வாக்குச்சாவடிகள்
முன்னேற்பாடு பணிகள்
கலெக்டர் ஆய்வு
கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர்
சட்டமன்ற தொகுதிகளில் உள்ள
வாக்கு சாவடிகளுக்கு
கொண்டு வரப்பட்டுள்ள
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
வாக்குப் பதிவிற்கு
தேவையான எழுது பொருட்கள்
மற்றும்
உபகரணங்களை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
வெண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய
அரசுப்பள்ளி வளாகத்தில்
அமைக்கப்பட்டுள்ள
பசுமை வாக்குச்சாவடி.
---------------------------------------------------------
கிருஷ்ணகிரி. ஏப். 22. –
தமிழ்நாடு சட்டமன்ற
பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு,
கிருஷ்ணகிரி அரசு மகளிர்
மேல்நிலைப்பள்ளி,
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி,
கிருஷ்ணகிரி அரசு கலை மற்றும்
அறிவியல் கலைக்கல்லூரி
வளாகங்களில்
அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளுக்கு
கொண்டு வரப்பட்டுள்ள
வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
வாக்குப் பதிவிற்கு தேவையான
எழுது பொருட்கள் மற்றும்
உபகரணங்களை
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் இன்று (22.04.2026) நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும்,
வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வருகை,
துணை ராணுவப் படை,
காவல்துறை பாதுகாப்பு பணிகள்
மற்றும்
வாக்குச்சாவடி மையத்தில்
குடிநீர் வசதி,
மின்சார வசதி,
கழிப்பறை வசதிகள்
உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும்,
மகளிர் வாக்களிக்கும்
பிங்க் வாக்குச்சாவடி,
மாதிரி வாக்குச்சாவடி,
மாற்றுத்திறனாளி அலுவலர்களால் நிர்வகிக்கப்படும் வாக்குச்சாவடி
ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
தொடர்ந்து,
பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட
வெண்ணம்பள்ளி ஊராட்சி ஒன்றிய
அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில்
வாழை மரம் தென்னை ஓலை மற்றும்
மா தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ள
பசுமை வாக்குச்சாவடி
மற்றும்
ஓதிகுப்பம் கிராமத்தில்
அமைக்கப்பட்டுள்ள
மகளிர் பிங்க் வாக்குசாவடியில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
முன்னேற்பாடு பணிகளை
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும்,
ஆந்திர மாநில எல்லையான காளிகோயில் வனத்துறை சோதனை சாவடியில்
பறக்கும் படையினரால்
மேற்கொள்ளப்பட்டு வரும்
வாகன தணிக்கை பணிகள்,
அங்கு பொருத்தப்பட்டுள்ள
சிசிடிவி கேமரா,
வாகனங்கள் வருகை குறித்த பதிவேடு,
எல்.இ.டி திரை
மூலம் கண்காணிக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இவ்வாய்வில்,
பர்கூர் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அலுவலர்
திருமதி.அபிநயா,
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்
திரு.ரமேஷ்,
திரு.சின்னசாமி,
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர்
திரு.சேகர்
மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும்
அலுவலர்கள் உடனிருந்தனர்.
"தேர்தல் திருவிழா
தமிழ்நாட்டின் பெருவிழா"
-------------------------------------.