கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி
பெறுவதற்கு தகுதியுள்ள விவசாயிகளின்
ஆதார் இணைப்பு, e-KYC பதிவிற்கான
சிறப்பு முகாம்கள்
அனைத்து வட்டார வேளாண்
விரிவாக்க மையங்களிலும்
15.06.2026 வரை
நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி. ஜுன். 02. –
பாரத பிரதமரின் கௌரவ நிதி
(PM-KISAN)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
பாரத பிரதமரின் கௌரவ நிதி உதவி
பெறுவதற்கு தகுதியுள்ள
விவசாயிகளின்
ஆதார் இணைப்பு,
e-KYC பதிவிற்கான
சிறப்பு முகாம்கள்
அனைத்து வட்டார வேளாண்
விரிவாக்க மையங்களிலும்
15.06.2026 வரை நடைபெற உள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாரத பிரதமரின் கௌரவ நிதி (PM-KISAN)
தகுதியுள்ள விவசாயக் குடும்பங்களுக்கு
ஆண்டுக்கு ரூ.6,000 வீதம்
3 தவணைகளாக,
தவணைக்கு ரூ.2,000 வீதம்,
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை
நேரடியாக விவசாயிகளின்
ஆதார் இணைக்கப்பட்ட
வங்கி கணக்கில் (Direct Benefit Transfer)
வரவு வைக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
பிரதம மந்திரி கௌரவ நிதியுதவி
திட்டத்தின் கீழ்,
85,698 விவசாயிகள்
பயனாளிகளாக உள்ளனர்.
இத்திட்டத்தில்
ஆதார் எண் இணைக்காமல்
3,791 பயனாளிகளும்,
e-KYC செய்யாமல் 4,902 பயனாளிகளும்,
இவ்விரண்டும் செய்யாமல்
1,835 பயனாளிகளும்
தொடர்ந்து பயனடைய இயலவில்லை.
எனவே,
தகுதியுடைய அனைத்து விவசாயிகளும்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து வட்டார வேளாண்
விரிவாக்க மையங்களிலும்
15.06.2026 வரை நடைபெறும்
சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு
அறிவுறுத்தப்படுகிறது.
மேலும்
இனிவரும் காலங்களில்
ஆண்டுதோறும் e-KYC செய்தால் மட்டுமே
தவணைகள் கிடைக்கபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்
பிரதம மந்திரி கௌரவ
நிதியுதவி திட்டத்தில்
23 வது தவணை வரும்
ஜூலை மாதத்தில்
வழங்கப்பட உள்ளதால்,
இம்முகாமில்
தகுதியுடைய விவசாயிகளின்
நிலம் தொடர்பான விவரங்கள்,
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது,
e-KYC போன்ற அனைத்து விதமான
முழுமையற்ற விவரங்கள் சரி செய்து பயனடையவும்,
தகுதியுடைய விடுபட்ட விவசாயிகள்
புதிதாக இத்திட்டத்தில் சேர்ந்து
பயன்பெறலாம் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்துள்ளார்.
-----------------------------------------------.