தளி தொகுதியில் பிஜேபி வேட்பாளரின்
பெயரை அறிவித்த உடன்
சிபிஐ வேட்பாளர் டி ராமச்சந்திரன்
வெற்றி பெற்றுவிட்டார்
----- ஒய். பிரகாஷ் எம்எல்ஏ
விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை
நிறுத்தச் சொல்லும்
மத்திய நிதியமைச்சரின் போக்கை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
---மு. வீரபாண்டியன் .
ஒசூர். ஏப். 11. –
கிருஷ்ணகிரி மாவட்டம்
தளி சட்டமன்றத் தொகுதியில்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
சார்பில் போட்டியிடும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
தளி வேட்பாளர்
டி. ராமச்சந்திரன்
அவர்களை
ஆதரித்து, அக்கட்சியின்
மாநிலச் செயலாளர்
மு.வீரபாண்டியன்
மற்றும்
திமுக மேற்கு மாவட்ட செயலாளர்
Y.பிரகாஷ் MLA.
ஆகியோர்
ஏப்ரல் 11-ம் தேதியன்று
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டையில்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநிலச் செயலாளர்
மு.வீரபாண்டியன் கூறியதாவது,
விவசாயிகள் இயற்கையோடு போராடி மற்றவர்களுக்கு வாழ்வளிப்பவர்கள்.
அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பது ஒரு சலுகை அல்ல,
அது அவர்களின் உரிமை மற்றும் ஒரு நாகரிக அரசின் கடமை என்று அவர் வலியுறுத்தினார்.
தமிழக முதல்வர் ஏற்கனவே குறிப்பிட்டது போல, விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை நிறுத்தச் சொல்லும் மத்திய நிதியமைச்சரின் போக்கை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
"உற்பத்தி அதிகரித்தால்
அது நெருக்கடியை உருவாக்குமா?
உற்பத்தி பெருகினால்
மக்களுக்கு குறைந்த விலையில்
அரிசி வழங்கலாமே"
என அவர் கேள்வி எழுப்பினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு
கோடிக்கணக்கில் வரிச் சலுகையும்,
கடன் ரத்துகளும் செய்யும் மத்திய அரசு,
விவசாயிகளின் ஊக்கத்தொகையை மட்டும் நிறுத்தச் சொல்வது ஏன்?
என்றும் அவர் சாடினார்.
திமுக மேற்கு மாவட்ட செயலாளரும்
ஓசூர் MLA ஒய்.பிரகாஷ்
பேசும்போது
இப்போது அறிவித்துள்ள பிஜேபி வேட்பாளர் நாகேஷ் ஐந்தாண்டுகளுக்கு முன்பு
தொகுதிக்கு வந்தவர்,
அதன் பிறகு மக்களை சந்திக்காத வேட்பாளர்.
இந்தத் தேர்தலில் இவர் வேட்பாளராக
அறிவித்த உடனே
டி இராமச்சந்திரன் அமோக வெற்றி
பெற்று விட்டார்.
காரணம் இப் பகுதியிலே
மக்களை சந்தித்து மக்களுடைய குறைகளை கேட்காத வேட்பாளர்
இப்போது திடீரென்று தளி தொகுதி மக்களை சந்திக்க வந்தால் மக்கள் அவர்களுக்கு
சரியான பாடம் புகட்டுவார்கள்.
இந்த தேர்தலில் அவர் படுதோல்வி அடைவார்.
டி இராமச்சந்திரன் தொகுதி மக்களுக்காக
எப்பொழுதும் பணியாற்றி வருகிறார்.
ஆகையால் இம்முறை தளி தொகுதியில் டி.ராமச்சந்திரன் சட்டமன்ற தேர்தலில்
கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில்
75 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.
நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்
இந்த முக்கியமான தேர்தல் நேரத்தில், தேவையில்லாத திரைப்படப் பிரச்சினைகளைக் கிளப்பி மக்களின் கவனத்தை
திசை திருப்ப வேண்டாம் என்று
அவர் கேட்டுக்கொண்டார்.
தளி தொகுதியில்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
மிகப்பெரிய வெற்றியைப் பெறும்
என அவர் தனது பேட்டியின் இறுதியில்
நம்பிக்கை தெரிவித்தார்.
உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்
மாநில பொறுப்பாளரும்
மூத்த தலைவருமான
எம். லகுமையா.
மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
-----------------------------------.