கோடை உழவு
நீர்மேலாண்மை உத்திகள்
கலெக்டர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
விவசாயிகள் கீழ்க்கண்ட
வெப்பத்தைத் தாங்கும் பயிர் மேலாண்மை
உத்திகளை பயன்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 7. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
விவசாயிகள் கீழ்க்கண்ட
வெப்பத்தைத் தாங்கும்
பயிர் மேலாண்மை உத்திகளை
பயன்படுத்த வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இஆப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கோடை உழவு கோடை மழையைப்
பயன்படுத்தி சரிவுக்குக் குறுக்காக
நிலத்தை உழவு செய்வதன் மூலம்
மண்ணின் ஈரப்பதத்தைச் சேமிக்கலாம்.
வெப்பத்தைத் தாங்கும் இரகங்கள்:
அதிக வெப்பத்தைத் தாங்கி
வளரக்கூடிய பயிர் இரகங்களைத்
தேர்ந்தெடுக்க வேண்டும்.
பயிர் சுழற்சி மாற்றம்:
வெப்ப அலை வீசும் காலங்களில் (பொதுவாக ஏப்ரல் ஜூன் விதைப்பு நேரத்தை மாற்றுவது அல்லது பயிர் சுழற்சியை மாற்றுவது அவசியம்.
நிலப் போர்வை அல்லது மூடாக்கு:
மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க
காய்ந்த இலைகள், வைக்கோல் பயன்படுத்தி மூடாக்கு போட வேண்டும்.
நிழல் வலைகள்:
பயிர்களை நேரடி சூரிய ஒளியிலிருந்து
பாதுகாக்க நிழல் வலைகளைப்
பயன்படுத்தலாம்.
கயோலின் தெளிப்பு:
5% காயோலின் (Kaolin) கரைசலைத்
தெளிப்பதன் மூலம் இலைகளின் வெப்பநிலையைக் குறைத்து
அதிகப்படியான நீராவிப்போக்கைத்
தடுக்கலாம்.
கடல்பாசிசாறுகள்:
அஸ்கோபில்லம் நோடோசம்
(Ascophyllum nodosum) எனப்படும்
கடல்பாசியிலிருந்து பெறப்படும் உயிர் ஊக்கிகளில் மேனிடால் மற்றும்
பாலிசாக்கரைடுகள் நிறைந்துள்ளன.
இவை பயிர்களில் உள்ள நச்சுத் தனிமங்களை சமநிலைப்படுத்துவதுடன்,
உச்சி வெயில் நேரத்திலும் இலைகளின் வெப்பநிலையை சீராகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றன.
பூசா ஹைட்ரோஜெல் (Pusa Hydrogel)
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால்
(IARI) உருவாக்கப்பட்ட ஒரு உறிஞ்சும்
பாலிமர் ஆகும்.
இது மண்ணில் நீரைச் சேமித்து வைத்து, தாவரங்களுக்குத் தேவைப்படும்போது
மெதுவாக வெளியிடும்
திறன் கொண்டது.
செயல்பாடு: இது தனது எடையை விட
பல மடங்கு அதிக நீரை
உறிஞ்சி சேமிக்கும்.
இதனால் வறட்சி காலங்களிலும்
பயிர்கள் காய்ந்து விடாமல்
வளர உதவுகிறது.
பயன்பாடு: ஒரு ஏக்கருக்கு
சுமார் 1 முதல் 25 கிலோ வரை பயன்படுத்த
பரிந்துரைக்கப்படுகிறது.
இது மண்ணில் ஒரு வருடம் வரை செயல்படும். அதன் பிறகு தானாகவே மட்கிவிடும்.
நன்மைகள்:
நீர்ப்பாசனத் தேவையைக் குறைக்கிறது
(சுமார் 40-50% நீர் சேமிப்பு)
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்
நீரில் கரைந்து வீணாவதைத் தடுக்கிறது.
மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைத்து விளைச்சலை அதிகரிக்கிறது.
வடிவம்: இது பொதுவாக குருணை (Granules) வடிவில் கிடைக்கிறது.
நீர் மேலாண்மை
சொட்டு நீர்ப்பாசனம்:
நீர் இழப்பைக் குறைத்து,
வேர்ப்பகுதியில் நேரடி நீர் வழங்க சொட்டு
நீர்ப்பாசனம் சிறந்தது.
பாசனநேரம்:
நீர் ஆவியாவதைத் தடுக்க
காலை அல்லது மாலை வேளைகளில்
பாசனம் செய்ய வேண்டும்.
தெளிப்பு நீர் பாசனம்:
பயிர்களின் மேல் நீர் தெளிப்பதன் மூலம்
பயிர் சூழலில் வெப்பத்தை
குறைக்கலாம்.
பயிர்களுக்கான தெளிப்பு:
பயிர்களுக்கு வெப்பத்தைத் தாங்க
பிங்க் பிக்மென்டட் மெத்திலோட்ரோபிக் (PPFM.200mlஏக்கர்) தெளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மா மற்றும்
இதர தோட்டக்கலைப் பயிர்களில்
அதிக வெப்பத்தால் ஏற்படும்
பூக்கள் மற்றும் பிஞ்சுகள்
உதிர்வதைத் தவிர்க்க
3% பஞ்சகாவ்யா கரைசலைத் தெளிக்கலாம்.
மல்லிகை:
வெப்பத்தைத் தாங்கி
அதிக மலர்கள் பூக்க
3% பஞ்சகாவ்யா மற்றும்
0.4% ஹ்யூமிக் அமில (Humic acid) கரைசலை
மாதம் ஒருமுறை தெளிக்கலாம்.
தென்னை:
கருந்தலைப் புழுக்களின்
தாக்கத்தைத் தவிர்க்க
ஏக்கருக்கு 2100 பிராக்கனிட் (Braconid) ஒட்டுண்ணிகளை வெளியிடலாம்.
ஒவ்வொரு மரத்திற்கும் நாள் ஒன்றுக்கு
100 லிட்டர் நீர் கிடைப்பதை
உறுதி செய்ய வேண்டும்.
வாழை:
கோடை காற்றால் வாழை மரங்கள்
சாய்வதைத் தடுக்க
5 மாதங்களுக்கு மேலான மரங்களுக்கு
முட்டுக் கொடுக்க வேண்டும்.
மண்ணின் உப்புத் தன்மை
(Salinity Management)
கோடையில் நிலத்தடி
நீர் மட்டம் குறையும் போது
நீரின் உப்புத்தன்மை அதிகரிக்கும்.
இதைத் தவிர்க்க அடிக்கடி
நீர்பாய்ச்சுவதுடன்,
இலைகளின் ஓரங்கள் கருகினால்
தகுந்த நுண்ணூட்டச் சத்துக்களை
வழங்க வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
---------------------------------------.