தேர்தல் திருவிழா
தமிழகத்தின் பெருவிழா
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தல் - 2026ஐ முன்னிட்டு
கிரு\ணகிரி மாவட்டம்
55- ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
ஹோஸ்டியா – ரோட்டரி சங்கம் சார்பில்
தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
ஓசூர் நகரத்தில் மாபெறும் நடைபயணம்.
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
ஒசூர் மாநகராட்சி ஆணையர்
திரு. முகமது ஷபீர் ஆலம் IAS
ஆகியோர் பங்கேற்பு
ஒசூர். ஏப்ரல். 5. –
100% வாக்களிப்பு
விழிப்புணர்வு நடைபயணம்
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026ஐ முன்னிட்டு
ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
பொதுமக்களிடையே தேர்தலில்
100% வாக்களிக்க வலியுறுத்தி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
ஒசூர் ஹோஸ்டியா -
ஒசூர் ரோட்டரி கிளப்
சார்பில்
ஓசூர் நகரத்தில் ஏப்ரல் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று
மாபெறும் நடைபயணம்
நடைபெற்றது .
ஒசூர் ராம்நாயக்கன் ஏரி பூங்கா
வளாகத்தில் நடைபெற்ற
மாபெரும் நடைபயண தொடக்க நிகழ்வில்
சிறப்பு விருந்தினர்களாக
ஒசூர் சார் ஆட்சியர்
திருமதி. ஆக்ரிதி சேத்தி IAS
ஒசூர் மாநகராட்சி ஆணையர்
திரு. முகமது ஷபீர் ஆலம் IAS
ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி,
கொடியசைத்து நடைபயணத்தை
தொடங்கி வைத்தனர்.
இந்த நடைபயணத்தில்
2026 சட்டமன்ற தேர்தலில்
100% வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி
“என்வாக்கு
விற்பனைக்கல்ல”
“நம் வாக்கு
நம் கையில்”
“இந்த மை தேசத்தின் வலிமை
வாக்களிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை”
என்பது உட்பட பல்வேறு
விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியபடி நடைபயணமாக சென்றனர்.
இந்த நடை பயணம்
ஓசூர் ராமநாயக்கன் ஏரி பூங்காவிலிருந்து தொடங்கி
சிஷ்யா பள்ளி,
R.C சர்ச்,
ஒசூர் – தேன்கனிக்கோட்டை சாலை,
சார் ஆட்சியர் அலுவலகம்
வழியாக பயணித்து இறுதியில்
ராமநாயக்கன் ஏரி பூங்காவில் முடிவடைந்தது.
இந்த நடைபயணத்தில்
ஓசூர் சார் ஆட்சியர்,
ஓசூர் மாநகராட்சி ஆணையர்,
மாநகராட்சி உதவி ஆணையர்,
ஓசூர் வட்டாட்சியர்,
தேர்தல் விழிப்புணர்வு
ஒருங்கிணைப்பு அலுவலர்,
வருவாய் துறை அலுவலர்கள்,
ஹோஸ்டியா,
ஒசூர் ரோட்டரி சங்கம், JCI
ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
Master Atheletic association உறுப்பினர்கள்
மற்றும்
மாநகராட்சி பணியாளர்கள்
உட்பட சுமார் 600 பேர்
கலந்து கொண்டனர்.
------------------------------------------.