தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல் - 2026
நடைபெறுவதை முன்னிட்டு
வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும்
10,048 வாக்குச்சாவடி
அலுவலர்களுக்கு
வாக்குப்பதிவு குறித்து
இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப,
அவர்கள் நேரில் ஆய்வு.
கிருஷ்ணகிரி. ஏப். 12. –
தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத்தேர்தல்- 2026
நடைபெறுவதை முன்னிட்டு,
கிருஷ்ணகிரி மாவட்டம்,
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
ஊத்தங்கரை அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,
பர்கூர் அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி
மற்றும்
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட
கிருஷ்ணகிரி அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளி
ஆகிய இடங்களில்,
சட்டமன்ற பொதுத்தேர்தலில்
பணியாற்ற உள்ள
10,048 வாக்குச்சாவடி நிலைய
தலைமை அலுவலர்கள்
மற்றும்
வாக்குச்சாவடி நிலை-1,
நிலை -2, நிலை-3 அலுவலர்கள்
ஆகிய அலுவலர்களுக்கு
நடைபெறும் இரண்டாம் கட்ட
பயிற்சி வகுப்புகளை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (12.04.2026)
நேரில் பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 -ல்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
தேர்தல் பணியில் ஈடுபடும்
10,048 வாக்குச்சாவடி நிலைய
தலைமை அலுவலர்கள்
மற்றும்
வாக்குச்சாவடி நிலை-1,
நிலை -2, நிலை-3 அலுவலர்கள்
தேர்தல் பயிற்சி வகுப்பில்
கலந்துக்கொள்ள கணினி மூலம்
சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு
பணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இன்று (12.04.2026)
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
6 சட்டமன்ற தொகுதிகளான,
51-ஊத்தங்கரை
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,
வாக்குச்சாவடி நிலை -1, நிலை - 2 மற்றும்
நிலை 3 அலுவலர்கள்
என 1,532 அலுவலர்களுக்கு
ஊத்தங்கரை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
52-பர்கூர்
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை -1, நிலை-2 மற்றும்
நிலை- 3 அலுவலர்கள்
என 1,556 அலுவலர்களுக்கு
பர்கூர் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியிலும்,
53-கிருஷ்ணகிரி
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை 1, நிலை- 2 மற்றும்
நிலை- 3 அலுவலர்கள்
என 1,632 அலுவலர்களுக்கு
கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
54-வேப்பனஹள்ளி
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை- 1, நிலை 2 மற்றும்
நிலை- 3 அலுவலர்கள்
என 1,648 அலுவலர்களுக்கு
சூளகிரி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளியிலும்,
55-ஒசூர்
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை- 1, நிலை- 2 மற்றும்
நிலை- 3 அலுவலர்கள்
என 2,140 அலுவலர்களுக்கு
ஒசூர் அரசு பெண்கள்
மேல்நிலைப்பள்ளியிலும்,
56-தளி
சட்டமன்ற தொகுதியில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள்,
வாக்குச்சாவடி நிலை-1, நிலை- 2 மற்றும்
நிலை -3 அலுவலர்கள்
என 1,540 அலுவலர்களுக்கு
தேன்கனிக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
என மொத்தம் 6 இடங்களில்
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை. 1, நிலை- 2 மற்றும்
நிலை-3 அலுவலர்கள்
என 10,048 அலுவலர்களுக்கு
இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி
தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சி, இன்று (12.04.2026)
வாக்கு சாவடி முதன்மை அலுவலர்கள்,
வாக்குச்சாவடி அலுவலர்கள் நிலை-1,
நிலை-2 மற்றும் நிலை-3
ஆகிய அலுவலர்களுக்கும் நடைபெற்றது.
வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு
மண்டல அலுவலர்கள்,
தேர்தல் நடத்தும் அலுவலர்
மற்றும்
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
தேர்தல் நாளில் பயன்படுத்தப்படும்
படிவங்களை நிரப்புவது குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.
மேலும் தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுள்ள அனைவரும்
சிறப்பான முறையில் பயிற்சியினை
பெற்று தமிழ்நாடு சட்டமன்றப்
பொதுத் தேர்தல் - 2026-ஐ
அமைதியாகவும், பாதுகாப்புகாவும்
நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க
வேண்டும் என
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார், இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் பணியில்
ஈடுபடவுள்ள அலுவலர்கள்
தபால் வாக்கு
பதிவு செய்யும் மையங்களை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது,
தனி மாவட்ட வருவாய் அலுவலர்
திருமதி.புஷ்பா,
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திரு.ஷாஜகான்,
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திரு.சிவகுமார்,
பர்கூர் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.அபிநயா,
வட்டாட்சியர்
திரு.சின்னசாமி,
தனி வட்டாட்சியர்கள்
திரு.பிரதாப்,
திருமதி.ராஜலட்சுமி,
மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்
திரு.சவுந்தரராஜன்,
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர்
திரு.சேகர்,
வருவாய் ஆய்வாளர்கள்,
கிராம நிர்வாக அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.
"தேர்தல் திருவிழா -
தமிழ்நாட்டிர் பெருவிழா"
-------------------------.