தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் -2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வாக்குசாவடி மையத்திற்கு சென்று
வாக்களிக்க இயலாத
85-வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு
அவர்களது விருப்பத்தின் அடிப்படையில்
தகுதியுள்ளவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே
தபால் வாக்கு மூலம் வாக்களிக்க
14.04.2026 மற்றும் 15.04.2026 ஆகிய
இருநாட்களில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஏப். 13. –
தமிழ்நாடு சட்டமன்ற
தேர்தல் -2026-ஐ முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வாக்குசாவடி மையத்திற்கு சென்று
வாக்களிக்க இயலாத
85-வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு
அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் தகுதியுள்ளவர்களுக்கு
வீட்டிலிருந்தபடியே
தபால் வாக்கு மூலம் வாக்களிக்க
14.04.2026 மற்றும் 15.04.2026
ஆகிய இருநாட்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்-2026,
23.04.2026 அன்று நடைபெற உள்ளதையடுத்து வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாத
85 வயதுக்கு மேற்பட்டவர்கள்
மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
தங்களது வாக்குகளை விருப்பத்தின் மூலம்
தபால் மூலம் செலுத்தலாம் என
இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு
தபால் வாக்கிற்கான
படிவம் "12டி (12D)"
வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
85 வயதுக்கு மேற்பட்டவர்களில்
2443 வாக்காளர்களும்
மாற்றுத்திறனாளிகளில்
1224 வாக்காளர்களும்
அஞ்சல் முறையில் வாக்களிக்க
விருப்பம் தெரிவித்தன் பேரில்
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட
ஆறு சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்களால்
மேற்கண்ட படிவங்கள்
கூராய்வு செய்யப்பட்டத்தில்
85 வயதுக்கு மேற்பட்டவர்களில்
2441 வாக்காளர்களும்
மாற்றுத்திறனாளிகளில்
1190 வாக்காளர்களும்
வாக்களிக்க தகுதியானவர்களாக
உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கண்ட தகுதியான
வாக்காளர்களுக்கு அவர்களது
வீட்டிற்கே சென்று
அஞ்சல் வாக்கு மூலம்
வாக்களிக்க 6 (ஆறு) சட்டமன்ற
தொகுதிகளுக்கும் சேர்த்து
4 பேர் கொண்ட
74 வாக்குபதிவு குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது
14.04.2026 மற்றும் 15.04.2026
ஆகிய இரண்டு நாட்களில்
வாக்காளர்களின் வீட்டிற்கு வருகைபுரிந்து
வாக்குகளை பதிவு செய்யும் பணியினை
மேற்கொள்ளவார்கள்.
இந்நிகழ்வு முழுவதும்
காவல்துறை பாதுகாப்புடன்,
வேட்பாளர்களின் பிரதிநிதிகள்
முன்னிலையில் வீடியோ பதிவுடன் மேற்கொள்வார்கள்.
எனவே, விருப்பமனு அளித்த
85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும்
மாற்றுத்திறனாளிகள்
தங்களது இல்லத்திலேயே இருந்து
வாக்குப்பதிவு முழுமையாக நடைபெற
ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், இந்நிகழ்வில் பொதுமக்கள்,
அனைத்து அங்கரிக்கப்பட்ட
அரசியல் கட்சியினர்
சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க
தங்களது முழு ஒத்துழைப்பு
வழங்குமாறு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-------------------------------------.