மக்கள் தொடர்பு திட்ட முகாமில்
வருவாய் துறை,
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை
சார்பில் 152 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 2 லட்சத்து
19 ஆயிரத்து 898 மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி. ஜுன். 10. –
தளி ஒன்றியத்தில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டம்,
தேன்கனிக்கோட்டை வட்டம்,
தளி உள்வட்டம்,
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
விளையாட்டு மைதானத்தில்,
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில் இன்று (10.06.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்
முடிந்தபின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
முதல்முறையாக இன்று
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் அறிவுறுத்தலின்படி,
பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி
அரசின் திட்டங்கள் மூலம்
பயன்பெறும் வகையில்
தங்கள் வசிக்கும் இருப்பிடத்திற்கு
அருகிலேயே கோரிக்கை
மனுக்கள் பெறுதல்,
நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
குறித்து துறை சார்ந்த அலுவலர்கள்
விளக்கம் அளிக்கும் வகையில்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்
மாதந்தோறும் நடத்தப்படுகிறது.
இலவச வீட்டுமனை பட்டா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
கடந்த செப்டம்பர் மாதம் 2025 அன்று
சுமார் 85,000 நபர்களுக்கு
இலவச வீட்டுமனைப்பட்டா
வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக
பட்டா வழங்கிய மாவட்டமாக
கிருஷ்ணகிரி திகழ்கிறது.
5 வருடங்களுக்கு மேல்
ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில்
குடியிருப்பவர்களுக்கு
இலவச வீட்டுமனைப்பட்டா
வழங்கப்படும்.
இதுவரை பட்டா வேண்டி விண்ணப்பித்து,
பட்டா கிடைக்காத பட்சத்தில்
தங்கள் பகுதியில் உள்ள
கிராம நிர்வாக அலுவலரை அணுகி
மனு அளித்தால்,
அம்மனுக்களை பரிசீலனை செய்து
இலவச வீட்டுமனை பட்டா வழங்க
உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேப்போல் வீடுகள் கட்டுவதற்கு
பல்வேறு திட்டங்கள் உள்ளது.
மத்திய அரசின் பிரதம மந்திரி
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ்
வீடுகள் கட்டிக்கொள்ளலாம்.
மாநில அரசு ரூ.3.50 லட்சம் வரை
வீடு கட்ட வழங்குகிறது.
ஏற்கனவே 2000 மற்றும் 2021 ம் ஆண்டுகளுக்கு
முன்பு அரசாங்கம், வனத்துறை,
தன்னார்வலர்களால் கட்டிக்
கொடுக்கப்பட்ட வீடுகளில்
தற்போது பழுதடைந்த வீடுகளை
சீரமைப்பதற்காக
முதலமைச்சரின் வீடு மறுகட்டுமான
திட்டத்தின் கீழ்
சீரமைத்துக்கொள்ளலாம்.
பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு
பாரத பிரதமர் ஜென்மன் திட்டத்தின் கீழ்
ரூ.5 லட்சத்து 16 ஆயிரம் வழங்கப்படுகிறது.
அதேப்போல் விவசாயத்திற்கு
மானிய விலையில்
பசுமை குடில் அமைத்தல்,
சொட்டுநீர் பாசனம் அமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்
செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும்,
காய்கறிகள் நடவு,
மலர்கள் சாகுபடி
உள்ளிட்டவை குறித்த வழிகாட்டுதல்கள்
தோட்டக்கலைத்துறை
மூலம் வழங்கப்படுகிறது.
மேலும்,
மகளிர் உரிமைத்தொகை
மிக விரைவில் வழங்கப்படும் என
தமிழக அரசு அறிவித்துள்ளது.
விடுபட்ட மகளிர்கள் மற்றும் புது பயனாளிகள் விண்ணப்பித்தால் தங்களது மனுக்களை பரிசீலனை செய்து மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான
உதவித்தொகை பெற விரும்புபவர்கள்
தங்களது கிராம நிர்வாக அலுவலரை
அணுகலாம்.
அதேபோல... ஊட்டச்சத்து குறைபாடு
உள்ள குழந்தைகளுக்கு
தளி மற்றும் கெலமங்கலம் பகுதிகளில்
உள்ள அங்கன்வாடி மையங்களில்
சத்துமாவு,
ஊட்டச்சத்து பிஸ்கட்
வழங்கப்படுகிறது.
மிகக் குறைவான ஊட்டசத்து
குறைபாடுள்ள குழந்தை மற்றும்
குழந்தையின் தாயை
ஒருவார காலத்திற்கு மருத்துவமனையில்
வைத்து நல்ல ஊட்டச்சத்து மிகுந்த
உணவை வழங்கி ஊட்டச்சத்தை
மேம்படுத்த நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும்
உணவு மற்றும் ஊட்டச்சத்து
பொருட்களை தவறாமல்
பெற்றுக்கொள்ள வேண்டும்.
குழந்தை திருமணம் குறைப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
குழந்தை திருமணத்தை
வெகுவாக குறைக்கப்பட்டு வருகிறது.
பெண் குழந்தைகளை
படிக்க வைக்க வேண்டும்.
ஒரு பெண் குழந்தையை படிக்க
வைப்பது என்பது,
ஒரு கிராமம் படிப்பதற்கு சமமாகும்.
தமிழ்நாடு அரசு பெண் கல்விக்காக
பல்வேறு முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆரம்ப கல்வி முதல் உயர்கல்வி வரை பயில
தமிழ்நாடு அரசு
பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும்
பள்ளிகளில் 6 முதல் 12 -ம் வகுப்பு வரை
படித்து உயர்கல்வி பயிலும்
மாணவிகளுக்கு
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ்
மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது.
எனவே, பெற்றோர்கள் தங்களது பெண் குழந்தைகளை அவர்களின் விருப்பத்திற்கேற்ப படிக்க வைத்து, உயரிய பதவி பெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே, பொதுமக்கள் தங்களது
கோரிக்கைகள் குறித்த மனுக்களுக்கு
உரிய நடவடிக்கை
மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மக்கள் தொடர்பு திட்ட முகாமில்,
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
வருவாய்த்துறை சார்பாக,
114 பயனாளிகளுக்கு
ரூ.97 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில்
இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளும்,
9 பயனாளிகளுக்கு
இருளர் சாதிச் சான்றிதழ்களும்,
சமூக பாதுகாப்பு திட்டம் சார்பாக,
7 பயனாளிகளுக்கு
ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில்
இயற்கை மரண நிவாரணத்தொகைக்கான காசோலைகளும்,
மாவட்ட வழங்கல் துறை சார்பாக,
16 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும்,
வேளாண்மைத்துறை சார்பாக,
5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து
63 ஆயிரத்து 600 மதிப்பில் வேளாண் இடுபொருட்களும்,
தோட்டக்கலைத்துறை சார்பாக,
1 பயனாளிக்கு ரூ.1 லட்சத்து
21 ஆயிரத்து 298 மதிப்பில்
நுண்ணுயிர் பாசன கருவி என
மொத்தம் 152 பயனாளிகளுக்கு
ரூ.1 கோடியே 2 லட்சத்து 19 ஆயிரத்து 898 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்,
ஓசூர் சார் ஆட்சியர்
திருமதி.ஆக்ரிதி சேத்தி இ.ஆ.ப.,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா யாதவ் இ.ஆ.ப.,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட வழங்கல் அலுவலர்
திருமதி.கீதா ராணி,
கூட்டுறவு சங்கங்களின்
இணைப்பதிவாளர்
திரு.நடராஜன்,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர்
திரு.அமீர் பாஷா,
தோட்டக்கலைத்துறை
துணை இயக்குநர்
திருமதி.குணவதி,
வேளாண்மைத்துறை
இணை இயக்குநர் (பொ)
திருமதி.உமா,
மாவட்ட மாற்றுத்திறனாளி
நல அலுவலர்
திரு.முருகேசன்,
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி.சக்தி சுபாஷினி,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
திருமதி.ஏஞ்சலின் பொன்ராணி,
மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ)
திருமதி.ரேகா,
வட்டாட்சியர்
திரு.வேலு,
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்
திருமதி.விஜயா,
திருமதி.லட்சுமி,
மற்றும் வருவாய் ஆய்வாளர்கள்,
கிராம நிர்வாக அலுவலர்கள்
துறை சார்ந்த அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
----------------------------------------------.