கிருஷ்ணகிரி மாவட்டம்
பிற்படுத்தப்பட்டோர் /
மிகப் பிற்படுத்தப்பட்டோர் /
சீர்மரபினர்
நல மாணவர் / மாணவியர்களுக்கென
செயல்பட்டு வரும் 47 விடுதிகளில்
பள்ளி, கல்லூரி மாணவ/
மாணவியர்கள் சேர்ந்து
அரசின் சலுகைகளை பெற்று
பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 01. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர் /
மிகப் பிற்படுத்தப்பட்டோர் /
சீர்மரபினர் நல மாணவர் /
மாணவியர்களுக்கென
மொத்தம் 47 விடுதிகள்
செயல்பட்டு வருகின்றன.
இந்த விடுதிகளில் பள்ளி கல்லூரி
மாணவ/ மாணவியர்கள் சேர்ந்து
அரசின் சலுகைகளை பெற்று
பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு அரசால்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர் /
மிகப் பிற்படுத்தப்பட்டோர் /
சீர்மரபினர்
நல மாணவர் / மாணவியர்களுக்கென
கீழ்க்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
2) பள்ளி விடுதிகளில்
4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை
பயில்கின்ற மாணவர் /மாணவியர்களும்,
கல்லுாரி விடுதிகளில்
பட்டப்படிப்பு,
பட்ட மேற்படிப்பு ஐ.டி.ஐ மற்றும்
பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும்
மாணவ/மாணவியர் சேரத்
தகுதியுடையவர்கள் ஆவர்.
3) விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் பின்வரும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
அனைத்து விடுதி மாணவ/
மாணவியர்களுக்கு
மூன்று வேளை உணவு
மற்றும்
தங்கும் வசதியும்
அளிக்கப்படும்.
4-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை
பயிலும் மாணவ/மாணவியருக்கு
4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும்.
10-ஆம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பு
பயிலும் மாணவ / மாணவியருக்கு
கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு
NEET/JEE
நுழைவுத் தேர்வுக்கான
வினா வங்கி நூல்கள்,
சிறப்பு வழிகாட்டிகள் மற்றும்
வினா வங்கி நூல்கள்
வழங்கப்படும்.
4) விடுதிகளில் மாணவ/மாணவியர்கள்
சேர்க்கைக்கான தகுதிகள்
பெற்றோர் /பாதுகாவலரது
ஆண்டு வருமானம்
ரூ.2,00,000/-க்கு
மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும்
கல்வி நிலையத்தின் தொலைவு
குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல்
இருக்க வேண்டும்.
இந்த தூர விதி
மாணவியருக்கு பொருந்தாது.
5) தகுதியுடைய மாணவ/மாணவியர்
விண்ணப்பங்களைச்
சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது
மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகத்தில் உள்ள
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர்
நல அலுவலகத்திலிருந்தோ
இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
6) பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள்
பள்ளி விடுதிகளை பொறுத்தவரை
சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர் / காப்பாளினியிடம் அல்லது
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினர் நல அலுவலகத்தில்
18.06.2026-க்குள்ளும்,
கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை
சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர்
காப்பாளினியிடம் அல்லது
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்-
சிறுபான்மையினர் நல அலுலகத்தில்
15.07.2026 -க்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
மாணவ / மாணவியர்கள்
விண்ணப்பிக்கும் பொழுது
பெற்றோரது ஆண்டு வருமானம்
குறித்த சான்றிதழ்கள் ஏதும்
அளிக்க தேவையில்லை.
விடுதியில் சேரும்போது மட்டும்
இச்சான்றிதழ்களை
அளித்தால் போதுமானது.
7) தமிழ்நாட்டில் உள்ள
ஒவ்வொரு விடுதியிலும்
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின்
குழந்தைகளுக்கென தனியே
5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
எனவே பள்ளி கல்லூரி மாணவ/ மாணவியர்கள்
அரசின் இச்சலுகைகளை
பெற்று பயனடையலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------------.