தென்மேற்கு பருவமழை
முன்னேற்பாடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
தென்மேற்கு பருவமழை குறித்து
முன்னேற்பாடு மற்றும் தயார்நிலை பணிகளை
அனைத்து துறை அலுவலர்களும்
ஒருங்கிணைந்து திறன்பட
செயல்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் அறிவுரை.
கிருஷ்ணகிரி. மே. 15. –
தென்மேற்கு பருவமழை
ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்,
வருவாய் மற்றும் பேரிடர்
மேலாண்மைத்துறை சார்பாக,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரை
தென்மேற்கு பருவ காற்றினால்
மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால்,
மழை வெள்ளம் போன்ற
இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக
முன்னேற்பாடுகள் மற்றும்
தயார்நிலை பணிகள் குறித்து
வருவாய் துறை,
காவல் துறை,
தீயணைப்புத்துறை,
ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித்துறை,
மருத்துவத்துறை,
கால்நடைபராமரிப்புத்துறை
உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (15.05.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற
ஜூன் முதல் செப்டம்பர் 2026 வரை
தென்மேற்கு பருவ காற்றினால்
மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மழை, வெள்ளம் போன்ற
இயற்கை இடர்பாடுகளை தடுக்க
சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை
கொண்டு முன்னேற்பாடுகள் மற்றும்
தயார்நிலை ஆய்வுக் கூட்டம்
இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள கிருஷ்ணகிரி / ஒசூர் வருவாய் கோட்ட அளவிலும், அனைத்து வட்ட அளவிலும் பல்துறை அலுவலர்களைக் கொண்டு ஆய்வுக் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
ஏற்கனவே பருவமழையினால்
அதிக பாதிப்பு அடைய கூடிய பகுதிகள்
43 Vulnerable Area கண்டறியப்பட்டு அதில்
52 தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அம்முகாம்களில்
தங்கும் அறை,
மின் சாதனங்கள்,
கழிப்பிட வசதி,
குடிநீர் வசதி,
ஜெனரேட்டர் வசதி
போன்ற அடிப்படை வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வுகள் மேற்கொண்டு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.
நீர்நிலைகளில் உடைப்பு மற்றும் விரிசல் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்ய தேவையான சரக்கு, மணல் போன்ற பொருட்களை முன்கூட்டியே சேகரித்து வைத்தல் வேண்டும்.
தண்ணீர் செல்வதற்கு தடையாக உள்ள
நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றிட அறிவுறுத்தப்பட்டது.
தற்போதுள்ள நீர் நிலைகளில்
தூர்வார நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும்.
வெள்ள அபாயம் ஏற்படும் ஆறுகளின் கரையோரங்களில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களுக்கு முன்கூட்டியே முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கவும்,
நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டால் அதை உடனடியாக சீர்செய்ய கிரேன் போன்ற வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
மரம் வெட்டும் இயந்திரங்களின் பட்டியல் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
நெடுஞ்சாலையில் உள்ள பாலங்களில் உட்புறம் மற்றும் வெளிபுறங்களில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் தொற்று நோயால் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்க வைக்கப்படும் பள்ளி வளாகங்களுக்குள் கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டும். பள்ளி வகுப்பு தரைகளை லைசால் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகளை குறிப்பிட்ட காலங்களில் சுத்தம் செய்திட அறிவுறுத்தப்பட்டது.
அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் தேங்காமல் தூர்வாரி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் குடிநீர் தேக்கங்களை சுத்தம் செய்ய வேண்டும்.
கழிவு நீர் கால்வாய்கள் இல்லாத தெருக்களின் ஓரங்களில் கால்வாய்கள் வெட்டி தெருக்களில் கழிவுநீர் தேங்கா வண்ணம் நடவடிக்கை எடுக்கவும், மழைக்காலங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்கிடவும், புயல் மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை பொது மக்களுக்கு உடன் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கால்வாய்களை தூர்வார உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், கால்நடைத்துறையினர் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் செய்து தேவையான மருந்துகளை இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கால்நடை தீவனங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும். மின்சார வாரியத்தினர் 24×7 கால அமைப்பில் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு அவசர கால கட்டுப்பாட்டு சேவை மையங்களை உருவாக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும், எதிர்வரும் தென்மேற்கு பருவமழையினை அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறன்பட செயல்படுத்த துறை அனைத்துத் அலுவலர்களுக்கும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
திட்ட இயக்குநர்
திருமதி.கவிதா,
ஓசூர் மாநகராட்சி ஆணையாளர்
திரு.முகம்மது ஷபீர் ஆலம் இ.ஆ.ப.,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர்
திரு.ஷாஜகான்,
பேரிடர் மேலாண்மைத்துறை
வட்டாட்சியர்
திரு.வெங்கடேசன்
மற்றும் வருவாய் துறை,
காவல் துறை, தீயணைப்புத்துறை,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
-----------------------------------------.