கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகிகள்
ஆலோசனைக் கூட்டம்.
தொழிலாளர்கள் ஆதரவுடன்
ஒசூர் உட்பட மாவட்டத்தில் உள்ள
6 தொகுதிகளிலும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
வெற்றி பெறும் ---
ஐஎன்டியூசி கூட்டத்தில்
ஒசூர் தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா பேச்சு.
ஒசூர் . ஏப். 07. –
ஐஎன்டியூசி மாவட்ட நிர்வாகிகள்
ஆலோசனைக் கூட்டம்
ஒசூர் காமராஜ் காலனியில் உள்ள
ஐஎன்டியூசி அலுவலகத்தில்
ஏப்ரல் 7-ம் தேதியன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு
ஐஎன்டியூசி தேசிய செயலாளர்
திரு. K.A.மனோகரன் Ex.MLA.
தலைமை வகித்தார்.
இதில் ஐஎன்டியூசி மாநிலத்தலைவர்
திரு. ஜெகன்நாதன்,
மாநில பொதுச்செயலாளர்
திரு. களஞ்சியம்,
மாவட்ட பொதுச்செயலாளர்
திரு. ஜி.முனிராஜ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஐஎன்டியூசி கூட்டத்தில்
சிறப்பு விருந்தினராக
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் திரு. S.A. சத்யா
பங்கேற்று பேசியதாவது,
ஒசூர் தொழிலாளர்கள் அதிகமாக
இருக்கும் ஒரு பகுதி.
தொழிலாளர்கள் தான்
வெற்றி தோல்விகளை
நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே நீங்கள் நினைத்தால்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
6 சட்டமன்ற தொகுதிகளையும் வெற்றி பெற்றுவிடலாம்.
காரணம்
ஒசூர், சூளகிரி, தளி, போச்சம்பள்ளி
மற்றும் பல பகுதிகளில் நிறைய தொழிற்சாலைகள் உள்ளது.
ஒரு காலத்தில் ஒசூரில் மட்டுமே
தொழிற்சாலைகள் நிறைந்த
பகுதியாக இருந்தது.
ஆனால் இன்றைக்கு
கிருஷ்ணகிரி மாவட்டமே
தொழிற்சாலைகள் நிறைந்துள்ளது.
தொழிலாளர்கள் ஒன்று கூடினால்
வெற்றி நிச்சயம்
அந்த தொழிற்சாலைகளில்
உள்ள தொழிலாளர்கள்
மற்ற தொழிலாளர்களை சந்தித்து,
நீங்கள் யாருக்கு வாக்களித்தால்
இந்த பகுதிக்கு நல்லது நடக்கும் என்று
கூறும் போது உங்களுடைய
சகதொழிலாளர்கள்
கண்டிப்பாக கேட்பார்கள்.
அதேபோல உங்களுடைய குடும்பங்களில்
மற்றும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம், சொந்தகாரர்கள் என அனைத்து
தரப்பினரின் வாக்குகளையும்
கவருகின்ற ஒரு திறமை
தொழிலாளர்களிடம் உள்ளது.
அதை நீங்கள் திறமையாக செயல்பட்டு வாக்குகளை பெற்றுத்தந்தால்,
தொழிலாளர்கள் ஒன்று கூடி நின்றால்
இந்த 6 சட்டமன்ற தொகுதிகளையும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
வெற்றி பெறும் என்பதில்
எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.
தொழிலாளர்களின் கோரிக்கைகள்
சட்டமன்றத்தில் ஒலிக்கும்
அதேபோல இங்குள்ள தொழிலாளர்களின்
நீண்டநாள் கோரிக்கையாக
ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று
பல வகையில் தொழிலாளர்கள் வேண்டுகோள் வைத்து போராடி வருகின்றனர்.
58 முதல் 60 வயது வரை தனியார் தொழிற்சாலைகளில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு வயது வரம்பை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தொழிலாளர்களின் சார்பில்
ஊத்தங்கரையில்
அண்ணன் குப்புசாமி
அவர்களே போட்டியிடுகிறார்.
ஒசூரில் நான் போட்டியிடுகிறேன்.
கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கை சட்டமன்றத்திலே ஒலிக்கும்.
கண்டிப்பாக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்துக்கு
கொண்டு செலவோம்.
அவர் நிறைவேற்றித்தருவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் போட்டியிடும்
ஒசூர் தொகுதியில்
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்.
அதேபோல
ஊத்தங்கரை தொகுதியில்
கைசின்னத்தில் பெருவாரியாக
வாக்களித்து
அண்ணன் குப்புசாமியை வெற்றி பெறச்செய்யவேண்டும்.
மற்ற தொகுதிகளில் எல்லாம்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்யவேண்டும்.
தொழிலாளர்கள் அனைவரும்
ஒன்றிணைந்து
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு ஒசூர் தொகுதி திமுக வேட்பாளர்
மேயர் திரு. S.A.சத்யா பேசினார்.
இந்த ஐஎன்டியூசி நிர்வாகிகள் கூட்டத்தில் ஊத்தங்கரை தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர்
திரு.ஆர். குப்புசாமி,
காங்கிரஸ் கட்சியின்
முன்னாள் மாவட்டத்தலைவர்
திரு. முரளிதரன்,
காங்கிரஸ் ஒசூர் மாநகர தலைவர்
திரு. தியாகராஜன்,
காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர்
திரு. வீரமுனிராஜ்,
முன்னாள் மாவட்டச்செயலாளர்
திரு. சத்தியமூர்த்தி,
காங்கிரஸ் மகளிர் அணி தலைவி
திருமதி. சரோஜா.
மற்றும் 100-க்கும் மேற்பட்ட
ஐஎன்டியூசி நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.
------------------------------.