கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனஹள்ளி தொகுதியில்
தமிழக வெற்றிக் கழகம்
வேட்பாளர் எஸ்.ஆர். சம்பங்கி
வேட்புமனு தாக்கல்:
"மாற்றத்தை விரும்பும் மக்கள்"
பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை
சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
எங்கள் வெற்றி பிரகாசமாக உள்ளது.
என வேட்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி பேட்டி.
சூளகிரி. ஏப்ரல். 04. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில்
தமிழக வெற்றி கழகம் (TVK)
சார்பில் போட்டியிடும்
வேட்பாளர் எஸ்.ஆர். சம்பங்கி
வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக,
சூளகிரி அருகே உள்ள ரவுண்டானாவில் இருந்து ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் ஊர்வலமாக வந்து
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி. கீதா ராணி
அவர்களிடம் வேட்புமனு மனு
தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம்
TVK வேட்பாளர்
எஸ்.ஆர். சம்பங்கி,
கூறியதாவது,
தனக்கு போட்டியிட வாய்ப்பளித்த
TVK கட்சி தலைவர் விஜய்
மற்றும்
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்,
செங்கோட்டையன் ஆகியோருக்குத் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வேப்பனஹள்ளி தொகுதியை
வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே
தனது முதல் இலக்கு என்றும்,
தொகுதியில் உள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் ஆய்வு செய்து
மக்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்யப்போவதாகவும் உறுதி அளித்தார்.
தொகுதி முழுவதும்
சுற்றுப்பயணம் செய்தபோது
பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் கட்சிக்கும், தலைவருக்கும்
சிறப்பான வரவேற்பு
அளிப்பதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக இளைஞர்களின் ஆதரவு
தங்களுக்குப் பெரும் பலமாக
இருப்பதாகக் குறிப்பிட்டார்.
வெற்றி நிச்சயம்
எங்கள் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்க்கும்போதே
வேப்பனஹள்ளி தொகுதியில் தமிழக வெற்றி கழகம் நிச்சயம் வெற்றி பெறும்
என்ற நம்பிக்கை உள்ளது
என அவர் கூறினார்.
எங்கள் கட்சியைப் பொறுத்தவரை
எங்களுக்குத் தலைவர் தான் முக்கியம்.
மற்றவர்கள் அவர்களின் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்கள்,
நாங்கள் எங்கள் கொள்கைப்படி போட்டியிடுகிறோம்.
எங்களுக்கு என்றும் 'அம்மா' தான் குரு"
என்று குறிப்பிட்டார்.
திமுக, அதிமுக போன்ற
பாரம்பரியக் கட்சிகள் இருந்தாலும்,
மக்கள் தற்போது ஒரு பெரிய மாற்றத்தை விரும்புவதாகவும்,
அந்த மாற்றமாகத் தமிழக வெற்றி கழகம்
இருக்கும் என்றும்
அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வேப்பனஹள்ளி தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, சாலை வசதிகள் மற்றும் வனப்பகுதிகளில் நிலவும் யானைகள் பிரச்சனை போன்றவற்றுக்குத் தான் வெற்றி பெற்ற பிறகு உரிய முறையில் தீர்வு காணப் போவதாக
எஸ்.ஆர். சம்பங்கி உறுதியளித்தார்.
-------------------------------------.