தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் -2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட
வாக்குச்சாவடி மையங்களுக்கு,
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
எழுது பொருட்கள் அனுப்பும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஏப். 22. –
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மற்றும்
பர்கூர் வட்டாட்சியர் அலுவலகங்களில்,
வாக்குசாவடி மையங்களில்
வாக்குப்பதிவின் போது
பயன்படுத்தப்பட உள்ள
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,
வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள்
மற்றும் எழுதுப்பொருட்கள்
உள்ளிட்ட பொருட்களை
வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணிகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (22.04.2026) நேரில்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இஆப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின்
உத்தரவின்படி,
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் -2026 வரும்
23.04.2026 அன்று
நடைபெற உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட
2,093 வாக்குச்சாவடி மையங்களுக்கு
2,508 வாக்குச்சீட்டு
பதிவு இயந்திரங்கள் (BU),
2,508 வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு
இயந்திரங்கள் (CU) மற்றும்
2,717 வாக்காளர் பதிவு
சரிபார்க்கும் இயந்திரங்கள் (VVPAT)
என மொத்தம் 7,733 வாக்குப்பதிவு
இயந்திரங்கள்
பயன்படுத்தப்பட உள்ளது.
51.ஊத்தங்கரை (தனி)
சட்டமன்ற தொகுதியில் 32 மண்டலங்களும்,
52.பர்கூர் சட்டமன்ற தொகுதியில்
31 மண்டலங்களும்,
53.கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்
31 மண்டலங்களும்,
54.வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில்
33 மண்டலங்களும்,
55.ஓசூர் சட்டமன்ற தொகுதியில்
45 மண்டலங்களும்,
56.தளி சட்டமன்ற தொகுதியில்
31 மண்டலங்கள்
என மொத்தம் 203 மண்டலங்கள் உள்ளது.
23.04.2026 அன்று நடைபெற உள்ள வாக்குப்பதிவிற்கான
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு இயந்திரங்கள்,
வாக்குப்பதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள்
மற்றும்
எழுதுப்பொருட்களை
மண்டல பொறுப்பு அலுவலர்கள் தலைமையில், காவல் துறை பாதுகாப்புடன் வாகனங்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து,
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள்,
கிருஷ்ணகிரி அரசு
பல்தொழில்நுட்ப கல்லூரியில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தின்
ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள
வாக்கு எண்ணும் மையத்தின்
முன்னேற்பாடு பணிகளை நேரில்
பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
திரு.பெ.தங்கதுரை,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திரு.நா.ஷாஜகான் (கிருஷ்ணகிரி),
திருமதி.அபிநயா (பர்கூர்),
பொதுப்பணித்துறை
செயற்பொறியாளர்
திரு.செந்தில் குமார்,
துணை காவல் கண்காணிப்பாளர்
திரு.தனசேகரன்,
மாவட்ட ஆட்சியரின்
உதவியாளர் (தேர்தல்)
திருமதி.ஹெலன் ராணி,
வட்டாட்சியர்கள்
திரு.ரமேஷ் (கிருஷ்ணகிரி)
திரு.சின்னசாமி (பர்கூர்),
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு.உமாசங்கர்
மற்றும் வட்டாட்சியர்கள் (தேர்தல்),
துறை சார்ந்த அலுவலர்கள்
உடன் இருந்தனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டின் பெருவிழா"
----------------------------------------.