கிருஷ்ணகிரி மாவட்டம்,
சூளகிரி வட்டம் மற்றும் உள்வட்டம்,
சென்னப்பள்ளி – சின்னாறு அருகே
இருசக்கர வாகனம் மீது லாரி மோதி
தலையில் காயமடைந்தவரை மீட்டு
முதலுதவி செய்து காப்பாற்றிய
மாவட்ட ஆட்சித்தலைவர்.
மேல் சிகிச்சைக்கு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணகிரி. மே. 29. –
கிருஷ்ணகிரி மாவட்டம்,
பர்கூர் அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்தியப்பா(வயது50).
விவசாயி. இவர் நேற்று பிற்பகல்
4.30 மணியளவில் இருசக்கரவாகனத்தில்
சூளகிரி வட்டம், சென்னப்பள்ளி தரப்பு,
சின்னாறு வளைவு அருகில்
சென்று கொண்டிருந்த போது
அந்த வழியாக கிருஷ்ணகிரி நோக்கி சென்று
கொண்டிருந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.
இந்த விபத்தில் பத்தியப்பாவுக்கு
தலையில் காயம் ஏற்பட்டது.
அப்போது அந்த வழியாக
சென்று கொண்டிருந்த
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப.
அவர்கள்,
தனது வாகனத்தை உடனடியாக நிறுத்தி
இறங்கிச் சென்று காயம் அடைந்தவருக்கு
முதல் உதவி செய்தார்.
பின்பு மேல் சிகிச்சைக்காக
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம்
அனுப்பி வைத்தார்.
இந்த விபத்து சம்பந்தமாக
சூளகிரி காவல் நிலையத்தினர்
விசாரணை மேற்கொண்டு
வருகின்றனர்.
---------------------------------.