இந்தியாவின்
கவனத்தையே ஈர்த்த திட்டம்.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
மக்களுக்கு திட்டங்களை
வாரி வழங்கும் அரசு
திராவிட மாடல் அரசு
----கம்பம் பெ.செல்வேந்திரன்
Ex.M.P. பேச்சு.
சூப்பர் ஸ்டார்
தேர்தல் அறிக்கை
நமது முதலமைச்சரின்
திமுக தேர்தல் அறிக்கை தான்
இந்த தேர்தலில்
சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையாகும்.
திமுக ஆட்சியின் திட்டங்களைப்பற்றி
மக்களிடம் எடுத்துச்சொன்னாலே
தேர்தலில் சுலபமாக வெற்றி பெறலாம்.
-----
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா பேச்சு
ஒசூர். ஏப். 12. –
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும் என்று
ஆதரவு தெரிவித்து
ஒசூர் ராம்நகரில் மாபெரும் பொதுக்கூட்டம்
நடைபெற்றது.
தலைமை
இந்த கூட்டத்திற்கு
மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும்
ஒசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ்
தலைமை வகித்தார்.
வரவேற்புரை
திமுக மேற்கு மாவட்ட பொருளாளர்
தா. சுகுமாரன்
வரவேற்புரையாற்றினார்.
சிறப்புரை
திமுக தேர்தல் பணிக்குழு தலைவர்
கம்பம் பெ. செல்வேந்திரன்
Ex.MP
அவர்கள் பேசியதாவது,
2021 திமுக தேர்தல் அறக்கையில் கூறப்பட்டவை
505 வாக்குறுதிகள்
அதில் 404 வாக்குறுதிகளை
நிறைவேற்றி இருக்கிறோம்.
மீதமுள்ள வாக்குறுதிகள் 101.
இந்த 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகளை ஒன்றிய அரசின் ஒத்துழைப்போடுதான் நிறைவேற்ற முடியும்.
வழக்கம் போல் ஒன்றிய அரசு ஒத்துழைப்பு தரவில்லை.
இந்த 37 வாக்குறுதிகள்
ஒன்றிய அரசு காரணமாக
நிலுவையில் நிற்கிறது.
அதுபோக மீதமுள்ள
64 வாக்குறுதிகள் அந்த பகுதி மக்களின்
எதிர்ப்பின் காரணமாக
நிலுவையில் நிற்கிறது.
நாங்கள் எத்தனை திட்டங்களை
நிறைவேற்றி இருக்கிறோம் என்று
கேள்வி கேட்கும் எதிர்கட்சியினருக்கு
புள்ளி விவரங்களோடு சொல்லி இருக்கிறேன்.
விடியல் பயணம் திட்டம்
இந்த திட்டம் பெண்களுக்கான
ஒரு பயனுள்ள திட்டம்.
இந்த ஒசூர் பகுதி தாய்மார்களுக்கு இந்த திட்டம் அதிக பயனை தந்துள்ளது என நான் நினைக்கிறேன்.
விடியல் பயணம் திட்டத்தினால் பெண்களுக்கு
ஒரு மாதத்திற்கு ரூ.888 மிச்சமாகிறது.
இந்த ஒரு திட்டத்தில் தமிழ்நாடு முழுக்க
54லட்சம் மகளிர் பயணித்துள்ளனர்.
இந்த திட்டத்தில்
20 லட்சம் திருநங்கைகள்
பயணித்துள்ளனர்.
22லட்சம் மாற்றுத்திறனாளிகள்
பயணித்துள்ளனர்.
காலை உணவுதிட்டம்
எங்கள் முதலமைச்சர் கொண்டு வந்த
மகத்தான திட்டம்.
நீதிக்கட்சி ஆட்சியில் சென்னையில் தான் முதன்முதலில் மதிய உணவு திட்டம்
கொண்டு வரப்பட்டது.
அதனுடைய நீட்சி தான்
மதிய உணவு திட்டம்,
காலை உணவு திட்டம் எல்லாம்.
இந்த காலை உணவு திட்டத்தினால்
34,987 அரசுப்பள்ளிகள்,
அரசு உதவிபெறும் பள்ளிகளில்
ஒரு நாளைக்கு
17லட்சத்து 53ஆயிரம்
மாணவர்களுக்கு
காலையில் உணவு
கொடுக்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
இந்த திட்டத்தில் மகளிருக்கு
மாதம் 1000 ரூபாய் தரப்படுகிறது.
நான் மறுபடியும் ஆட்சிக்கு வந்தால்
2000ரூபாய் தருவேன் என்று முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார்.
இந்த திட்டத்தினால் இதுவரை
1கோடியே 31லட்சம் மகளிருக்கு
33ஆயிரம் ரூபாய் போய் சேர்ந்திருக்கிறது.
மகளிர் உரிமை திட்டத்தை
இந்தியாவில் 8 மாநிலங்கள் செயல்படுத்த எடுத்துக்கொண்டார்கள்.
இந்த அளவிற்கு
இந்தியாவின் கவனத்தையே
ஈர்த்த திட்டம் தான்
இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம்.
புதுமைப்பெண் திட்டம்
அரசுப்பள்ளியில் படித்து கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது.
மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால்
1,500ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
என்று முதலமைச்சர்
சொல்லியிருக்கிறார்.
புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகள் மட்டும் மாதம் 4லட்சத்து 83ஆயிரம் பேர்
மாதம் 1000ரூபாய் வாங்குகிறார்கள்.
இதற்கு ரூ.721 கோடி அரசு கொடுக்கிறது.
தமிழ் புதல்வன் திட்டம்
இந்த திட்டத்தில் கல்லூரி படிக்கும்
மாணவர்களுக்கு மாதம் ரூ.1000
அரசு கொடுக்கிறது.
அது இப்பொழுது ரூ.1500 ஆக வழங்கப்படும்
என்று அரசு அறிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தில் 3லட்சத்து 80ஆயிரத்து 467 மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
இந்த திட்டத்திற்கு மட்டும் மாதம் ரூ.38கோடியே 4லட்சத்து 67 ஆயிரம் அரசு கொடுக்கிறது.
இப்படி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
ஒரு குடும்பத்திற்கு மாதம் மாதம் கொடுக்கிற
அரசு எந்த நாட்டிலும் இல்லை.
இப்படி எல்லாருக்கும் எல்லாம்
கிடைக்க வேண்டும் என்பதற்காக
பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி
எல்லா சலுகைகளையும் வாரி வழங்குகிற
அரசு தான் திராவிட மாடல் அரசு.
இவ்வாறு கம்பம் செல்வேந்திரன் பேசினார்.
கிருஷ்ணகிரி மேற்கு
மாவட்ட செயலாளர் மற்றும்
ஒசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ்
அவர்கள் பேசியதாவது,
நமது முதலமைச்சர் கடந்த 5 ஆண்டுகளில்
பல்வேறு மகத்தான திட்டங்களை
கொண்டு வந்து
நிறைவேற்றி உள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள
ஒவ்வொரு குடும்பமும்
ஏதாவது ஒருவகையில் பயன்பெறும்
மகத்தான திட்டங்களை கொண்டு வந்த
ஆட்சி தான் நமது திராவிடமாடல் ஆட்சி.
கடந்த 2021-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டதோ அதில் பெரும்பாலான திட்டங்களை நமது முதலமைச்சர் செயல்படுத்தி சாதனை படைத்திருக்கிறார்.
அந்த திட்டங்களை சொல்ல ஆரம்பித்தால்
ஒரு நாள் முழுவதும்
சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
மகளிர் இலவச பேருந்து திட்டம்
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
பள்ளி குழந்தைகளுக்கு
காலை உணவு திட்டம்
விவசாயிகளுக்கு
இலவச மின்சார திட்டம்
மாணவ, மாணவிகளுக்கு
மேற்படிப்பு படிக்க
மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்.
நான் முதல்வன் திட்டம்
மக்களைத்தேடி மருத்துவம் திட்டம்
இல்லம் தேடி கல்வி திட்டம்
என பல்வேறு மகத்தான திட்டங்களை முதலமைச்சர் செய்து முடித்திருக்கிறார்.
இன்றைக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 முதலமைச்சர் யார் என்று சொன்னால்
அது தமிழகத்தின் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் என்று
சொல்லும் அளவுக்கு
தமிழ்நாட்டில் மகத்தான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு Y.பிரகாஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட
தேர்தல் பொறுப்பாளர்
பார். இளங்கோவன் பேசியதாவது,
திமுக கட்சியில் 50 ஆண்டுகாலமாக
தலைவராக பணியாற்றி
பல வெற்றி தோல்விகளை சந்தித்து,
உடன்பிறப்பே என்று சொல்லி நம்மை உசுப்பிவிட்டு கட்சிப்பணி ஆற்ற வைத்தவர்
தான் தலைவர் கலைஞர் அவர்கள்.
இன்றைக்கு அவரது மகன்
நமது முதலமைச்சர் அவர்கள்
பெரியார் வழியில்
பேரறிஞர் அண்ணா வழியில்,
தலைவர் கலைஞர் வழியில்
ஒரு அற்புத ஆட்சியை
நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதுவரை தமிழக வரலாற்றில் எந்த ஒரு முதலமைச்சரும் செய்யாத திட்டங்களை செய்துள்ளார்.
இந்த தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல்
மக்களுக்கு நல்லது செய்யும் திமுகவா,
அல்லது மக்களை பிரித்து சூழ்ச்சி செய்து
மக்களை அடிமைப்படுத்தும் பாஜக,வுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவா
என்று முடிவு செய்ய வேண்டிய தேர்தலாகும்.
ஒசூர் தொகுதியில் உள்ள தாய்மார்கள், எங்களுடைய வாக்கு உதயசூரியனுக்கு தான்
என உற்சாகமாக கூறுகின்றனர்.
இவ்வாறு பார். இளங்கோவன் பேசினார்.
ஒசூர் திமுக வேட்பாளர்
மேயர் S.A.சத்யா
அவர்கள் பேசியதாவது---
நமது முதலமைச்சரின்
திமுக தேர்தல் அறிக்கை தான்
இந்த தேர்தலில்
சூப்பர் ஸ்டார் தேர்தல் அறிக்கையாகும்.
இந்த ஒசூரிலே கிட்டதட்ட
14 ஆயிரம் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் ஆட்சிக்கு பிறகு ஒரே ஒரு பட்டா கூட அதிமுக ஆட்சியில் வழங்கப்படவில்லை.
ஆனால் இன்றைக்கு பேசிய
அதிமுக வேட்பாளர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள்
இந்த பட்டா செல்லாத பட்டா
என்று சொல்கிறார்.
தமிழக அரசு வழங்கிய பட்டாவை கொச்சைப்படுத்துகிறார்.
பொய்யான தகவலை கூறி
மக்களை திசை திருப்ப பார்க்கிறார்.
ஆகவே இனிமேல்
அவர் பட்டா செல்லாது என்று சொன்னால்
அவர் மீது வழக்கு தொடரப்படும்.
அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர், மின்விசிரி ஆகியவை தற்போது வீட்டில் இவ்லை
ஆனால் திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட
இலவச கேஸ் ஸ்டவ், கலர் டிவி
ஆகியவற்றை மக்கள் இன்றும்
பயன்படுத்தி வருகின்றனர்.
திமுக ஆட்சியில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டால்
அது மக்களின் ஆயுட்காலம் முழுவதும்
அவர்களின் வீட்டில் இருக்கும்.
தமிழக முதல்வர் கொண்டு வந்த
பெண்களுக்கு
இலவச பேருந்து திட்டம்
தமிழகம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
தற்போது இந்தியா முழுவதும்
இலவச பேருந்து திட்டத்தை செயல்படுத்த தொடங்கி உள்ளனர்.
பள்ளி குழந்தைகளுக்கான
காலை உணவு திட்டத்தை
கனடா நாட்டு பிரதமர் பாராட்டுகிறார்.
உலகத்தலைவர்கள் பாராட்டுகிறார்கள்.
ஐ.நா சபை பாராட்டுகிறது.
இதுபோன்ற ஒரு திட்டத்தை
அதிமுக ஆட்சியில்
கொண்டு வரப்பட்டுள்ளதா
என்று சொன்னால் இல்லை.
ஆகவே அவர்களுக்கு திட்டங்களைப்பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லை.
திமுக ஆட்சியின் திட்டங்களைப்பற்றி
மக்களிடம் எடுத்துச்சொன்னாலே தேர்தலில் வெற்றி
பெறுவது சுலபம்.
திமுக தலைவராக பொறுப்பேற்றப்பிறகு
தான் கண்ட தேர்தல்களில் எல்லாம்
வெற்றிபெற்ற ஒரே தலைவர்
முதலமைச்சர் மு.க.ஸ்டலின் அவர்கள்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் பொறுப்பேற்ற பிறகு
ஒரு தேர்தலிலும் வெற்றி பெறவில்லை.
ஒரு பக்கம் அனைத்து தேர்தல்களிலும்
வெற்றி கண்ட ஒரு தலைவர்
மறுபக்கம் தேர்தல்களில்
வெற்றி காணாத ஒரு தலைவர்
இவர்களுக்கு இடையே தான் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
2026 தேர்தலிலும் திமுக தலைவர்
நமது முதலமைச்சரே வெற்றி பெறுவார்.
என்பது உறுதி.
இவ்வாறு திமுக வேட்பாளர்
மேயர் S,A,சத்யா பேசினார்.
இந்த கூட்டத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்
மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
-------------------------------------.