கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காக
நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளேன்.
அந்த உரிமையுடன் நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
தமிழ்நாட்டின் உரிமைகளை
திமுக கட்சியால் மட்டுமே காப்பாற்ற முடியும்.
---- ஒசூரில்
திமுக தலைவர்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பரப்புரை.
தமிழ்நாட்டில் திமுக அரசு தொலைநோக்குடன்
திட்டங்களை செயல்படுத்தி வருகிறது
சமூகநீதியை நிலைநாட்டுவதில்...
சுயமரியாதையைக் காப்பதில்...
மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாக திகழ்கிறார்.
--- ஒசூரில்
காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுனகார்கே
பரப்புரை
ஒசூர். ஏப். 19. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் அந்திவாடி
விளையாட்டு மைதானம் அருகில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்
ஏப்ரல் 19-ம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில்
திமுக தலைவர் -
முதல்வர் மு.க.ஸ்டலின்
அவர்கள் மற்றும்
காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுன கார்கே
ஆகியோர்
மதசார்பற்ற முற்போக்கு கட்டணி
கட்சிகளின் வேட்பாளர்களை
ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
வரவேற்புரை
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட
திமுக செயலாளர்
ஒய். பிரகாஷ் எம்எல்ஏ
அனைவரையும் வரவேற்று பேசினார்.
சிறப்புரை
இந்த கூட்டத்தில்
திமுக தலைவர் -
முதல்வர் மு.க.ஸ்டாலின்
மற்றும்
காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுனகார்கே
ஆகியோர்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.
திமுக தலைவர் -
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் பேசும் போது...
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
ஒசூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
மேயர் S.A.சத்யா,
தளி சட்டமன்ற தொகுதி
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்
டி.ராமச்சந்திரன்,
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
பி.எஸ். சீனிவாசன்
பர்கூர் சட்டமன்ற தொகுதி
திமுக வேட்பாளர்
டி.மதியழகன்,
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர்
அ.செல்லக்குமார்,
ஊத்தங்கரைசட்டமன்ற தொகுதி
காங்கிரஸ் வேட்பாளர்
ஆர்.குப்புசாமி
ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேசியதாவது,
தமிழ்நாட்டின் உரிமைகளை
திமுக கட்சியால் மட்டுமே
காப்பாற்ற முடியும்.
திமுக கூட்டணி இந்த அளவு
வலிமையாக இருக்க
மூத்த தலைவரான
மல்லிகார்ஜுன கார்கேவும்
ஒரு காரணம்.
கிருஷ்ணகிரி மாவட்டத்துக்காக
நிறைய திட்டங்களை
நிறைவேற்றி தந்துள்ளேன்.
அந்த உரிமையுடன் நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன்.
சிறிய தொழில் நகரமாக
அறியப்பட்ட ஒசூர்
இன்று உலகப் புகழ் பெற்ற
நகரமாக உள்ளது.
நவீன தொழில் மையமாக
ஒசூர் உருவாகி உள்ளது.
சூளகிரி,
ஒசூர்,
பர்கூர்
ஆகிய இடங்களில்
தொழில் பூங்காக்களை
சிப்காட் தொடங்கி உள்ளது.
ஒசூர் சிப்காட்டில் டாடா உற்பத்தி
விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஒசூரில்
பன்னாட்டு விமான நிலையம்
அமைக்க கோரிக்கை
வைத்து வருகிறோம்.
ஆனால் மத்திய அரசு அதற்கு
தடங்கல் செய்கிறது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பொறாமை எண்ணத்துடன் பாஜக அணுகுகிறது.
இதை தட்டிக் கேட்க முடியாமல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
பிரதமர் மோடி தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றினார்.
அது அரசியல் உரை.
தேர்தல் விதிமுறைகள் அமலில்
உள்ளநிலையில் தேசியக் கொடியின் பின்னணியில் அவர் எதிர்க்கட்சிகளை
திட்டிப்பேசி உள்ளார்.
நாடாளுமன்றத்தில்
இடஒதுக்கீடு மசோதா தோல்வி
அடைந்த பதற்றத்தில் அவர் பேசுகிறார்.
தேர்தல் நேரத்தில்
இந்த சட்டமசோதாவை
கொண்டு வந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தார்.
ஆனால் இப்போது
மகளிர் இடஒதுக்கீட்டை
நம் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
தடுப்பதாகக் கூறுகிறார்.
தேர்தல் நேரத்தில் அவர் ஏவ நினைத்த
அம்பைத் தடுத்துள்ளோம்.
பாஜக கூட்டணியை
நிலைகுலைய வைத்துள்ளோம்.
திமுக அரசின் திட்டங்கள்
தமிழகம் முழுவதும்
சென்றடைந்துள்ளன.
மேலும் தற்போது
திமுக தேர்தல் அறிக்கையிலும்
பல நல்ல திட்டங்களை
அறிவித்துள்ளோம்.
இது வெற்றிக் கூட்டணி.
40 தொகுதிகளிலும் நாடாளுமன்ற
தேர்தலில் வெற்றியைத்தந்தீர்கள்.
இவர்களால் என்ன செய்ய
முடியும் என்றார்கள்.
இப்பாது நாடாளுமன்றத்தில் நாம் செய்து காட்டிவிட்டோம்.
திமுகவை தவிர வேறு யாருக்கு
வாக்களித்தாலும்
அது பாஜகவுக்கு தான் போய் சேரும்.
எனவே பாஜக கூட்டணிக்கு
வாக்களிக்காதீர்கள்.
திமுக அரசால் தான் தமிழகம் காப்பாற்றப்படுகிறது.
மக்களைப்பிரித்து வன்முறையைத் தூண்ட நினைக்கும் பாஜகவை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேசினார்.
இந்த கூட்டத்தில்
காங்கிரஸ் தலைவர்
மல்லிகார்ஜுனகார்கே
பேசியதாவது,
நாங்கள் ஜனநாயகம், நீதி மற்றும் சமத்துவத்துக்காக போராடி வருகிறோம்.
ஆனால் பிரதமர் மோடி மனுஸ்மிருதி
கொள்கையை அமல் படுத்த துடிக்கிறார்.
மோடியின் தத்துவம் பெண்களை அதிகாரத்திலிருந்து தள்ளி வைப்பதே யாகும்.
கடந்த 2023-ல் கொண்டுவரப்பட்ட
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை
ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு
வேலைவாய்ப்பு,
விவசாயிகளின்
வருமானம் இரட்டிப்பு,
விலைவாசி குறைப்பு
என மோடி அளித்த வாக்குறுதிகள்
அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன.
ராகுல்காந்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை
நடைப்பயணம்,
மேற்கொண்டு நாட்டை இணைத்த போது,
பிரதமர் மோடி குகைகளில்
தியானம் செய்வதிலும்,
கங்கையில் நீராடுவதிலும்
மட்டுமே கவனம் செலுத்தினார்.
மு.க.ஸ்டாலின் சித்தாந்தத்தைக் கண்டு
மோடி பயப்படுகிறார்.
நாடு இன்று
ராகுல்காந்தி,
மு.க.ஸ்டாலின்
பின்னால் நிற்கிறது.
சமூகநீதியை நிலைநாட்டுவது,
சுயமரியாதையைக் காப்பது
போன்றவற்றில் மு.க.ஸ்டாலின்
முன்மாதிரியாக திகழ்கிறார்.
தொகுதி மறுசீரமைப்பு
மசோதா விசயத்தில்
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி
நமக்கு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக அரசு
தொலைநோக்குடன் திட்டங்களை
செயல்படுத்தி வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்
இவ்வாறு
காங்கிரஸ் தலைவர் கார்கே
பேசினார்.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில்
போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்கள்
மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
-------------------------------.