கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகர திமுக சார்பில்
நவீன தமிழ் நாட்டின் சிற்பி,
முன்னாள் முதலமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞரின்
103 - வது பிறந்தநாள் விழா
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
ஒசூர். ஜூன். 4. -
முத்தமிழறிஞர் கலைஞரின்
103 - வது பிறந்தநாள் விழா
ஓசூர் மாநகர திமுக சார்பில்
நவீன தமிழ்நாட்டின் சிற்பி
முன்னாள் முதலமைச்சர்
முத்தமிழறிஞர் கலைஞரின்
103 - வது பிறந்தநாள் விழா
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கலைஞர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள
அண்ணா சிலையின் பீடத்தில்
கலைஞரின் திருஉருவப்படம் வைக்கப்பட்டு
வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவிற்கு
மாநகர திமுக செயலாளர்
மேயர் S.A.சத்யா.Ex.MLA.
தலைமை வகித்து
அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவப்படத்திற்கு
மாலை அணிவித்து, மலர் தூவி
மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து திமுக நிர்வாகிகள்
மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பிறந்தநாள் விழாவில்
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
மாவட்ட பொருளாளர் சுகுமாரன், தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோரா மணி,பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், பகுதி செயலாளர்கள் துணை மேயர் ஆனந்தய்யா , ராமு மாநகர அவைத் தலைவர் செந்தில்குமார்,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன், மாணவரணி கண்ணன், இலக்கிய அணி சக்திவேல், சுற்றுப்புற சூழல் அணி மாணிக்கவாசகம், மருத்துவர் அணி டாக்டர் பூபேஷ் கார்த்திக், முன்னாள் நகர மன்ற தலைவர் குருசாமி , முன்னாள் நகர செயலாளர் அக்ரோ நாகராஜ்,மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன், மாணவர் அணி ரத்தன்சிங், மாநகர மகளிர் அணி சுனந்தா,மகேஸ்வரி மாவட்ட பிரதிநிதிகள் ஜெய் ஆனந்த், சீனிவாசன், நாகராஜ், மதுக்கரை ராமச்சந்திரன், கருணாநிதி,மற்றும் வார்டு செயலாளர் பிரதிநிதிகள் இளைஞர் அணி மாநகர நிர்வாகிகள் வார்டு செயலாளர் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.