சேர்ப்பு
அலுவலகம் மூலம் நடைபெறும்
இராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கு
தகுதியும், விருப்பமும் உள்ள
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
www.joinindianarmy.nic.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மார்ச். 20. -
கோயம்புத்தூர் இராணுவ ஆள் சேர்ப்பு
அலுவலகம் மூலம் நடைபெறும்
இராணுவ ஆள் சேர்ப்பு முகாமிற்கு
தகுதியும், விருப்பமும் உள்ள கிருஷ்ணகிரி
மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள்
www.joinindianarmy.nic.in
என்ற இணையதளத்தில்
விண்ணப்பிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
கோயம்புத்தூர் இராணுவ ஆள் சேர்ப்பு
அலுவலகம் மூலம்
வருகின்ற 01.04.2026 வரை
www.joinindianarmy.nic.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
இம்முகாமில்
கோயம்புத்தூர்,
திருப்பூர்.
சேலம்,
ஈரோடு,
தேனி,
நீலகிரி,
மதுரை,
கிருஷ்ணகிரி,
திண்டுக்கல்,
தருமபுரி
மற்றும்
நாமக்கல்
மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள்
பங்கு பெறவும்.
விண்ணப்பதார்களின் வயது வரம்பு
17.5 வயது முதல் 22 வயது வரையிலும்
8-ம் வகுப்பு தேர்வு முதல்
பனிரெண்டாம் வகுப்பு (2) மற்றும்
தொழிற்கல்வி (ITI) போன்ற
கல்வித்தகுதியுடனுடன் 01.04.2026 வரை
www.joinindianarmy.nic.in
விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவினை இணைக்கப்பட்டுள்ள QR code-ல் அறிந்து கொள்ள ஏதுவாக விளம்பரம் செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்முகாமில் விருப்பமுள்ள
இம்மாவட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு
பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------.