சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க
அங்கீகரிக்கப்பட்ட மாற்று
அடையாள ஆவணங்கள்
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – 2026
சட்டமன்ற தேர்தல் நாள் - 23-04-26 .
வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள்
தங்களுடைய வாக்காளர்
அடையாள அட்டை(EPIC)
அல்லது
அங்கீகரிக்கப்பட்ட 12 மாற்று புகைப்பட ஆவணங்களில்
ஏதேனும் ஒன்றைக் காண்பித்து
வாக்களிக்கலாம் என்று
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. தினேஷ்குமார். இஆப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 22. -
தேர்தலில் வாக்களிக்க தேவையான
அங்கீகரிக்கப்பட்ட மாற்று
அடையாள ஆவணங்கள்
1. வாக்காளர் அடையாள அட்டை.
2. ஆதார் அட்டை,
3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி
அடையாள அட்டை.
4. வங்கி அல்லது அஞ்சல் கணக்கு புத்தகங்கள்
(வங்கி- அஞ்சல் அலுவலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டது).
5. மருத்துவக் காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
(மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது).
6. ஓட்டுநர் உரிமம்.
7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.
8. ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது).
9. இந்திய கடவுச்சீட்டு.
10. ஓய்வூதிய ஆவணம்
(புகைப்படத்துடன் கூடியது).
11. மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட
பொது நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை.
12. அலுவலக அடையாள அட்டை (பாராளுமன்ற சட்டமன்றப் பேரவை / சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது).
13. இயலாமைக்கான தனித்துவமான அட்டை
(இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்டது).
இவற்றில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்களிக்கலாம் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. தினேஷ்குமார். இஆப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------.
தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா-
---------------------------.