கிருஷ்ணகிரி மாவட்டம்,
வெங்கடாபுரம் ஊராட்சியில்
குழந்தைகள் நலக் குழுமம்,
இளஞ்சிறார் நீதிக் குழு,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில்
ரூ.1கோடியே 67 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில்
நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள்,
கிருஷ்ணகிரி அரசு மாதிரிப்பள்ளி, உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளிக்கான இடம்
ஆகியவற்றை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
இன்று (11.06.2026) நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஜுன். 11. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
வெங்கடாபுரம் ஊராட்சியில்
குழந்தைகள் நலக் குழுமம்,
இளஞ்சிறார் நீதிக் குழு,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய பகுதியில்
ரூ.1 கோடியே 67 லட்சத்து
88 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும்
வளர்ச்சி திட்ட பணிகள்,
கிருஷ்ணகிரி வடமேற்கு மண்டல
அரசு மாதிரிப்பள்ளி,
மண்டல மாதிரி உண்டு உறைவிட
மேல்நிலைப்பள்ளிக்கான இடம்
ஆகியவற்றை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (11.06.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
வெங்கடாபுரம் ஊராட்சி,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு
சொந்தமான வணிக வளாகத்தில்
குழந்தைகள் நலம் மற்றும்
சிறப்புச் சேவைகள் துறையின் கீழ்
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
மற்றும் அதன் அருகில் செயல்பட்டு வரும்
குழந்தைகள் நலக் குழுமம்
(Child Welfare Committee - CWC)
(Juvenile Justice Board - JJB)
ஆகியவற்றின்
தற்போதைய செயல்பாடுகள்,
உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்
தற்பொழுது நடைபெற்று வரும்
பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
அரசு வழிகாட்டுதல்களின்படி,
இரு குழுமங்களுக்கும் வரும்
குழந்தைகளுக்கு மனரீதியாக
பாதுகாப்பான சூழலை உறுதி செய்யும்
"குழந்தைகள் நேய"
(Child-Friendly)
வசதிகள் முழுமையாக உள்ளதா
என்பது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பாதுகாப்பு மற்றும்
பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை
குழந்தைகள் நலக் குழுமத்தின்
முன் ஆஜர்படுத்தப்படும் போது,
அவர்கள் அச்சமின்றி தங்களது
கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளும்
வகையில், சுவர்களில்
வண்ணமயமான ஓவியங்கள் வரைதல்,
விளையாட்டு உபகரணங்கள் மற்றும் குழந்தைகளுக்கான
பொழுதுபோக்கு
புத்தகங்களுடன் கூடிய
"குழந்தைகள் ஆற்றுப்படுத்தும்"
(Child Counselling Room) அமைக்கும்
பணிகளை விரைந்து முடிக்க
உத்தரவிட்டார்.
மேலும்,
இளஞ்சிறார் நீதிக் குழுமத்திற்காக
கட்டிகானப்பள்ளி ஊராட்சி,
புதூர் பகுதியில் அரசிற்கு சொந்தமான
அலுவலக கட்டடமானது
மாவட்ட ஆட்சியர் அவர்களால்
முன்னதாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அவ்வலுகத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு வசதிகளான
குழந்தைகளுக்குத் தேவையான
காற்றோட்டமான தங்கும் பகுதிகள்
மற்றும்
தூய்மையான குடிநீர்,
சுகாதாரமான கழிவறை வசதிகள்
ஆகியவற்றை பார்வையிட்டு,
தற்போது அலுவலக வளாகங்களில்
நடைபெற்று வரும் கூடுதல் உட்கட்டமைப்பு
மற்றும் பராமரிப்புப் பணிகளை
தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட
காலத்திற்குள்ளும் முடித்து பயன்பாட்டிற்குக்
கொண்டு வர வேண்டும் என
பொதுப்பணித்துறை மற்றும்
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு
உத்தரவிட்டார்.
மேலும்
விசாரணையின் போது
குழந்தைகளின் ரகசியத்தன்மை மற்றும்
தனிநபர் உரிமை எவ்விதத்திலும்
பாதிக்கப்படாத வகையில்
தனித்தனி ஆலோசனை அறைகளை
(Counseling Rooms)
தரம் உயர்த்த அறிவுறுத்தினார்.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம்,
கட்டிகானப்பள்ளி ஊராட்சி,
கீழ்புதூர் கிராமத்தில்,
மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தில்,
பொதுநிதியின் கீழ்,
ரூ.7 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில்
அலுமினியம் தடுப்பு சுவர் அமைக்கும் பணி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு
சமூக பொறுப்பு நிதியின் கீழ்,
ரூ.72 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில்
பகுதி - 1 மற்றும் பகுதி - 2 என
தலா 2 வகுப்பறை கட்டிடங்கள் என
மொத்தம் 4 வகுப்பறை கட்டிடங்களின்
கட்டுமான பணி,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதி 2 -ல்,
ரூ.31 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பில்,
பழைய ஆர்டிஓ அலுவலகம் முதல்
விநாயகர் கோயில் வரை உள்ள
சாலை சீரமைக்கும் பணி,
கட்டிகானப்பள்ளி ஊராட்சி,
வகாப் நகரில்,
மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியின் கீழ்,
ரூ.56 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில்
சிமெண்ட் சாலை,
தார்சாலை மேம்பாடு,
சிறுபாலம் மற்றும்
பாதாள சாக்கடை கால்வாய்
அமைத்தல் என மொத்தம்
ரூ.1 கோடியே 67 லட்சத்து
88 ஆயிரம் மதிப்பிலான
வளர்ச்சி திட்ட பணிகளை
நேரில் பார்வையிட்டு,
பணிகளை தரமாகவும்,
விரைவாகவும் முடித்து
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு
வழங்க வேண்டும் என
அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி வடமேற்கு மண்டல
அரசு மாதிரிப்பள்ளியில்,
10 மற்றும் 12 -ம் வகுப்பு
தேர்ச்சி விகிதம் குறித்து
பள்ளி தலைமையாசிரியரிடம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து,
மாணவர் விடுதியில்,
மாணவர்களின்
படுக்கை அறை,
சமையல் கூடம்,
கழிப்பறை
ஆகியவற்றை பார்வையிட்டு,
மாணவர்களுக்கு வழங்கப்படும்
காலை மற்றும் மதிய உணவிற்கான
உணவு மாதிரிகளை
ஆய்வு செய்தார்.
மண்டல மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி
தொடர்ந்து,
கிருஷ்ணகிரி நகராட்சி,
பழைய அரசு மருத்துவமனையில்,
மண்டல மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியாக
செயல்படுவதற்கான இடத்தை
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன்குமார்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு
நல அலுவலர்
திருமதி.சக்தி காவியா,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்,
ஊரக வளர்ச்சித்துறை
செயற்பொறியாளர்
திரு.மோகன சுந்தரம்,
உதவி செயற்பொறியாளர்
திரு.ஜெகதீசன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.சரவணன்,
திருமதி.பாப்பி பிரான்சினா,
ஊரக வளர்ச்சித்துறை
பொறியாளர்
திருமதி.ஜமுனா,
பணிமேற்பார்வையாளர்
திரு.ரவி,
மருத்துவ அலுவலர்
மரு.மது,
மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர்
திரு.சத்தியமூர்த்தி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடனிருந்தனர்.
-----------------------------------------------.