தேர்தல் நாளில்
ஊதியத்துடன் கூடிய
பொது விடுமுறை
சட்டமன்ற பொதுத்தேர்தல்
தமிழ்நாட்டில் 23.042028 அன்றும்,
மேற்கு வங்கத்தில் 23.04.2026 மற்றும்
20.04.2026 ஆகிய நாட்களில்
நடைபெறுவதையொட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
தமிழ்நாடு மற்றும்
மேற்குவங்க மாநில தொழிலாளர்களுக்கும்
ஊதியத்துடன் கூடிய
பொது விடுமுறை அளிக்காத
நிறுவனங்களைப் பற்றிய புகார்களை
மாவட்ட கட்டுப்பாட்டு அறையின்
தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 16. –
சட்டமன்ற பொதுத்தேர்தல்
தமிழ்நாட்டில் 23.042028 அன்றும்,
மேற்கு வங்கத்தில் 23.04.2026 மற்றும்
20.04.2026 ஆகிய நாட்களில்
நடைபெறுவதையொட்டி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து வகையான நிறுவனங்களில் பணிபுரியும் தமிழ்நாடு மற்றும்
மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த
அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை
அளிக்க வேண்டும்.
பொது விடுமுறை அளிக்காத
நிறுவனங்களைப் பற்றிய புகார்களை
தொழிலாளர் நலத்துறை
மாவட்ட கட்டுப்பாட்டு அறையின்
தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் சட்டமன்ற
பொதுத்தேர்தல் 2026
வரும் 23.ஆம் தேதியும்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும்
29-ஆம் தேதியன்றும்
சட்டமன்ற பொதுத்தேர்தல்
நடைபெறவுள்ளது.
1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவம்
சட்டத்தின்படியும்,
தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படியும்,
100 சதவீத வாக்குப்பதிவை
உறுதி செய்ய ஏதுவாக
தேர்தல் தினத்தன்று
ஊதியத்துடன் கூடிய விடுமுறை
அளிக்கப்பட வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து வகையான
நிறுவனங்களில் பணிபுரியும்
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்த அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும்
ஊதியத்துடன் கூடிய பொதுவிடுமுறை
அளிக்க வேண்டும்.
அதனடிப்படையில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகள்,
தொழில் நிறுவனங்கள்,
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்
மற்றும்
அனைத்து கடைகள்,
வர்த்தக நிறுவனங்கள்,
மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள்
பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள்,
உணவு நிறுவனங்கள்,
தோட்ட நிறுவனங்கள் மற்றும்
அனைத்து பொதுத்துறை
நிறுவனங்களில் பணிபுரியும்
தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தினக் கூலி தற்காலிக மற்றும்
ஒப்பந்த தொழிலாளர்கள்
உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும்
தேர்தலில் வாக்கை செலுத்த ஏதுவாக
சம்பளத்துடன் கூடிய ஒருநாள்
விடுமுறையை அளிக்க வேண்டும்.
தேர்தல் நாளில் தொழிலாளர்களுக்கு
பொது விடுமுறை
அளிக்காத நிறுவனங்களைப் பற்றிய
புகார்களை தொழிலாளர் நலத்துறை
மாவட்ட கட்டுப்பாட்டு அறையின்
தொலைபேசி
(கட்டுப்பாட்டு அறை-
04343-230520
திரு.ந.மாயவன்,
தொழிலாளர் துணை ஆய்வாளர்
9715366345
திரு.தா.செந்தில்குமார்.
முத்திரை ஆய்வாளர்
9442413438.
தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
தேர்தல் திருவிழா-
தமிழ்நாட்டின் பெருவிழா-
---------------------------------------.