தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் -2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட
வாக்குச்சாவடி மையங்களுக்கு
அனுப்பப்படவுள்ள படிவங்கள்,
எழுதுப்பொருட்களை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி. ஏப். 20. –
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம்,
பர்கூர் வட்டாட்சியர் அலுவலகம்,
சூளகிரி வட்டாட்சியர் அலுவலகம்
மற்றும்
தேன்கனிக்கோட்டை
வட்டாட்சியர் அலுவலகம்
ஆகிய இடங்களில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
ஆறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
வாக்குசாவடி மையங்களில்
வாக்குப்பதிவின் போது
பயன்படுத்தப்படஉள்ள
படிவங்கள், எழுதுப்பொருட்கள்
உள்ளிட்ட பொருட்களை பிரித்து
தயார் செய்யும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் (20.04.2026) நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி,
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் 2026
வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட
2,093 வாக்குச்சாவடி மையங்களுக்கு
வாக்குப்பதிவின் போது பயன்படுத்த
முத்திரைகள்,
முகவரிச் சீட்டுகள்,
அழியா மை,
எழுதுபொருட்கள்,
வாக்குப்பதிவுக் கூண்டு,
பாலித்தீன் விரிப்புகள்,
அச்சிடப்பட்ட பொருட்கள்,
படிவங்கள்,
உறைகள்,
வாக்கு பதிவு செய்யும் இடத்திற்கு
தேவையான மறைவிட தடுப்புகள்
உள்ளிட்ட பொருட்கள்
தயார் நிலையில் உள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்,
தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள
அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள்
தபால் வாக்கு செலுத்தும் பணிகளை
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது,
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திரு.நா.ஷாஜகான்
(கிருஷ்ணகிரி),
திருமதி.அபிநயா
(பர்கூர்),
வட்டாட்சியர்
திரு.சின்னசாமி
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்
உடன் இருந்தனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
-----------------------------------------.