கிருஷ்ணகிரி மாவட்டம்
சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் உள்ள
கீரனப்பள்ளி சாமான பள்ளி கிராமத்தில்
அமைந்துள்ள பழமை வாய்ந்த
பிரசித்தி பெற்ற
வீரபத்திர சுவாமி கோயில் திருவிழா
மேளதாளங்களோடு மாவிளக்கு ஊர்வலம்
வீரகாசி நடனம் ஆடி
அக்னி குண்டத்தில் பிரவேசம்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சூளகிரி. மே. 30. –
வீரபத்திர சுவாமி கோயில் திருவிழா
சூளகிரி உத்தனப்பள்ளி சாலையில் உள்ள
கீரனப்பள்ளி சாமான பள்ளி
கிராமத்தில் அமைந்துள்ள
புராதானமான, பழமை வாய்ந்த,
பிரசித்தி பெற்ற
வீரபத்திர சுவாமி கோயில்
திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு
வீரபத்திர சுவாமிக்கு
பால் அபிஷேகம்,
பன்னீர் அபிஷேகம்,
பஞ்சாமிர்த அபிஷேகம்
உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள்
மற்றும்
வண்ணமலர்களால் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்து.
வேத பண்டிதர்கள் கூடி வேதங்கள் முழங்க
சிறப்பு ஓமங்கள்,
கங்கா பூஜை,
கோ பூஜை
உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும்
தீபாராதனை செய்து
பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம்
வழங்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில்
வீரபத்திரசுவாமி எழுந்தருளி
பக்தர்களுக்கு
அருள் பாலித்தார்.
மாவிளக்கு பூஜை
மேள தாளங்களோடு
மாவிளக்கு ஊர்வலமாக
எடுத்து வரப்பட்டு சுவாமிக்கு
பூஜைகள் நடைபெற்றது.
அக்னி குண்டம்
வீரபத்திர சுவாமி கோயில் அருகில்
அமைக்கப்பட்டிருந்த அக்னிகுண்டத்தில்
பக்தர்கள் வீரகாசி நடனம் ஆடி
அக்னி குண்டத்தில்
பிரவேசம் நடைபெற்றது.
இந்த திருவிழாவில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
அரோகரா அரோகரா என்று
சிவ நாமத்தை கூறி பக்தியுடன்
கலந்து கொண்டனர்.
-----------------------------------.