2026-27 -ம் கல்வி ஆண்டிற்கான
RTE - மாணவர் சேர்க்கை
நாள் - 22-05-2026.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
குழந்தைகளுக்கான இலவச மற்றும்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009
(RTE Act) கீழ்
2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான
மாணவர்கள் சேர்க்கை 22-05–2026 அன்று
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ்குமார் இ.ஆ.ப,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. மே. 20. –
குழந்தைகளுக்கான இலவச மற்றும்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
குழந்தைகளுக்கான இலவச மற்றும்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009
(RTE Act) கீழ்
2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான
மாணவர்கள் சேர்க்கை 22- 05–2026 அன்று
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம்,
2009 பிரிவு 12 (1) (c) இன்படி,
அனைத்துச் சிறுபான்மையற்ற
தனியார் சுயநிதிப் பள்ளிகளில்
வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த
பிரிவினரின் குழந்தைகளுக்கு
நுழைவுநிலை வகுப்பில் (LKG / I Std)
குறைந்தபட்சம் 25% இட ஒதுக்கீடு
அடிப்படையில் தகுதியான
விண்ணப்பங்களின் எண்ணிக்கை
மற்றும்
அப்பள்ளியின் 25% ஒதுக்கீட்டில்
நிர்ணயிக்கப்பட்ட இடங்களின்
அடிப்படையிலும்,
நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட
கூடுதலாக இருந்தால் குலுக்கல் முறையில்
22-05-2026 அன்று சேர்க்கைக்கான
மாணாக்கர்களை தெரிவு செய்யப்படும்.
குறைவாக இருப்பின் தகுதியான
அனைத்து விண்ணப்பங்களுக்கும்
சேர்க்கை வழங்கப்படும்.
சேர்க்கைக்கான குலுக்கல் முடிந்த பிறகு,
அன்றைய தினமே பள்ளிக்கு தகுதியுள்ள
ஒரு பிரிவுக்கு ஐந்து மாணாக்கர்கள் என்ற
வீதத்தில் காத்திருப்பு பட்டியலுக்கான
மாணாக்கர்களையும் வரிசை எண்ணிட்டு குலுக்கலில் தெரிந்தெடுக்கப்படும்.
மேலும்,
வாய்ப்பு மறுக்கப்பட்ட
சிறப்பு பிரிவின் கீழ்
வகைப்படுத்தப்பட்டுள்ள
ஆதரவற்றோர் /
HIV ஆல் பாதிக்கப்பட்டவர்
மூன்றாம் பாலினத்தவர் /
துப்புரவு தொழிலாளியின் குழந்தை /
மாற்றுத்திறனாளிகள்
போன்றோரிடமிருந்து பெறப்பட்ட
தகுதியான விண்ணப்பங்களுக்கு
குலுக்கல் நடத்துவதற்கு முன்னேரே
சேர்க்கை வழங்கப்படும்.
எனவே.
குழந்தைகளுக்கான
இலவச மற்றும் கட்டாயக் கல்வி
உரிமைச் சட்டம்.
2009 பிரிவு 12 (1) (C)-இன்படி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
25% ஓதுக்கீட்டின் கீழ்
நிர்ணயிக்கப்பட்டுள்ள
2,713 இடங்களுக்கு
3,397 விண்ணப்பங்கள்
பெறப்பட்டுள்ளன.
இவ்விடங்களுக்கு உரிய பள்ளியில்
22-05-2026 அன்று காலை 10.00 மணிக்கு
குலுக்கல் முறையில் சேர்க்கை தெரிவு செய்யப்படுகிறது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு.ச.தினேஷ் குமார். இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்துள்ளார்.
----------------------------------------------.