ஒசூர் சட்டமன்ற தொகுதியில்
கடந்த 5 ஆண்டுகளில்
ரூ.3,500 கோடி மதிப்பில்
வளர்ச்சித்திட்டப்பணிகளை
நமது முதலமைச்சர்
செயல்படுத்தியுள்ளார்.
மீண்டும் இரண்டாவது முறை
ஆட்சிக்கு வந்த உடன்
இல்லத்தரசி திட்டத்தில்
ரூ8000 கூப்பன் உடனடியாக
வழங்க இருக்கிறார்.
ரூ.1000 கலைஞர் மகளிர்
உரிமைத் தொகையை
ரூ.2000 ஆக உயர்த்தி தர இருக்கிறார்.
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
ஆவலப்பள்ளியில் பரப்புரை
ஒசூர். ஏப். 16. –
பூந்தோட்டத்தில் பூப்பறித்து
வாக்கு சேகரித்த
திமுக வேட்பாளர்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள்
ஒசூர் தொகுதிக்குட்பட்ட ஆவலப்பள்ளியில்
ரோஜா பூந்தோட்டத்தில்
பூக்களைப்பறித்து கொடுத்து
அங்கு வேலை செய்யும்
பெண் தொழிலாளர்களிடம்
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேளதாளங்களுடன்
உற்சாக வரவேற்பு
முன்னதாக
ஒசூர் சட்டமன்ற தொகுதி
ஆவலப்பள்ளி பகுதியில்
வாக்கு சேகரிக்க சென்ற
திமுக வேட்பாளர் மேயர் S.A. சத்யா
அவர்களுக்கு
பட்டாசு வெடித்து
மேளதாளங்கள் முழங்க
மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து
ஆரத்தி எடுத்து உற்சாகமாக
வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆவலப்பள்ளியில் கூடியிருந்த தோட்டத்தொழிலாளர்கள் மற்றும்
பொதுமக்களிடையே
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
அவர்கள் பேசியதாவது
அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே
வணக்கத்துக்குரிய வாக்காள பெருமக்களே
திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில்
போட்டியிடுகின்ற எனக்கு
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று
உங்களை அன்போடு
கேட்டுக் கொள்கிறேன்.
நமது முதலமைச்சர்
அவர்கள்
ஒசூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில்
ரூ.3,500 கோடியில் வளர்ச்சித்திட்டப்பணிகளை
செயல்படுத்தியுள்ளார்.
மேலும் பல்வேறு தொழிற்சாலைகளைக்
கொண்டு வந்து ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி உள்ளார்.
திமுக அரசின் மகத்தான திட்டங்களான
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்,
விடியல் பயணம் திட்டம்,
புதுமைப்பெண் திட்டம்,
நான் முதல்வன் திட்டம்,
மக்களைத்தேடி மருத்துவம்,
இல்லம்தேடி கல்வி,
காலை உணவுத்திட்டம்,
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை
செயல்படுத்தி உள்ளார்.
மீண்டும் இரண்டாவது முறையாக
ஆட்சிக்கு வந்ததும்,
இல்லத்தரசி திட்டத்தில்
ரூ.8000 மதிப்புள்ள கூப்பன்
உங்களுக்கு தர இருக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத்
தொகை திட்டத்தில்
ரூ. 2000 ஆக உயர்த்தி தர இருக்கிறார்.
அதேபோல
நான் முதல்வன் திட்டம்,
புதுமைப்பெண் திட்டம்,
தமிழ்ப்புதல்வன் திட்டம்,
என அனைத்து திட்டங்களுக்கும்
ரூ.1000 இருந்ததை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளை முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுபோல எண்ணற்ற திட்டங்களை
கொண்டு வந்து செயல்படுத்த இருக்கிறார்.
ஒசூர் தொகுதியில் போட்டியிடும் எனக்கு
உதயசூரியன் சின்னத்தில்
பெருவாரியாக வாக்களித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும்
என அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறி
திமுக வேட்பாளர்
மேயர் S.A. சத்யா
வாக்கு சேகரித்தார்.
அப்போது திமுக மற்றும்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
கட்சிகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
----------------------------------------.