கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி சட்டமன்ற தொகுதியில்
இந்திய கம்யூனிஸ்
கட்சி வேட்பாளர்
திரு. டி. ராமச்சந்திரன்
கிராம மக்களை சந்தித்து
கதிர் அரிவாள் சின்னத்தில்
வாக்களிக்கும்படி கூறி
வாக்கு சேகரித்தார்.
தேன்கனிக்கோட்டை. ஏப். 09. –
தளி தொகுதியில்
CPI வேட்பாளர்
வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில்
இந்திய கம்யூனிஸ் கட்சி வேட்பாளர்
திரு. டி. ராமச்சந்திரன்,
ஏப்ரல் 9-ம் தேதியன்று
தளி தொகுதியில் உள்ள
கிராம மக்களை சந்தித்து
தளி தொகுதி வளர்ச்சிக்காகவும்,
தொகுதி மக்களின் நலனுக்காகவும்
கதிர் அரிவாள் சின்னத்தில்
வாக்களிக்கும்படி கூறி
ஓட்டு சேகரித்தார்.
தளி சட்டமன்ற தொகுதியில்
போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
வேட்பாளர் டி.ராமச்சந்திரன்
தளி தொகுதியில் உள்ள
கிராமங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கிராம மக்களிடையே கூறியதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி தொகுதி வளர்ச்சிக்காகவும்
தொகுதி மக்களுடைய நலனுக்காகவும்
கிராமம் வளர்ச்சிக்காகவும்
சாலை வசதி,
குடி தண்ணீர் வசதி
நியாய விலை கடை வசதி
பால்வாடி
என்று பல்வேறு திட்டங்களை
பல ஆண்டுகளாக செய்து வருகிறேன்
இந்த முறையும்
தளி தொகுதியில் சி.பி.ஐ கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறேன்.
தமிழக முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
மீண்டும் முதலமைச்சராகவும்,
பல்வேறு திட்டங்கள்
மக்களுக்கு வந்து சேரவும்,
மாணவ மாணவிகள் பட்டப்படிப்பு
படிக்க வேண்டும் என்றால்
பெங்களூர், சென்னை செல்ல வேண்டிய
சூழ்நிலை இருந்தது.
நான் வந்த பிறகு கல்லூரிகள்,
விளையாட்டு மைதானங்கள்,
நீர்நிலைகளை ஆழப்படுத்துவது,
என்று பல திட்டங்களை தொகுதிக்கு கொண்டு வந்துள்ளேன்.
நான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சார்பாக போட்டியிடுகிறேன்
எனக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெற செய்தால்
கிராம வளர்ச்சி மக்கள் அடிப்படை வசதிகளை உங்களோடு என்றும் நின்று செய்து கொடுப்பேன் என்று உறுதி கூறினார் .
உடன் ஒன்றிய செயலாளர்
திரு.கிருஷ்ணப்பா
முன்னாள் கவுன்சிலர்கள்
திரு.ஜெயராமன்.
திரு.பிரசாந்த்.
முன்னாள் ஊராட்சி தலைவர்கள்
திரு.முத்தன்
திரு.கோவிந்தன்,
மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் பொறுப்பாளர்கள்
பொதுமக்கள், தாய்மார்கள்
ஏராளமான கிராம மக்கள் இந்த பிரசாரத்தில் கலந்து கொண்டார்கள்.
------------------------------------.