தமிழக வெற்றிக் கழக ஆட்சி
மூன்று மாதம் கூட நீடிக்காது என
மூத்த அரசியல்வாதியான
முன்னாள் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின்
தெரிவித்திருக்கக் கூடாது –
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநில செயலாளர்
மு.வீரபாண்டியன்.
அவர்கள் கருத்து.
கிருஷ்ணகிரி. ஜுன். 9. –
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(CPI) சார்பில்
கண்டனப் பேரணி -
மாபெரும் ஆர்ப்பாட்டம்
கெலமங்கலத்தில் ஆக்கிரமிப்புகளை
அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடந்த
கண்டன ஆர்ப்பாட்டம், பேரணியில்
மாநிலச் செயலாளர்
திரு. மு.வீரபாண்டியன்
பங்கேற்றார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் பேரூராட்சிப் பகுதிகளில் ஏழை எளிய மக்கள் வசித்து வரும் வீடுகளை இடித்து அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கிய இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் கண்டனப் பேரணியும், பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
கெலமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட
ஜீவா நகர்,
அண்ணா நகர்,
சுல்தான் பேட்டை,
விருப்பாட்சி நகர்
ஆகிய பகுதிகளில்
அரசு அறநிலையத் துறைக்கு
சொந்தமான இடம் மற்றும்
புறம்போக்கு நிலத்தில்
சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்
பல தலைமுறைகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த ஏழை எளிய மக்கள் வசிக்கும்
வீடுகளுக்கு
கெலமங்கலம் பேரூராட்சி
நிர்வாகம் சார்பில்
வீட்டு வரி ரசீது,
கதவு எண்,
குடிநீர் இணைப்பு
மின் இணைப்பு
உள்ளிட்ட அனைத்து அடிப்படை
வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,
இந்த வீடுகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு
நிலத்தில் உள்ளதாகக் கூறி,
அவற்றை இடித்து அப்புறப்படுத்துவதற்காக
இந்து சமய அறநிலையத்துறை மற்றும்
வருவாய்த்துறை சார்பில்
அண்மையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த
அப்பகுதி மக்கள்
மற்றும் அரசியல் கட்சியினர்
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நோட்டீஸ் வழங்கும் நடவடிக்கையைக் கண்டித்து,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
தளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர்
திரு. T. இராமச்சந்திரன்
அவர்கள் தலைமையில்,
கெலமங்கலம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்களும்,
கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டு
வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
சிறப்பு அழைப்பாளராக
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர்
திரு. மு. வீரபாண்டியன்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர்
திரு. எம். லக்குமைய்யா
ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.
இதில் மாநிலச்செயலாளர் பேசியதாவது:
பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும்
சாதாரண ஏழை மக்களின் வீடுகளை
இடித்து அப்புறப்படுத்துவதை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
ஒருபோதும் அனுமதிக்காது.
இந்த செயலை வன்மையாகக்
கண்டிக்கிறோம்.
தமிழக அரசு உடனடியாக
இப்பிரச்சினையில் தலையிட்டு,
ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களது வீடுகளையும் பாதுகாக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்."
என்று கூறினார்.
இதில் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்
திரு. ஜெயராமன்.
நகர செயலாளர்
திரு. மது குமார்.
ஒன்றிய செயலாளர்
திரு. கிருஷ்ணப்பா.
முன்னாள் நகர செயலாளர்,
முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்
திரு. கேவி. நாகராஜ்.
மாதர் சங்க தலைவி
திருமதி. சுந்தரவல்லி,
மற்றும்
திரு. பழனி மாதையன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, வருவாய்த்துறையினர் மற்றும்
காவல் துறையினர்,
அறநிலையத்துறையினர் ஆகியோர்
போராட்டக்காரர்களுடன் அவசர சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
"இப்பிரச்சினை தொடர்பாக
தமிழக அரசிடம் பேசி,
ஏழை மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"
என அதிகாரிகள் தரப்பில்
உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இந்த பேச்சுவார்த்தையில்
ஏ.டி.எஸ்.பி.
திரு. நமச்சிவாயம்.
வட்டாட்சியர்
திரு. வேலு.
துணை ஆணையாளர் தர்மபுரி.
திரு. ராஜா.
மற்றும் காவல்துறை அதிகாரிகள்
வருவாய் துறை அதிகாரிகள்
அறநிலை துறை அதிகாரிகள்
ஆகியோர் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர்
செய்தியாளர்களிடம்
மாநிலச் செயலாளர்
திரு. மு வீரபாண்டியன்
கூறியதாவது,
முன்னாள் முதல்வர்... அவர் தமிழ்நாட்டின் மூத்த தலைவர். பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவம் மிகுந்தவர்.
ஒரு பெரிய ஜனநாயகக் கட்சியின் தலைவர். மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள்
இந்த ஆட்சி மூன்று மாதம் கூட தாங்காது என
கூறியிருக்கக் கூடாது என்பதுதான்
எங்கள் கருத்து.
நாங்க இந்தியா கூட்டணியில் இடதுசாரிகள் அங்கம் வகிக்கிறோம்.
இந்தியா கூட்டணி வலுப்பெற வேண்டும்,
இந்திய நலனுக்காக. கட்சி நலன்களுக்கு அப்பாற்பட்டு, இந்திய நலன்களை முன்னிறுத்துகிற இந்தியா கூட்டணிதான்,
அதில் நாங்கள் இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் இருந்த கூட்டணியில் இருந்த
சில அரசியல் கட்சிகள் ஆட்சியில் அங்கம் வகிக்கிறது,
இடதுசாரிகள் வெளியில் இருந்து நாங்கள் ஆதரவளிக்கிறோம்.
ஒரு கூட்டணியில் இருந்து விலகுகிற பொழுது அல்லது விலகிக் கொள்கிறோம் என்று சொல்லுகிற பொழுது, முறைப்படிதான் நாங்கள் அறிவிக்க வேண்டும்.
போகிற போக்கில் அல்ல. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி கூட்டங்களை கூட்டி, வெளிப்படையாக நாங்கள் எங்கள் அரசியல் முடிவை அறிவிப்போம்.
மக்கள் அளித்த தீர்ப்பை
ஏற்க வேண்டும்
எங்களைப் பொறுத்தவரை,
இப்பொழுது நாங்கள் ஆதரிப்பது என்பது அரசிற்காக.
ஆளுநர் அந்த இடத்தில் அமர்ந்துவிடக் கூடாது,
அது ஜனநாயகத்தைக் கடந்து சென்றுவிடும்.
இன்னொரு தேர்தல்
திணிக்கப்பட்டுவிடக் கூடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக
ஒரு கோடியே 75 லட்சம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
எனவே,
மக்கள் அளித்த அந்தத் தீர்ப்பை
நாம் ஏற்க வேண்டும்,
அதை வழிமொழிய வேண்டும்.
இது போன்ற அரசியல் காரணங்களுக்காக
நாங்கள் ஆதரிக்கிறோமே அன்றி,
தனிப்பட்ட முறையில் கட்சி,
கட்சி நலன் கருதி அதை ஆதரிக்கவில்லை.
கேள்வி...
சார், இன்னும் ஐந்து இடங்களுக்கு இடைத்தேர்தல் வருது சார், திருச்சியும் சேர்த்து. இப்ப வந்தா உங்களுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும்?
நிச்சயமாக அப்பொழுது
மாநிலக் குழு கூட்டப்படும்.
அந்த முடிவு உங்களுக்கு மறக்காமல் சொல்லப்படும்.
கேள்வி...
இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்குமா?
மக்கள் தீர்ப்பளித்திருக்கிறார்கள்.
நாங்கள் வெளியில் இருந்து
ஆதரவளிக்கிறோம்.
அரசு நீடிக்க வேண்டும்,
கொடுத்த வாக்குறுதிகளை
நிறைவேற்ற வேண்டும்,
நாங்கள் வெளியில் இருந்து
மனப்பூர்வமான ஆதரவை தருவோம்....
என அவர் பதிலளித்தார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்
பேரணியின்
பாதுகாப்பு பணியில்
ஏடிஎஸ்பி தலைமையில்
300 காவல் துறையினர்
பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.
-------------------------------------.