“மா” - முத்தரப்பு
கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
"மா" விலை நிர்ணயம்
செய்வது தொடர்பான
"மா" முத்தரப்பு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி. மே. 19. –
"மாங்கனி விவசாயிகளை பாதுகாப்போம், மாங்கனி விவசாயத்தை போற்றுவோம்"
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
"மா" விலை நிர்ணயம்
செய்வது தொடர்பான
"மா" முத்தரப்பு கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
(19.05.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
"மா" விலை நிர்ணயம்
செய்வது தொடர்பான
"மா" முத்தரப்பு கூட்டம்
இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில்,
"மாங்கனி விவசாயிகளை பாதுகாப்போம், மாங்கனி விவசாயத்தை போற்றுவோம்"
என்ற கூற்றுடன் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளான,
கடந்த மூன்றாண்டு காலமாக
மா விவசாயம் மிகவும் தொய்வடைந்து
வருகின்ற நிலையில்
மா உற்பத்திக்கான விலை நிர்ணயம்
மிகவும் குறைவாக உள்ளதாகவும்
நடப்பாண்டில் இழப்பு அதிகம் உள்ளதால்
அல்போன்ஸா,
தோத்தாபுரி,
செந்தூரா
போன்ற மா வகைகளுக்கு
கொள்முதல் விலையாக
ரூ.18 முதல் ரூ.25 ஆக நிர்ணயம் செய்யவும்,
மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக
கிலோ ஒன்றிற்கு ரூ.5 மானியம் வழங்க
வழிவகை செய்து தரவும்,
மா விவசாயிகளுக்கு உழவு,
பூச்சிமருந்துகள்,
பழத்திற்காக உறை
மானியத்தில் வழங்கிடவும்,
ஆந்திரா,
தெலுங்கானா
கர்நாடகா
அரசாங்கம் போன்று
மத்திய அரசுடன் இணைந்து
மா விவசாயிகளுக்கான
சிறப்பு Price Deficiency Payment System
திட்டம் கொண்டு வரவும்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
உற்பத்தி செய்யப்படும்
அல்போன்ஸா,
தோத்தாபுரி,
செந்தூரா
போன்ற ரகங்களுக்கு
கடந்த ஆண்டை விட கூடுதல் விலை
நிர்ணயம் செய்திடவும்,
மா விவசாயிகள் மற்றும் மாங்கூழ் உற்பத்தியாளர்கள் இணைந்து,
மதிய உணவுத் திட்டத்தின் மூலம்
குழந்தைகளுக்கு மாங்கூழ் வழங்கவும்,
அதேபோல், நியாயவிலைக் கடைகள்
மூலமாகவும் மாங்கூழ் வழங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும் என
கோரிக்கை வைத்தனர்.
அதேப்போல்,
மாங்கூழ் நிறுவனத்தினர் ஒரு வருடத்தில்
மூன்று மாதங்களில் மட்டுமே
பழக்கூழ் உற்பத்திக்காக
தொழிற்சாலைகள் இயங்குவதாகவும்,
பயன்படுத்தப்படாத
இதர ஒன்பது மாதங்களுக்கு
உயர்மின் அழுத்த மின்சார கட்டணத்தினை
ரத்து செய்து தரவும்,
வங்கி கடன் தள்ளுபடி செய்யவும்,
உடனடி மா குளிர்பானங்களில்
தற்போது 8% மட்டுமே மாங்கூழ்
பயன்படுத்துவதை 17-18% மாக வரையறை செய்திடவும்,
ஆந்திர மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும்
மா விற்கு குறைந்தபட்ச விலை
ரூ.10 முதல் 12 ஆகா நிர்ணயிக்கவும்
கோரிக்கை வைத்துள்ளனர்.
விவசாயிகள் மற்றும் பழக்கூழ்
நிறுவனத்தினர் கருத்துகளை
அடிப்படையாக கொண்டு
நடப்பாண்டில் மாவில் ஏற்பட்டுள்ள
மகசூல் இழப்பினை கணக்கீடு செய்திட
குழுக்கள் அமைக்கப்பட்டு,
அதனடிப்படையில் பேரிடர் மேலாண்மை துறையிடம் தெரிவிக்கப்படும்.
மாங்கூழ் நிறுவனத்தாரிடம் விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு
மாவிற்கு உண்டான விலையினை
உத்தேசமாக கிலோவிற்கு
ரூ.10 முதல் ரூ.12 -க்கு குறையாமல்
நிர்ணயம் செய்து கொள்முதல்
செய்திடவும், மானிய திட்டங்களுக்கான
முன்மொழிவுகள் அரசுக்கு உடன் சமர்ப்பிக்க
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஜூன் முதல் வாரத்தில் பழக்கூழ் நிறுவனத்தாரின் ஏற்றுமதி தேவை அடிப்படையில்
உரிய விலை நிர்ணயம் செய்து
கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
வேளாண்மைத்துறை
இணை இயக்குநர்
திரு.காளிமுத்து,
தோட்டக்கலைத்துறை
துணை இயக்குநர்
திருமதி.குணவதி,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (வேளாண்மை)
திருமதி.
பா.ஏஞ்சலின் பொன்ராணி
மற்றும் மா விவசாயிகள், மாங்கூழ் உற்பத்தி நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
-----------------------------------------.