கெலமங்கலம்
ஸ்ரீ பட்டாளம்மன் கோவில்
தேரோட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் நகரில் அமைந்துள்ள
300 ஆண்டுகள் பழமைவாய்ந்த
பிரசித்திபெற்ற
கிராம தேவதை அருள்மிகு
ஸ்ரீ பட்டாளம்மன் கோவில்
தேர் திருவிழா தேரோட்டம்
9 கிராம மக்களுடன்
3 மாநில பக்தர்கள் இணைந்து
தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு.
தேன்கனிக்கோட்டை. மே. 20. –
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் நகரில் அமைந்துள்ள
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பிரசித்திபெற்ற கிராமதேவதை
அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன்
தேர்த் திருவிழா தேரோட்டம் –
வெகு சிறப்பாக நடைபெற்றது.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பிரசித்தி பெற்ற கிராமதேவதை
ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில்
கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் நகரில்
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த
பிரசித்தி பெற்ற கிராமதேவதை
ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில்
அமைந்துள்ளது.
இந்த கோயிலில் ஆண்டுதோறும்
வைகாசி மாதத்தில்
9 கிராம மக்களின் சார்பில்
தேர்த்திருவிழா சிறப்பாக
கொண்டாடப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் மே 18-ம் தேதி முதல்
மே 20-ம் தேதி வரை தேர்த்திருவிழா கொண்டாடப்பட்டது.
18-05-2026. – திங்கட்கிழமை
தேர்த்திருவிழாவை முன்னிட்டு மே 18-ம் தேதியன்று அதிகாலை 5மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதைதொடர்ந்து 9 மணிக்கு 9 கிராமத்தினரால் தீபாராதனையும்,
அம்மனுக்கு பூ அலங்காரம் நடைபெற்றது.
இரவு 8மணிக்கு குருச்சேத்திரம் நாடகம் நடைபெற்றது.
19-05-2026.- செவ்வாய்க்கிழமை
தேரோட்டம்
காலை 8 மணிக்கு 9 கிராமத்தினரால்
ஸ்ரீபட்டாளம்மனுக்கு மடித்தேர் நடைபெற்றது.
கெலமங்கலம் நாவிதர் சங்கத்தின் மூலமாக வாத்தியகோஷ்டி நடைபெற்றது.
இரவு 8மணிக்கு இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இந்த தேர்த்திருவிழா
தேரோட்டம்
கெலமங்கலம், ஜுபி, தொட்டேகானப்பள்ளி,
செட்டிப்பள்ளி, குந்துமாரணப்பள்ளி, ஜக்கேரி
உட்பட 9 கிராம மக்கள் சார்பில் நடைபெற்றன.
படையல்
அம்மனுக்கு நேர்த்திக் கடனாக
சுமார் 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாக்கள்
வெட்டி படையல் இட்டு
வழிபாடுகள் நடைபெற்றன.
வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில்
ஸ்ரீபட்டாளம்மன் எழுந்தருளி
நகரின் முக்கிய வீதிகளின்
வழியாக பவனி வந்து
பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அன்னதானம்
தேரோட்டத்தை முன்னிட்டு
நகரின் பல இடங்களில்
அன்னதானம், நீர்மோர்,
வழங்கப்பட்டது.
தேர்த்திருவிழா ஏற்பாடுகளை
தேர்த்திருவிழா கமிட்டி தலைவர்
கே.சி.சென்னபசப்பா.
என்.சிவப்பிரகாஷ்
மற்றும் தேர் கமிட்டி உறுப்பினர்கள்
சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த தேராட்டம் விழாவில்
வட்டாட்சியர் வேலு
மற்றும் வருவாய் துறை அதிகாரிகள்
பங்கேற்றனர்.
பாதுகாப்பு பணி
டிஎஸ்பி அருண் ராஜ்
தலைமையில்
200க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதில் தேர்த்திருவிழா கமிட்டி மற்றும்
ஒன்பது கிராம மக்கள் மற்றும்
தமிழ்நாடு,
கர்நாடகா,
ஆந்திரா,
ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த
ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
--------------------------------------------------.