100% வாக்குப்பதிவு வலியுறுத்தி
மாபெரும் விழிப்புணர்வு
நடைபயண பேரணி
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
தேர்தலில் 100 சதவிகிதம்
வாக்குப்பதிவு வலியுறுத்தி
சுமார் 2,500 நபர்கள் பங்கு பெற்ற
மாபெரும் விழிப்புணர்வு
நடைபயண பேரணி
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள்
கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ஏப்ரல் 23- அன்று
அனைத்து வாக்காளர்களும்
தங்களது இடது ஆள்காட்டி விரலில்
மை இருப்பதை
உறுதி செய்ய வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் வேண்டுகோள்.
கிருஷ்ணகிரி. ஏப். 18. -
மாபெரும் விழிப்புணர்வு
நடைபயண பேரணி
(Pinkk-Inkk RunN),
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில்,
"தேர்தல் திருவிழா
தமிழகத்தின் பெருவிழா"
என்ற தலைப்பின் கீழ்,
100 சதவிகிதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி
மாவட்ட நிர்வாகத்துடன்
பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷ்னல்
மற்றும்
டாக்டர் மூன்ஸ் சாரிடபுள் அறக்கட்டளை
இணைந்து
சுமார் 2,500 நபர்கள் பங்கு பெற்ற
மாபெரும் விழிப்புணர்வு
நடைபயண பேரணியை
(Pinkk-Inkk RunN),
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (18.04.2026) கொடியசைத்து
துவக்கி வைத்து நடைபயணத்தில் கலந்துக்கொண்டார்.
இப்பேரணிக்கு
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை
அவர்கள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்-2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,
கையெழுத்து இயக்கம்,
உறுதிமொழி,
விழிப்புணர்வு பேரணி,
ஒட்டுவில்லைகள்,
எல்.இ.டி. வாகனம் மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பு,
இருசக்கர வாகன பேரணி,
கோலப்போட்டி,
பேச்சுப்போட்டி,
ஓவியப்போட்டிகள்,
செல்பி பாயிண்ட்,
விழிப்புணர்வு முத்திரை,
சிறுதானிய விதைகள் கொண்டு
தேர்தல் விழிப்புணர்வு வாசகம்,
விவசாயிகள் கலந்து
கொண்ட டிராக்டர்,
மாட்டுவண்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்களின் பிரச்சார பேரணிகள்,
சிலம்பாட்டம்,
வாக்காளர்கள் விழிப்புணர்வு பாடல்
உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
2,500 நபர்கள் பங்கு பெற்ற
மாபெரும் விழிப்புணர்வு
நடைபயண பேரணி
அதனைத்தொடர்ந்து
இன்று (18.04.2026) கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில்,
மாவட்ட நிர்வாகம், பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷ்னல் மற்றும்
டாக்டர் மூன்ஸ் சாரிடபுள் அறக்கட்டளை
சார்பாக, தொண்டு நிறுவன பிரதிநிதிகள்,
மாணவ மாணவியர்கள்,
வணிகர் சங்க பிரதிநிதிகள்,
பொதுமக்கள் என
சுமார் 2,500 நபர்கள் பங்கு பெற்ற மாபெரும் விழிப்புணர்வு நடைபயண பேரணி
(Pinkk Inkk RunN) நடைபெற்றது.
இப்பேரணியானது
மாவட்ட விளையாட்டு அரங்கில் துவங்கி,
ராயக்கோட்டை சாலை,
புதிய பேருந்து நிலையம்,
பழையபேட்டை டி.பி.சாலை,
காந்திசிலை,
பழையபேட்டை நகர பேருந்து நிலையம்,
தர்மராஜாகோயில் சாலை,
பெங்களூர் சாலை,
லண்டன்பேட்டை,
சாலை வழியாக சுமார் 10.கி.மீட்டர்
தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டு
மாவட்ட விளையாட்டு
அரங்கில் நிறைவடைந்தது.
எனவே பொதுமக்கள்
நியாயமாக,
நேர்மையாக,
மனசாட்சி படி
வாக்களிப்பதற்கு உண்டான
தேர்தலை வலியுத்தும் விதமாக
இந்த மாபெரும் நடைபயண நிகழ்ச்சி
இன்று நடைபெற்றது.
ஏப்ரல் 23- அன்று அனைத்து
வாக்காளர்களும் தங்களது
இடது ஆள்காட்டி
விரலில் மை இருப்பதை
உறுதி செய்ய வேண்டும்.
நீங்கள் மட்டும்மல்லாது
உங்கள் உறவினர்கள்,
நண்பர்களை
வாக்குச்சாவடிக்கு அழைத்து சென்று
வாக்களிக்க உறுதி செய்ய வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
உறுதிமொழி
முன்னதாக,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தலைமையில்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து
அனைவரும் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.
மேலும் நடைபயணம் மேற்கொள்வதற்கு
முன்னதாக ஸ்ரீ மியூசிக் சார்பாக
நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்,
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அலுவலர்
திரு.அமிர்பாஷா,
துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.ராமசந்திரன்,
ஊடக மைய பொறுப்பு அலுவலர்
திரு.சு.மோகன்,
மாவட்ட விளையாட்டு அலுவலர்
திரு.நடராஜ முருகன்,
பிசினஸ் நெட்வொர்க் இன்டர்நேஷ்னல் ஒருங்கிணைப்பாளர்கள்
டாக்டர்.முன்வாரி பத்மநாபன்,
திரு.பத்மநாபன் கணபதி,
திரு.எஸ்வத் பத்மநாபன்,
திரு.சீனிவாசன்,
திரு.தெ.கவியரசு,
திரு.ஆனந்தராமன்,
திரு.டார் வினோத்,
திரு.நாராயணமூர்த்தி,
திரு.அருண்,
திரு.ரகுநாதன்,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திரு.உமாசங்கர்,
திரு.சரவணன்,
தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்
திருமதி.புவனேஷ்வரி
மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகள்
மாணவ மாணவியர்கள், பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
----------------------------------------.