இல்லத்தரசி திட்டம்
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன்
இல்லத்தரசி என்ற திட்டம் மூலம்
எட்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்,
மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை
2000 ரூபாயாக உயர்த்தி கொடுப்போம்
5-வது வகுப்பு வரை உள்ள
காலை உணவு திட்டத்தை
எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும்
கல்வி ஊக்கத்தொகை திட்டம்
1000 ரூபாயிலிருந்து
1500 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்படும்,
50 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில்
அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும்
35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு
எந்தவித பினையும் இல்லாமல்
ரூ.5 லட்சம் வரை கடனுதவி
வழங்கப்படும் -----
துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
மத்திகிரியில் பரப்புரை
ஒசூர். ஏப்ரல். 01. –
S.A. சத்யா அவர்களை
50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெறச் செய்ய வேண்டும்--
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
மத்திகிரி பேருந்து நிலையத்தில்
மார்ச் 31-ம் தேதியன்று
இரவு 8.30 மணிக்கு நடந்த
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
தேர்தல் பரப்புரையில்
திமுக வேட்பாளர்
திரு.S.A.சத்யா
அவர்களை ஆதரித்து
துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின்,
அவர்கள்
தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
ஒசூர் மத்திகிரியில்
துணை முதலமைச்சர்
திரு. உதயநிதி ஸ்டாலின், அவர்கள்
பேசியதாவது,
கலைஞரின்
உயிரினும் மேலான
உடன்பிறப்புக்கள்
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர்
ஒய். பிரகாஷ்,
கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன்.
வேப்பனஹள்ளி தொகுதி வேட்பாளர்
சீனிவாசன்,
மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ்,
மாவட்ட பொருளாளர் சுகுமார்,
மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
எல்லோரா மணி, ஆனந்தய்யா,
மாதேஸ்வரன்
மற்றும் அனைத்து திமுக நிர்வாகிகள்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள
இந்திய தேசிய காங்கிரஸ்,
திராவிடர் கழகம், தேமுதிக,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி,
மதிமுக, மக்கள் நீதி மய்யம்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
SDPI, உள்ளிட்ட அனைத்து தோழமை
கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்
உங்கள் அனைவருக்கும் மற்றும்
இங்கு கூடியிருக்கும் தாய்மார்கள்,
உங்கள் அத்தனை பேருக்கும்
முத்தமிழரிஞர் கலைஞரின்
உயிரினும் மேலான
அன்பு உடன்பிறப்புகளுக்கும்
எனது வணக்கத்தை
தெரிவித்துக்கொள்கிறேன்.
கடந்த முறை S.A. சத்யா அவர்களை
25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள்.
இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக
பல்வேறு திட்டங்களை அந்தந்த பகுதி மக்களுக்கு செய்து கொடுத்திருக்கிறோம்.
என்ற நம்பிக்கையில் வாக்கு கேட்டு வந்திருக்கிறோம்.
உதாரணத்திற்கு இந்த ஒசூர் தொகுதிக்கு
நாம் செய்திருக்கும் திட்டங்களை உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஒசூர் மாநகராட்சியில்
ரூ.580 கோடி மதிப்பில்
புதிய பாதாள சாக்கடை திட்டம்
நம்முடைய அரசு செய்து
கொடுத்திருக்கிறது.
சுமார் ரூ.100 கோடி மதிப்பில்
புதிய அரசு மருத்துவமனை
நம்முடைய அரசு செய்துகொடுத்திருக்கிறது.
ரூ.20 கோடி மதிப்பீட்டில்
பிரம்மாண்டமான வணிக வளாகம்
கட்டிக் கொடுத்தது நம்முடைய அரசு.
ஒசூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க
சுமார் ரூ.4 கோடி மதிப்பில்
2 வழி சாலைகள் 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.10 கோடி மதிப்பில்
காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்
கட்டப்பட்டுள்ளது.
ஒசூர் புறநகர் பேருந்து நிலையம்
இப்படி பல திட்டங்களை
இந்த ஓசூர் தொகுதிக்கு செய்து கொடுத்திருக்கிறோம்.
இன்று மீண்டும் உதயசூரியன் சின்னத்தில்
வாக்கு கேட்டு நாங்க வந்து இருக்கிறோம்.
ஒசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஒன்றிய அரசிடம் தொடர்ந்து முயற்சி செய்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் ஒன்றிய அரசு அதை தடுக்கிறது.
நம்முடைய தேர்தல் அறிக்கையை
இன்னைக்கு நம்முடைய
நாட்டு மக்கள் நம்புகிறார்கள்.
நம்முடைய தலைவர்
சொன்னதை செய்வார் என்று
நம்முடைய நாட்டு மக்களுக்கு
நம்பிக்கை இருக்கிறது.
2021 சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி
கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கையில்
உங்களை சந்திக்க வந்துள்ளோம்.
ஆட்சி அமைந்ததும் முதல்வர் போட்ட
முதல் கையெழுத்து
மகளிர் விடியல் பயணம் திட்டம்.
இதன்மூலம் ஒவ்வொரு மகளிரும்
சுமார் ஆயிரம் ரூபாய் வரை
சேமித்து வருகிறார்கள்.
அரசுப் பள்ளியில் குழந்தைகள்
பசியோடு படிக்கக் கூடாது என்பதற்காக
ஒன்றாம் வகுப்பு முதல்
ஐந்தாம் வகுப்பு வரை
காலை உணவு திட்டம்
முதல்வர் வழங்கியுள்ளார்.
அதன் மூலம் மாணவச்செல்வங்களுக்கு
சத்தான உணவு
தரமான கல்வி வழங்கப்படுகிறது.
.
அரசு பள்ளியில் படித்து
எந்த அரசு தனியார் கல்லூரியில் சேர்ந்தாலும்
அரசு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய்
கல்வி ஊக்கத்தொகை
வழங்குகிறது.
இதன் மூலம் 13 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளார்கள்,
அதேபோல்
கடந்த மாதம் 10 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்கி உள்ளோம்.
லேப்டாப் திட்டம் அதிமுக கொண்டு வந்தது என்றும் அதை நாம் நிறுத்திவிட்டோம்
என்ற பொய் குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள்.
2019 ஆம் ஆண்டு அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கு
லேப்டாப்
நம்முடைய முதல்வர்
இந்த லேப்டாப் திட்டத்தை
கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தால்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்,
அவர்கள் மேற்படிப்பு செல்வதற்கும்
வேலைக்கு செல்வதற்கும் பயனுள்ளதாக
இருக்கும் என்று
கல்லூரி மாணவர்களுக்கு
கொடுத்திருக்கிறோம்.
அதேபோல் கடந்த மூன்று ஆண்டுகளில்
ஒரு கோடியே 31 லட்சம் மகளிர்க்கு
மகளிர் உரிமைத்தொகை
மாதம் ஆயிரம் ரூபாய் முதல்வர் கொடுக்கிறார்.
அந்தத் திட்டத்தை தேர்தலை காரணம் காட்டி எப்படியாவது நிறுத்த வேண்டும்
என பாஜகவும் அதிமுகவும்
முயற்சி செய்தார்கள்.
சில மாநிலங்களில் நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தியுள்ளார்கள்.
நம்முடைய முதல்வர் ஆயிரம் ரூபாயை
நிறுத்த பார்க்கிறீர்களா என்று
கோடைகால சிறப்பு நிதியாக
ரூ.2ஆயிரம் என
ஒரு கோடியே 31 லட்சம் குடும்பங்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கினார்.
இந்தத் திட்டங்கள்
தொடர வேண்டுமென்றால் நம்முடைய
திராவிட மாடல் 2.0 ஆட்சி
அமைய வேண்டும்.
இல்லத்தரசி திட்டம்
அதேபோல் தேர்தல் அறிக்கையில் பல்வேறு உறுதி மொழியை கொடுத்துள்ளோம்,
திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்த உடன்
மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை
2000 ரூபாயாக உயர்த்தி கொடுப்போம் என உறுதிமொழி கொடுத்துள்ளோம்.
ஐந்தாம் வகுப்பு வரை உள்ள காலை உணவு திட்டத்தை எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்ற உறுதிமொழியை கொடுத்துள்ளோம்,
கல்வி ஊக்கத்தொகை திட்டம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி கொடுக்கப்படும்,
50 லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கித் தரப்படும் என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது,
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் 35 லட்சம் லேப்டாப் வழங்கப்படும்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு எந்தவித பினையும் இல்லாமல்
ரூ.5 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்,
இல்லத்தரசி என்ற திட்டம் மூலம்
எட்டாயிரம் ரூபாய்
மதிப்புள்ள கூப்பன்
வழங்கப்படும்,
அதை வைத்துக்கொண்டு
வீட்டிற்கு தேவையான
குக்கர் மிக்ஸி டிவி மைக்ரோ ஓவன்
உள்ளிட்ட மின்சாதன பொருட்களை
வாங்கிக் கொள்ளலாம்.
இந்த திட்டங்கள் நிறைவேற வேண்டுமென்றால் மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய வேண்டும்.
கடந்த முறை சத்யா அவர்களை 25 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். இந்த முறை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி அமைய
நமது வேட்பாளர் S.A.சத்யா அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என
துணை முதலமைச்சர்
உதயநிதி ஸ்டாலின்
அவர்கள் மத்திகிரியில் நடந்த
தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
வாக்காளர்களிடம்
கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில்
ஒசூர் தொகுதி திமுக
வேட்பாளர் S.A. சத்யா
அவர்கள் மற்றும்
திமுக நிர்வாகிகள்
மகளிர் அணியினர்
மதசார்பற்ற முற்போக்கு
கூட்டணி கட்சியினர் மற்றும்
பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
---------------------------------------.