"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் - 2026
நடைபெறுவதை முன்னிட்டு
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஏப்ரல். 06. –
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்- 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலகமான
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யும் படிவங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (06.04.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
வேட்புமனு தாக்கல்
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின் படி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்
30.03.2026 முதல் 06.04.2026 வரை
(31.03.2026, 01.04.2026, 03.04.2026
மற்றும் 05.04.2026)
ஆகிய விடுமுறை தினங்கள் நீங்கலாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் நேரில் காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற்று வருகிறது.
நிறைவு நாளான ஏப்ரல் 6-ம் தேதியன்று
வேட்பாளர்கள் வேட்பு மனு
தாக்கல் செய்வதற்கான
முன்னேற்பாடு பணிகள்,
வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகள்,
தேர்தல் கட்டுப்பாட்டு அறை,
கணக்குகள் பராமரிப்பு பிரிவு,
தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் வேட்புமனுக்கள் பெறும்போது கடைபிடிக்கப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள்,
பாதுகாப்பு பணிகள்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது அனுமதி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள்,
அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.கீதாராணி,
வட்டாட்சியர்
திரு.ரமேஷ்,
மற்றும்
தனி வட்டாட்சியர்
திருமதி.மகேஸ்வரி
மற்றும் துணை வட்டாட்சியர்கள்
உடன் இருந்தனர்.
------------------------------------.