ஒசூர் அரசுப்பள்ளிக்கு
3 புதிய வகுப்பறைகள்
TTK நிறுவனம்
நன்கொடை.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
பேடரப்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளியில்
TTK Prestige நிறுவனம் சார்பில்
ரூ.40 லட்சம் மதிப்பில்
புதிதாக கட்டப்பட்டுள்ள
மூன்று வகுப்பறைகள்
திறப்பு விழா.
ஒசூர். ஏப். 21. -
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில்
மூன்று புதிய வகுப்பறைகள்
திறப்பு விழா.
ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட
பேடரப்பள்ளி 3-வது வார்டில்
இயங்கி வரும்
அரசு நடுநிலைப்பள்ளியில்
TTK Prestige நிறுவனம்
சார்பில்
ரூ.40 லட்சம் மதிப்பில்
புதிதாக கட்டப்பட்டுள்ள
மூன்று வகுப்பறைகள்
திறப்பு விழா
ஏப்ரல் 20-ம் தேதியன்று
சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்தில்
சிறந்த அரசுப்பள்ளி
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட
பேடரப்பள்ளி, 3-வது வார்டில்
மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
இயங்கி வருகிறது
இந்தப்பள்ளியில் 1-வது வகுப்பு முதல்
8-வது வகுப்பு வரை
855 மாணவ, மாணவிகள்
கல்வி பயின்று வருகின்றனர்.
இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில்
நல்லொழுக்கத்துடன்,
தரமான கல்வி கற்பிக்கப்படுகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி
மாவட்டத்தில் உள்ள சிறந்த
அரசுப்பள்ளிகளில்
ஒன்றாக திகழ்கிறது.
தேசிய திறனாய்வு
தேர்வில் முதலிடம்
குறிப்பாக இங்கு பயிலும் மாணவர்கள்
தேசிய திறனாய்வு தேர்வில் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சிபெற்று வருகின்றனர்.
நடப்பு 2025-26 கல்வியாண்டில்
நடந்த தேசிய திறனாய்வு தேர்வில்
8 மாணவர்கள் வெற்றி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து,
பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பெற்றோர் ஆர்வம் காட்டும்
அரசுப்பள்ளி
இந்த அரசுப்பள்ளியின் சிறப்பை அறிந்த பேடரப்பள்ளி மற்றும் அதைச்சுற்றியுள்ள பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை
பேடரப்பள்ளி அரசுப்பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் இந்த அரசுப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை
ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதனால் இந்த அரசுப்பள்ளி இடப்பற்றாக்குறை காரணமாக மூன்று இடத்தில் இயங்கி வருகிறது.
அதிக மாணவர்கள்
இப்பள்ளியில் படித்து வருவதால், வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக
தலைமை ஆசிரியர் மற்றும்
பள்ளி மேலாண்மை குழுவினர்
அருகில் உள்ள
TTK PRESTIGE COMPANY MANAGEMENT
HR Manager MR. NIRMAL
அவர்களை சந்தித்து கூடுதல் வகுப்பறை வேண்டி மனு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து
TTK நிறுவனத்தார் உடனே அரசுப்பள்ளியை
பார்வையிட்டு CSR FUND மூலமாக
ரூ.40லட்சம் மதிப்பில்
பள்ளியின் இரண்டாவது மாடியில்
மூன்று வகுப்பறைகள் கட்டித் தருவதாக உறுதியளித்தார்கள்.
அதைத்தொடர்ந்து
தலைமை ஆசிரியர்
திரு.பொன் நாகேஷ்
அவர்களின் முயற்சியின் காரணமாக
மாநில செம கிரா சிக்ஷா
SS இயக்குனர் அவர்களிடம்
இருந்து NOC சான்று பெறப்பட்டது.
மேலும்
ஓசூர் மாநகராட்சி ஆணையரிடமிருந்து
BUILDING ELIGIBILITY CERTIFICATE
பெறப்பட்டு 3 வகுப்பறைக்கான
கட்டிட பணிகள் தொடங்கப்பட்டது.
ரூ.40 லட்சம் மதிப்பில்
மூன்று வகுப்பறைகள்
நடப்பு கல்வி ஆண்டில்
சுமார் 6 மாதங்களாக மூன்று வகுப்பறைகள்
40 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
புதிய வகுப்பறைகள்
திறப்பு விழா
20-04-2026 அன்று புதிதாக கட்டப்பட்ட
மூன்று வகுப்பறைகள்
திறப்பு விழா நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவுக்கு
தலைமையாசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள்
தலைமை வகித்து
அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில்
சிறப்பு விருந்தினர்களாக
TTK PRESTIGE COMPANY
MANAGEMENT சார்பாக
TTK Prestige
Chief Manufacturer Officer CMO
திரு. ஸ்ரீகாந்த்
அவர்கள்
TTK Prestige
Deputy General Manager DGM
திரு. ராஜா சொக்கலிங்கம்
அவர்கள்
TTK manager HR
திரு. நிர்மல்.
அவர்கள்
TTK HR TEAM
திரு.பபியன் பெர்னாண்டஸ்.
ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக
கலந்து கொண்டு
குத்துவிளக்கேற்றி வைத்து
பூஜைசெய்து
ரிப்பன் வெட்டி புதிய வகுப்பறைகளை
திறந்து வைத்தனர்.
தலைமை ஆசிரியர்
திரு. பொன்நாகேஷ்
அவர்கள்
புதிய வகுப்பறை திறப்பு விழா
ஏற்பாடுகளை சிறப்பாக
செய்திருந்தார்.
இந்த விழாவில்
TTK Prestige தொழிற்சாலையில்
பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும்
பள்ளி ஆசிரியர்கள்
கலந்து கொண்டார்கள்.
--------------------------------------------.