தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
மின்னணு வாக்குப்பதிவு
இயந்திரங்களில்
புகைப்படத்துடன் கூடிய
வேட்பாளர்கள் பெயர் மற்றும்
சின்னம் பொருத்தும் பணிகளை
ஓசூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் பொது பார்வையாளர்
திரு.பண்வே ராகுல் துக்காராம்
இ.ஆ.ப.
அவர்கள்,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப.
ஆகியோர் (16.04.2026) நேரில்
பார்வையிட்டு ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஏப். 16. -
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மற்றும் சூளகிரி
வட்டாட்சியர் அலுவலகங்கள்,
ஓசூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில்,
வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படவுள்ள
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்
புகைப்படத்துடன் கூடிய
வேட்பாளர்கள் பெயர் மற்றும்
சின்னம் பொருத்தும் பணிகளை
ஓசூர் மற்றும் தளி சட்டமன்ற தொகுதி
தேர்தல் பொது பார்வையாளர்
திரு.பண்வே ராகுல் துக்காராம் இ.ஆ.ப.
அவர்கள்,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
ஆகியோர் (16.04.2026) நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடுசட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
51. ஊத்தங்கரை (தனி),
52 பர்கூர்,
53, கிருஷ்ணகிரி,
54. வேப்பனஹள்ளி,
55. ஓசூர்
56. தளி
ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளில்
போட்டியிடும் வேட்பாளர்களின்
பட்டியல் இறுதி செய்யப்பட்டு,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை
சரிப்பார்க்கும் கருவிகளின்
(EVM VVAPT)
இரண்டாம் கட்ட சமவாய்ப்புக்கு
உட்படுத்தப்பட்டு
தேர்வு செய்யப்பட்ட பின்னர்,
வாக்குச்சாவடி வாரியாக,
இருப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகள் உட்பட
தேர்தல் நடத்தும் அலுவலர் /
உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர் நிலையில்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகள் தயார்படுத்தப்படுகின்றன.
வாக்குப்பதிவுக் கருவியில்
வாக்குச் சீட்டைப் பொருத்துதல்,
கட்டுப்பாட்டுக் கருவியில்
வேட்பாளர்களின் பெயர்களை அமைத்தல்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை
சரிப்பார்க்கும் கருவியில்
சின்னங்களைப் பதிவேற்றுதல்
போன்ற பணிகளும்
மேற்கொள்ளப்படுகின்றன.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகளைத்
தயார்படுத்துவது குறித்த
விரிவான அறிவுறுத்தல்கள்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றை இந்தியத் தேர்தல் ஆணையத்தின்
https//www.eci.gov.in/evm.vvpat
என்ற இணையதளத்தில்
தெரிந்துகொள்ளலாம்.
51 ஊத்தங்கரை (தனி),
52 பர்கூர்,
53. கிருஷ்ணகிரி,
54. வேப்பனஹள்ளி
55. ஓசூர்
56. தளி
சட்டமன்ற தொகுதிகளில்
பயன்படுத்தப்படவுள்ள
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகளைத்
தயார்படுத்தும் பணிகள்
சம்பந்தப்பட்ட
தேர்தல் நடத்தும் அலுவலர்களால்
16.04.2026 முதல் 17.04.2026 வரை
அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கீழ்க்கண்ட இடங்களில் வைத்து
நடைபெறுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகளைத்
தயார்படுத்தும் பணியைக்
கண்காணிப்பதற்கு,
போட்டியிடும் அனைத்து வேட்பாளர்கள், தாங்களாகவே நேரில் வருகை புரிந்து
அல்லது
தங்கள் பிரதிநிதிகளை நியமிக்க
வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
அதன்படி, போட்டியிடும் வேட்பாளர்கள்
மற்றும்
அவர்களது தேர்தல் முகவர்கள்,
இப்பணியின்போது உடனிருந்தனர்.
அவர்கள் சமவாய்ப்புக்கு
உட்படுத்துதல் முறையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட
5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகளில்
1000 வாக்குகளைப் பதிவு செய்து,
மாதிரி வாக்குபதிவு நடத்தியதுடன்,
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவி சீட்டுகளின்
எண்ணிக்கையை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முடிவுகளுடன்
ஒப்பிட்டு சரிபார்த்தனர்.
மாதிரி வாக்குப்பதிவிற்கு
375 (125 CU, 125-BU 125. VVPAT)
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகள்
பயன்படுத்தப்பட்டன.
125.000 எண்ணிக்கையிலான வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும்
VVPAT கருவியிலுள்ள
சீட்டுகள் எண்ணப்பட்டு
கட்டுப்பாட்டுக் கருவியின் எண்ணிக்கையுடன் சரிபார்க்கப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்
மற்றும்
வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிப்பார்க்கும் கருவிகளைத்
தயார்படுத்தும் பணி முடிந்ததும்,
இந்த இயந்திரங்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட
இருப்பு வைப்பு மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின்படி
பாதுகாப்பு அறையில்
இருப்பில் வைக்கப்படும்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள்
விநியோகிக்கப்படும் நாளில்
போட்டியிடும் வேட்பாளர்கள்
அவர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், காணொளிப் பதிவுடன்
பாதுகாப்பு அறை திறக்கப்படும்
மற்றும் மூடப்படும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு. அ.சாதனைக்குறள்.
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகமது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திருமதி. ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப,
(ஓசூர்)
திரு.நா.ஷாஜகான்
(கிருஷ்ணகிரி),
திருமதி.கீதா ராணி
(வேப்பனஹள்ளி),
வட்டாட்சியர்கள்
திரு.ரமேஷ் (கிருஷ்ணகிரி)
திரு.ரமேஷ் (சூளகிரி),
திரு.குண சிவா (ஓசூர்)
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா"
----------------------------------------.