தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல், 2026 –
வாக்கு எண்ணிக்கை
குறித்த விவரங்கள்
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச. தினேஷ் குமார், இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 03. –
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி,
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல், 2026-ன்
வாக்குப்பதிவு 23.04.2026 அன்று
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 2093 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.
தொடர்ந்து,
வாக்கு எண்ணிக்கை
04.05.2026 (திங்கள்கிழமை)
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப
கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
79 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்காக சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் வீதம்
ஆறு சட்டமன்ற தொகுதிக்கு
84 மேசைகள் அமைக்கப்பட்டு
கீழ்க்கண்டவாறு வாக்கு எண்ணிக்கை
சுற்றுகள் நடைபெற உள்ளது.
மேலும்,
85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்.
மாற்றுத்திறனாளிகள்,
தேர்தல் பணி மேற்கொள்ளும்
அரசு அலுவலர்கள் மற்றும்
இராணுவத்தில் பணிபுரிபர்களிடமிருந்து
பெறப்பட்ட அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிக்காக
51.ஊத்தங்கரை (தனி),
52.பர்கூர் மற்றும்
56.தளி சட்டமன்ற தொகுதிகளுக்கு
4 மேசைகள் வீதமும்,
53.கிருஷ்ணகிரி,
54.வேப்பனஹள்ளி மற்றும்
55.ஓசூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு
6 மேசைகள் வீதம் என மொத்தமாக
30 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும்
இந்திய தேர்தல் ஆணையத்தால்
நியமனம் செய்யப்பட்டுள்ள
வாக்கு எண்ணிக்கை
மேற்பார்வையாளர்கள்.
06 தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
12 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
தபால் வாக்கு எண்ணிக்கைக்காக
30 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிக்காக
84 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்.
84 நுண்பார்வையாளர்கள் மற்றும்
84 உதவியாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தபால் வாக்குகளை
எண்ணும் பணிக்காக
30 வாக்கு எண்ணிக்கை
மேற்பார்வையாளர்கள்,
30 நுண்பார்வையாளர்கள் மற்றும்
60 உதவியாளர்கள்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர
ETPBS எனப்படும்
இராணுவத்தில் பணிபுரியும்
வாக்காளர்களின்
அஞ்சல் வாக்குகளை
scan செய்யும் பணிக்காக
17 குழுக்கள்
நியமிக்கபட்டுள்ளது.
இவை தவிர
இதர தேர்தல் பணியாளர்கள்,
உதவியாளர்கள்,
தூய்மை பணியாளர்கள்
என சுமார் 640 நபர்கள்.
10 ஒளிப்பதிவாளர்கள் மற்றும்
54 தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில்
சட்டம் மற்றும் ஒழுங்கு
பிரச்சனைகள் நிகழாவண்ணம்
கண்காணிக்கும் பொருட்டு
கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்ப
கல்லூரி வளாகத்திலுள்ள
மூன்று நுழைவாயிலுக்கும்
03 வட்டாட்சியர்கள் சிறப்பு நிர்வாக
நடுவர்களாக நியமித்து
உத்தரவு பிறப்பிக்கப்பட்டு
பணியமர்த்தப்பட உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை மையத்தில்
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது) தலைமையில்
கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு
சட்டமன்ற தொகுதிக்கு
ஒரு வட்டாட்சியர் என மொத்தம்
06 வட்டாட்சியர்கள்
பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்
(Representation of the People Act), 1951 மற்றும்
தேர்தல் நடத்தை விதிகள்
(Conduct of Elections Rules), 1961
ஆகிய சட்டங்களின் கீழ் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யும் பொருட்டு வாக்கு எண்ணும் பணியினை நேரடியாக கண்காணித்திடும் பொருட்டு
தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் சார்பாக
வாக்கு எண்ணிக்கை முகவர்களாக
1193 நபர்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது.
மேலும்,
வாக்கு எண்ணும் மையத்தில் கிருஷ்ணகிரி நகராட்சி சார்பாக
குப்பைத்தொட்டிகள்.
தற்காலிக கழிவறை வசதிகள் மற்றும்
குடிநீர் வசதிகள்
செய்யப்பட்டுள்ளது.
ஆம்புலன்ஸ் ஊர்திகள்,
மருத்துவ பணியாளர்களுடன்
நடமாடும் மருத்துவ வாகன வசதிகள்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் வாகனங்களுடன்
பாதுகாப்பு பணியில் ஈடுபட
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் மைய வாளகத்தில்
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு
01 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
05 துணை காவல் கண்காணிப்பாளர்கள்.
22 காவல் ஆய்வாளர்கள்,
54 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும்
249 காவலர்கள்.
60 ஆயுதப்படை காவலர்கள்,
70 தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மற்றும்
56 மத்திய காவல் படையினர்
என மொத்தமாக
517 காவல்துறையினர்
கண்காணிப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும்,
வாக்கு எண்ணிக்கை நாளன்று
மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு
தொடர்பான பாதுகாப்பு பணிக்காக,
01 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்.
04 துணை காவல் கண்காணிப்பாளர்கள்.
16 காவல் ஆய்வாளர்கள்.
123 உதவி காவல் ஆய்வாளர்கள் மற்றும்
349 காவலர்கள்.
20 ஆயுதப்படை காவலர்கள்,
90 தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மற்றும்
165 ஊர் காவல் படையினர்
என மொத்தமாக
768 காவல்துறையினர்
கண்காணிப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட உள்ளனர் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
--------------------------------------.