தளி தொகுதி
பாஜக வேட்பாளருக்கு
கர்நாடகா முன்னாள் அமைச்சர்
தீவிர வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளிசட்டமன்ற தொகுதி
கெலமங்கலம் மற்றும்
சுற்றியுள்ள கிராமங்களில்
என்.டி.ஏ. கூட்டணி பாஜக வேட்பாளர்
டாக்டர். நாகேஷ் குமார்
அவர்களை ஆதரித்து
கர்நாடக மாநில
எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் அமைச்சர் அசோக்
அவர்கள்
தீவிர வாக்கு சேகரிப்பு.
தேன்கனிக்கோட்டை. ஏப். 20. –
தளிசட்டமன்ற தொகுதி
என்.டி.ஏ கூட்டணி பாஜக வேட்பாளர்
டாக்டர். நாகேஷ் குமார்
அவர்களை ஆதரித்து
கர்நாடக மாநில
எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் அமைச்சர் அசோக்
அவர்கள் கெலமங்கலம் மற்றும்
அதைச் சுற்றியுள்ள கிராமங்களில்
தாமரை சின்னத்துக்கு
வாக்களிக்கும்படி கூறி
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கர்நாடக மாநில
எதிர்க்கட்சித் தலைவர்
முன்னாள் அமைச்சர் அசோக்
அவர்கள்
தளி சட்டமன்ற தொகுதி
பாஜக வேட்பாளர்
டாக்டர். நாகேஷ்குமார்
அவர்களை ஆதரித்து
கெலமங்கலம் மற்றும் அதைச்சுற்றியுள்ள
கார்கண்டப்பள்ளி, அக்கொண்டப்பள்ளி,
குந்துமாரனப்பள்ளி, டி.சமன்பள்ளி,
ஜக்கேரி, அனுசூனை, பைரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர தேர்தல்
பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது கிராம மக்களுடைய கோரிக்கைகளை
கேட்டறிந்த அவர்
மக்களின் கோரிக்கைகள்
உடனடியாக நிறைவேற
இம்முறை பிஜேபி வேட்பாளரை
வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
ஒரு மாற்றம் கொண்டு வர வேண்டும்.
இந்த தொகுதி வளர்ச்சி அடையவும்,
தளி தொகுதியில் தொழிற்சாலைகள் வரவும்
பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்
என கேட்டுக்கொண்டார்.
தளி தொகுதியில் டாட்டா நிறுவனம் இல்லை.
வேப்பனஹள்ளி தொகுதியில் தான் உள்ளது.
இந்த தொழிற்சாலைகளுக்கு
சரியான அடிப்படை வசதிகள் இல்லை.
விவசாயிகளுக்கு போக்குவரத்து வசதி இல்லை.
விவசாயிகளுக்கு போதுமான
தண்ணீர் வசதி இல்லை.
மேலும் இப்பகுதியில்
விவசாய பயன்பாட்டிற்காக
ஏரிகள், குளங்கள், குட்டைகளை
தூர் வாரி ஆழப்படுத்தாமல்
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது.
ஆகவே பாஜக வேட்பாளரை தேர்ந்தெடுத்தால்
விவசாயிகளுக்கும்,
வியாபாரிகளுக்கும்,
பொதுமக்களுக்கும்,
தாய்மார்களுக்கும்
உதவி செய்யும் திட்டங்களை
எல்லாம் பாஜக வேட்பாளர்
தொகுதிக்கு
கொண்டு வந்து செயல்படுத்துவார்.
அவருக்கு ஒரு துணையாக
கர்நாடகாவும் இருக்கும் எனக் கூறி
கிராமம் கிராமமாக சென்று
தளிதொகுதியில் போட்டியிடும்
பாஜக வேட்பாளருக்கு
தாமரை சின்னத்தில்
வாக்களிக்க கூறி
தீவிர வாக்கு சேகரிப்பில்
ஈடுபட்டார்.
கர்நாடகா முன்னாள் அமைச்சர் அசோக் அவர்களின்
பரப்புரையின் போது
முன்னாள் மாவட்ட தலைவர்
நாகராஜ்.
முன்னாள் மாவட்ட துணை தலைவர்
சீனிவாச ரெட்டி.
மாநில பொதுக்குழு உறுப்பினர்
பாலகிருஷ்ணா.
மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள்,
தொண்டர்கள் திரளாக
கலந்து கொண்டனர்.
-----------------------------------.