மக்கள் தொகை
கணக்கெடுப்பு (2026-2027)
இரண்டு நாள் பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மக்கள் தொகை
கணக்கெடுப்பு (2026-2027)
குறித்து இரண்டு நாள் பயிற்சி முகாம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் (27.04.2026) பங்கேற்பு
கிருஷ்ணகிரி. ஏப். 28. -
கிருஷ்ணகிரி மாவட்ட
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
மக்கள் தொகை
கணக்கெடுப்பு (2026-2027) குறித்து
இரண்டு நாள் பயிற்சியை
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் (27.04.2026) துவக்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய அரசு 2027 ம் ஆண்டில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடத்தப்படும் என
ஜூன் -2025 -ல் அறிவித்தது.
அதன்படி, 2026-2027 -ல்
முதல் கட்டம்
மற்றும்
இரண்டாம் கட்டமாக
மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடைபெற உள்ளது.
அதற்கான முன் சோதனை
தமிழ்நாட்டில்
அஞ்செட்டி வட்டம்,
திருவள்ளூர் மாவட்டம்
ஆர்.கே.பேட் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
மாங்காடு நகராட்சி
ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
இக்கணக்கெடுப்பு பணிகளில்
வீடுகளின் வகைகள்,
வீடுகள் மற்றும் அறைகளின் எண்ணிக்கை,
குடும்ப உறுப்பினர்கள் விபரம்,
குடிநீர் பெறப்படும் விபரங்கள்,
கேஸ் இணைப்பு,
நெட் இணைப்பு,
லேப்டாப்,
கைபேசி விபரங்கள்
உள்ளிட்ட
34 கேள்விகளுக்கான பதில்கள்
சேகரிக்கப்படும்.
இம்மக்கள் தொகை கணக்கெடுப்பு
இந்திய சுதந்திரத்திற்கு பிறகு
8 -வது கணக்கெடுப்பாகும்.
2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள
மக்கள் தொகை கணக்கெடுப்பானது
இந்தியாவின் முதல் முழுமையான
டிஜிட்டல் கணக்கெடுப்பாகும்.
மொபைல் செயலிகளைப் பயன்படுத்தி
தரவுகள் சேகரிக்கப்படுவதுடன்,
டிஜிட்டல் லே-அவுட் வரைபடங்களும்
வரையப்படும்.
இரண்டு நாட்கள்
பயிற்சி முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
நடைபெறுவது குறித்து,
மாவட்டத்திலுள்ள
மாநகராட்சி / நகராட்சி /
பேரூராட்சி / வட்டாட்சியர்
அலுவலக பணியாளர்கள் மற்றும்
தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு
மக்கள் தொகை கணக்கெடுப்பு
தொடர்பான இரண்டு நாள் பயிற்சி
வகுப்புகள் துவக்கி வைக்கப்பட்டது.
இப்பயிற்சியை நன்கு பயன்படுத்தி
நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
எந்தவொரு மக்களும் விடுபடாமல்
தரவுகளை முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில்
மக்கள் தொகை கணக்கெடுப்பு
இணை இயக்குநர்
திரு.ஆர்,வாசுதேவன்,
உதவி இயக்குநர்
திரு.எஸ்.சஜிலால்,
புள்ளியியல் ஆய்வாளர்
திரு.கட்டவெங்கண்ணா,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.எஸ்.கிருஷ்ணன்
மற்றும்
பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர்
திரு.ஜி.வெங்கடேசன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
----------------------------------------.