கிருஷ்ணகிரி மாவட்டம்
தேன்கனிக்கோட்டை வட்டம்
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில்
41 ஆண்டுகள் பணியாற்றி
ஓய்வு பெற்ற
திருமதி. அம்புஜம்மா.
அவர்களுக்கு
பணி நிறைவு பாராட்டு விழா.
தேன்கனிக்கோட்டை. மே. 30. –
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில்
41 ஆண்டுகள் சேவையாற்றி,
பதிவறை எழுத்தராக பணிபுரிந்து
ஓய்வு பெற்ற
திருமதி. அம்புஜம்மா.
அவர்களுக்கு
பணி நிறைவு பாராட்டு விழா
சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில்
41 ஆண்டுகள் பணிபுரிந்து
ஓய்வு பெற்ற
திருமதி. அம்புஜா(RC)
அவர்களின் பணி நிறைவு
பாராட்டு விழாவுக்கு
BDO. திரு. சீனிவாசன்.
தலைமை வகித்தார்.
BDO. திரு. முருகன்.
முன்னிலை வகித்தார்.
BDO. திரு. டேன்சின்.
அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த பாராட்டு விழாவில்
தளி BDO.
திருமதி.லட்சுமி.
அவர்கள் மற்றும்
அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள்,
பொதுமக்கள் என
ஏராளமானவர்கள் பங்கேற்று
பொன்னாடை, மாலை அணிவித்து
நினைவு பரிசுகள் வழங்கி,
அவருடைய சாதனைகளை பாராட்டி
வாழ்த்தி பேசினார்கள்.
திருமதி. அம்புஜம்மா அவர்களை
பாராட்டி பேசும் போது கூறியதாவது,
திருமதி. அம்புஜம்மா அவர்கள்
பணிக்காலத்தில்...
பணி உயர்வு வந்தாலும்
கெலமங்கலத்தில் தான்
பணியாற்ற வேண்டும் என்று
உறுதியாக இருந்தார்.
பொதுமக்கள் BDO அலுவலகம் செல்லும் போது,
அதிகாரிகள் இல்லை என்றாலும்...
அவர்களுக்கு, குறைகளுக்கு தீர்வு காண
எந்த எந்த டேபிள்களுக்கு
செல்ல வேண்டுமோ…
அந்தந்த செக்ஷன்களை காட்டுவார்கள்.
அலுவலகத்தில் வரும் பொதுமக்களை
அன்போடு வரவேற்று
அவர்களுடைய குறைகளை தீர்க்க
உடனுக்குடன் சம்பந்தப்பட்ட
துறை அதிகாரிகளிடம்
அழைத்துச் சென்று தீர்வு காண
உதவி செய்வார்.
திருமதி. அம்புஜம்மா அவர்களுக்கு
அதிகாரிகளிடமும்,
பொதுமக்களிடத்திலும்,
நல்ல பெயர் இருந்தது.
இவ்வாறு அவரை பாராட்டி
வாழ்த்தி பேசினார்கள்.
இந்த பாராட்டு விழாவில்
அனுமார்ந்தபுரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற
திரு. ஜெய்சங்கர்.
அவர்களுக்கும்
பொன்னாடை, மாலை அணிவித்து
நினைவு பரிசுகள் வழங்கினார்கள்.
இந்த விழாவில்
ஊராட்சி செயலாளர்
திரு. ஜெயக்குமார்.
திரு. ராஜா.
திரு. ஜெயராமன்.
திரு. ஸ்ரீனிவாசன்.
திரு. ஸ்ரீதர்.
மற்றும் அலுவலர்கள்
சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்
கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
இந்த பணிநிறைவு பாராட்டு விழாவில்
பத்திரிக்கை துறை நண்பர்
மூத்த பத்திரிகையாளர்
திரு. கே. பி. சிவாபிரகாஷ்.
அவர்கள் கலந்து கொண்டு
வாழ்த்தினார்.
---------------------------------------.