மாவட்ட ஆட்சித்தலைவர்
அறிவுரையின்படி
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் –
அங்கன்வாடி மையங்களில்
தூய்மைபடுத்தும் பணி தீவிரம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
பங்கனஹள்ளி ஊராட்சி கூலியம் கிராமம்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில்
தூய்மை செய்யும் பணியை
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி. ஜுன். 3. –
சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
பங்கனஹள்ளி ஊராட்சி
கூலியம் கிராமத்தில் உள்ள
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
வளாகத்தில நடைபெற்ற
தூய்மை செய்யும் பணியை
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
நடப்புக்கல்வியாண்டுக்கான பள்ளிகள்
ஜுன் 4-ம் தேதியன்று
தொடங்குவதை முன்னிட்டு
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு. ச. தினேஷ்குமார்.இஆப.
அவர்கள் மற்றும்
திட்ட இயக்குநர்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
ஆகியோர் அறிவுரையின்படி
சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மூலமாக
பள்ளி வகுப்பறைகள்,
பள்ளி வளாகங்கள்
அங்கன்வாடி மைய வளாகங்களில்
தூய்மைப்படுத்தும் பணிகள்
மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பாக சூளகிரி ஊராட்சி ஒன்றியம்,
பங்கனஹள்ளி ஊராட்சி,
கூலியம் கிராமம் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி வளாகத்தில்
மே 30-ம் தேதியன்று நடைபெற்ற
தூய்மை செய்யும் பணியை
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி. R.கலா.
திருமதி. விஜயா.
ஆகியோர் நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தனர்.
---------------------------------------.