தமிழகம் மாற்றத்திற்காக
காத்திருக்கிறது.
மே 4-க்கு பிறகு அரசியல் மாற்றம்
தமிழகத்தில வரணும்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள்
தமிழகத்தினுடைய முதலமைச்சராக
நாற்காலியில் அமரணும்.-----
கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலத்தில் தேசிய ஜனநாயக
கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து
பாரதிய ஜனதா கட்சியின்
முன்னாள் மாநில தலைவர்
கே. அண்ணாமலை
அவர்கள்
பரப்புரை மேற்கொண்டார்.
தேன்கனிக்கோட்டை. ஏப். 18. –
தேன்கனிக்கோட்டை வட்டம்
தளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
கெலமங்கலம் பேருந்து நிலையம் அருகே
அமைக்கப்பட்டிருந்த
பிரம்மாண்ட மேடையில்
பாரதிய ஜனதா கட்சியின்
முன்னாள் மாநில தலைவர்
கே. அண்ணாமலை
அவர்கள்
பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது
தளி சட்டமன்ற தொகுதி
பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்
டாக்டர். சி.நாகேஷ்குமார்
மற்றும்
ஓசூர் சட்டமன்ற தொகுதி
அதிமுக வேட்பாளர்
முன்னாள் அமைச்சர்
பாலகிருஷ்ணாரெட்டி
ஆகியோருக்கு முறையே
தாமரை
மற்றும்
இரட்டை இலை
சின்னத்தில் பெருவாரியாக
வாக்களித்து வெற்றி பெறச் செய்ய
வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பொதுக் கூட்டத்தில் தொடர்ந்து பேசும் போது
அவர் கூறியதாவது -
தமிழகம் மாற்றத்திற்காக
காத்திருக்கிறது.
"சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெரிய அன்போடு ஆதரவோடு இங்கே வந்திருக்கின்றீர்கள்.
உங்கள் எல்லோருக்கும்
மற்றுமொரு முறை உங்களுடைய பாதத்தைத் தொட்டு வணங்கி
என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழகம் முழுவதும் மாற்றத்திற்காக
நம்முடைய சொந்தங்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
மே 4-க்கு பிறகு அரசியல் மாற்றம்
தமிழகத்தில வரணும்.
எடப்பாடி பழனிசாமி அவர்கள்
தமிழகத்தினுடைய முதலமைச்சராக
வந்து அந்த நாற்காலியில் அமரணும்.
தேசிய ஜனநாயக கூட்டணி
தமிழகத்தில 234 தொகுதிகளிலும் கூட
வெற்றி பெற வேண்டும்.
அதோ பாருங்க நம்முடைய
இரண்டு வேட்பாளர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள்.
தளி தொகுதியினுடைய
பாரதிய ஜனதா கட்சியினுடைய
வெற்றி வேட்பாளர்
டாக்டர். நாகேஷ் குமார் அவர்கள்
நம்முடைய தாமரைச் சின்னத்தில்,
அதேபோல நம்முடைய
ஓசூர் தொகுதியில்
நம்முடைய வெற்றி வேட்பாளர்
அண்ணன் பாலகிருஷ்ண ரெட்டி
அவர்கள்
இரட்டை இலை சின்னத்தில்.
அருமைச் சொந்தங்களே,
இரண்டு
வேட்பாளர்களுக்கும் கூட இந்த முறை
உங்களுடைய ஆதரவெல்லாம் அளித்து
வெற்றி பெறச்செய்ய வேண்டும்.
தளி தொகுதியைப் பொறுத்தவரை
எத்தனை ஆண்டுகாலமாக மாற்றம்
வேண்டும், வேண்டும், வேண்டும் என்று
எதிர்பார்த்துக் காத்துக்
கொண்டிருக்கின்றோம்.
2006, 2011, 2021-ல் சட்டமன்ற உறுப்பினராக கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த ராமச்சந்திரன் அவர்கள் தொடர்ந்து இருக்கிறார்.
ஐயா இந்த முறை மாற்றம் வரவேண்டும்
என்றால் நம்முடைய மாவட்டத்துல மாற்றம் வரவேண்டும் என்றால் மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன.
டெல்லியில் பாரத பிரதமர்
ஐயா நரேந்திர மோடி அவருடைய ஆட்சி,
மாநிலத்துல ஐயா எடப்பாடி பழனிசாமி
அவர்கள் முதல்வர் நாற்காலியில்
மே 4-க்கு பிறகு,
அதேபோல நம்முடைய தளி தொகுதியில,
ஓசூர் தொகுதியில் இரண்டு வெற்றி வேட்பாளர்களும் கூட இங்கிருந்து செல்ல வேண்டும்.
இந்த மூன்று மனிதர்களும்
ஒரே கோட்டில் இருக்கும் பொழுது மட்டும்தான் மாற்றம் நம்முடைய தொகுதிக்கு வரும்
அருமைச் சொந்தங்களே.
511 தேர்தல் வாக்குறுதியில்
முழுமையாக 70 வாக்குறுதியைக் கூட
திராவிட முன்னேற்றக் கழகம்
நிறைவேற்றவில்லை.
ஐயா போன தேர்தல் வாக்குறுதிக்கும்
இந்த தேர்தல் வாக்குறுதிக்கும் பார்த்தீங்கன்னா அப்படியே 77 தேர்தல் வாக்குறுதியை
கட்-காப்பி-பேஸ்ட் (cut-copy-paste) பண்ணி
2021-ல் இருந்ததை தூக்கி
26 தேர்தல் வாக்குறுதியில்
அப்படியே ஒரு வார்த்தை மாறாமப் போட்டுருக்காங்க.
இன்னொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும், இரண்டு நாட்களுக்கு முன்பு
நாடாளுமன்றத்தில்
பாரத பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் நம்முடைய தாய்மார்களுக்கு
குரல் கொடுப்பதற்காக
ஒரு மசோதாவைக் கொண்டு வந்தாங்க.
131-வது அரசியலமைப்பு
திருத்தச் சட்ட மசோதா அது.
அது நேத்து நாடாளுமன்றத்துல
திட்டமிட்டு காங்கிரஸ் கட்சி,
திராவிட முன்னேற்றக் கழகம்
திட்டமிட்டு,
கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டு
அந்த மசோதாவைத்
தோற்கடித்திருக்கின்றார்கள்.
298 பேர் மசோதாவுக்கு ஆதரவாக,
230 பேர் மசோதாவுக்கு எதிராக வாக்களித்து மூன்றிலே இரண்டு பங்கு பெரும்பான்மை
நமக்கு கிடைக்காத காரணத்தினால
அது தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.
விகிதாச்சார அடிப்படையில தென்னிந்தியாவினுடைய உரிமையை
மோடி அவர்கள் விட்டுக்கொடுக்கவில்லை.
50 சதவீதம் உயர்த்தியும் கூட
திராவிட முன்னேற்றக் கழகம்,
கம்யூனிஸ்ட் கட்சி,
காங்கிரஸ் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நாடாளுமன்றத்துல இந்த மசோதாவைத் தோற்கடித்திருக்கின்றார்கள்.
அதனால சகோதர சகோதரிகளே,
எப்படி உங்களுக்கு எதிராக
திமுக, கம்யூனிஸ்ட்
ஓட்டுப் போட்டாங்களோ,
23-ஆம் தேதி ஏப்ரல்
நீங்கள் இவர்களுக்கு எதிராக
வாக்களிக்க வேண்டும்
என்று தமிழகத்தைத் கேட்டுக்கொள்கிறேன். எப்படியாவது இந்த மசோதாவை நாடாளுமன்றத்துல வருகின்ற காலத்துல கொண்டு வரத்தான் போறார்.
நம்முடைய தாய்மார்களுக்கு,
சகோதரிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்துல நம்ம கொடுக்கத்தான் போறோம்.
ஆனா இன்னைக்கு நம்மை எதிர்த்து வாக்களித்தவர்களுக்கு
நீங்க 23-ஆம் தேதி
அவர்களை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்
என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
ஐயா திராவிட முன்னேற்றக்
கழகத்தினுடைய ஆட்சியை
தமிழக மண்ணிலிருந்து
வேரோடும் மண்ணோடும்
சாய்க்க வேண்டிய நேரம் இது.
பேசுவது வேறு, செய்வது வேறு.
கடந்த ஐந்தாண்டு காலமாக
பெண்களுக்கு எதிராக நடந்திருக்கக்கூடிய கொலைக் குற்றங்களை மட்டும் பாருங்க.
2080 கற்பழிப்புங்கய்யா.
ஒன்று இரண்டு அல்ல,
ஐயா, கொலைகள் மட்டும் 8,008.
18 வயதுக்குக் கீழ் இருக்கக்கூடிய
குழந்தைகள் மீது நடத்தப்பட்ட
வன்கொடுமை 39,900.
ஒரு நாளைக்கு 28 குழந்தைகள் தமிழகத்துல போக்ஸோ வழக்கு நாம் பதிவு செய்கின்றோம்.
உங்க குழந்தையா இருக்கலாம்,
என் குழந்தையா இருக்கலாம்,
பக்கத்து வீட்டு குழந்தையா இருக்கலாம்,
நம்ம ஊர் குழந்தையா இருக்கலாம்...
ஒரு நாளைக்கு 28 குழந்தைகள் மீது
தமிழகத்துல போக்ஸோ சட்டம் நாம் பயன்படுத்துகின்றோம்.
ஓர் அரசினுடைய
முதல் வேலை என்பது
பாதுகாப்பு.
உயிர் பாதுகாப்பு,
சொத்து பாதுகாப்பு.
அதுக்கப்புறம் தானுங்க ஐயா வளர்ச்சி.
ஸ்டாலின் அவர்களை பொறுத்தவரை,
திராவிட முன்னேற்றக்
கழகத்தை பொறுத்தவரை,
சட்டம்-ஒழுங்கை நாசப்படுத்தி
இந்த நாற்காலியில்
அமர்ந்திருக்கின்றார்கள்.
அவர்களுக்கு எதிரான வாக்காக இது இருக்கும். ஐயா எல்லாருமே சொல்லுவாங்க,
ஐயா நீங்க செலுத்தக்கூடிய வாக்கு என்பது
அடுத்த அஞ்சு வருஷ காலம்
உங்க தலைமுறையை
தீர்மானிக்கப்போற வாக்கு.
ஐயா நாம் பேசுவது
21-ஆம் நூற்றாண்டில்
எல்லாருடைய கையிலும்
செல்போன் இருக்கு.
தட்டிப் பார்த்தீங்கன்னா
எல்லாருக்குமே தெரியும்.
மோடி அவர்கள் தமிழகத்திற்கு என்ன செஞ்சிருக்காங்க,
ஓசூருக்கு என்ன செஞ்சிருக்காங்கன்னு.
திராவிட முன்னேற்றக் கழகம்
ஐந்து ஆண்டுகளாக விவசாயம்னா என்னன்னே தெரியாம இருக்காங்க.
ஐயா ஸ்டாலின் அவர்களை ஏன் நாம்
விவசாயி இல்லைனு சொல்றோம்?
டெல்டா பகுதியில் கான்கிரீட் ரோடு போட்டு வயல்களுக்குள்ள போறாரு...
இவங்க விவசாயிகளா? பொங்கலுக்கு வீட்ல பொங்கல் வைக்க வேண்டும் என்றால்,
2022-ல பஞ்சு வச்சு பொங்கல் வச்சு
போட்டோ எடுத்து போடுறாரு...
இவங்க விவசாயிகளா?
நாங்கள் 3,50,000 பேருக்கு அரசு வேலை கொடுப்போம் என்று சொல்லி,
94,000 பேருக்கு
அரசு வேலை கொடுத்திருக்காங்க.
ஐயா தமிழ்நாட்டுல ரிட்டையர்
ஆனவங்க எத்தனை பேர் தாய்மார்களே?
கடந்த ஐந்து ஆண்டுகளில்
தமிழகத்துல ரிட்டையர் ஆனவங்க மட்டுமே
அரசு வேலையில 1,05,000 பேர்.
எங்கேயாவது ஒரு கேடுகெட்ட ஆட்சியைப் பார்த்திருக்கீங்களா?
ரிட்டையர் ஆனவங்க 1,05,000 பேரு,
பணி நிரப்பப்பட்டவங்க 94,000 பேரு.
ஆனா தேர்தல் வாக்குறுதி கொடுத்தது
3,50,000 பேர்.
23-ஆம் தேதி நீங்க செய்ய வேண்டியது
ஒரே ஒரு வேலை.
நம்முடைய சின்னம்... தளிக்கு போறீங்க, தளியினுடைய வாக்காளரா இருக்கீங்க,
எதையும் யோசிக்க வேண்டாம்.
இந்த முறை ஒரு படித்த டாக்டர் கைக்கு
நீங்க அந்த வாய்ப்பை கொடுங்க.
மருத்துவரை மக்கள் சேவை செய்வதற்கு ஒரு வாய்ப்பை நீங்க கொடுங்க.
தாமரை சின்னத்திற்கு
ஒரு வாய்ப்பு கொடுங்க.
மத்திய அரசு ஆட்சியில இருக்கு,
என்டிஏ இருக்கு. என்ன வேண்டுமோ
இந்த பகுதிக்கு தளிக்கு கொண்டு வருவது எங்களுடைய பொறுப்பு.
மூன்று முறை 15 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்து
குட்டி இங்கிலாந்தாக இருக்க வேண்டிய தளி
இன்னைக்கு குட்டிச்சுவர் ஆயிடுச்சு.
மெட்ரோ ரயில் எக்ஸ்டென்ஷன் வரணும்,
எல்லாமே வரவேண்டும் என்றால்,
மத்திய அரசோடு மாநில அரசு
இணைந்தால் தான் அது நடக்கும்.
ஐயா ஒரு கையில தட்டுனா
சத்தம் வராது,
ரெண்டு கையில தட்டுனா தான்
சத்தமே வரும்.
மத்திய அரசும் மாநில அரசும்
இணையாமல் எப்படி ஒரு வளர்ச்சியை
அண்ணன் பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் ஓசூருக்கு கொண்டு வர முடியும்?
இன்னைக்கு இணைஞ்சிருக்கிறோம்.
மாநிலத்தில மத்தியில இணைஞ்சிருக்கின்றோம் கூட்டணியில் இருக்கின்றோம்.
அதனால இந்த முறை
பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள்
உங்களுடைய சட்டமன்ற உறுப்பினராக
வரும் பொழுது,
வளர்ச்சி என்பது அடுத்த கட்டத்திற்கு
செல்லும் என்பதையும் கூட
நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்
அருமை சொந்தங்களே.
அனைத்திந்திய அண்ணா
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி முடிந்து
வெளியே வரும்பொழுது,
இந்த ஒரு மாவட்டத்தில் மட்டுமே
1,67,900 விவசாயிகளுக்கு 6,000 ரூபாய் கொடுத்தோம்.
இன்னைக்கு திமுக ஆட்சி வெளியே முடிந்து போகும்பொழுது
அது 85,000 விவசாயிகளா குறைஞ்சிருக்கு.
ஐயா 82,000 விவசாயிகள்
இந்த ஒரு மாவட்டத்தில் மட்டுமே
மத்திய அரசினுடைய கிசான்
திட்டத்திலிருந்து
நீக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எதுக்கு நீக்குனீங்கன்னு கேட்டா,
ஆதார் கார்டு இல்ல,
அது இணைக்கல,
ஆதார் கார்டு
பேங்க் அக்கவுண்ட் இணைக்கல,
கூட்டு பட்டா இருக்கு...
கூட்டு பட்டா இருக்கறதுனால நாங்க கொடுக்க மாட்டோம்னு சொல்லி
82,000 விவசாயப் பெருமக்களை
இந்த ஒரு மாவட்டத்தில் மட்டுமே
பாரத பிரதமருடைய கிசான் சம்மான் நிதியிலிருந்து நீக்கியிருக்கின்றார்கள்.
ஆனா இந்த முறை
மத்திய அரசு மாநில அரசு
இணைகின்ற காரணத்தினால்,
இதனுடைய வளர்ச்சியை
அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.
ஐயா இன்னைக்கு நான்
உறுதி சொல்றேன்.
இன்னைக்கு பாருங்க
உதாரணத்திற்கு நாம எல்லாம் இங்கிருந்து அவசரமா போகணும்னா கூட
ஒரு தனியார் விமான நிலையத்துல
அந்த தாலுக்காக்குள்ள நாம போகணும்.
இன்னைக்கு ஓசூருக்கு தேவை
ஒரு உலகத்தரம் வாய்ந்த
ஒரு விமான நிலையம்.
இதுல எந்த மாற்றுக் கருத்தும்
இல்லைங்க ஐயா.
பக்கத்துல சர்வீஸ் பண்ணனும்.
மாநிலத்திலிருந்து ஒரு ப்ரோபோசல் கொடுப்பாங்க,
தப்பு தப்பா கொடுப்பானுங்க.
மெட்ரோ வேணும்னு கொடுப்பானுங்க,
பேசிக் டேட்டாவே தப்பா கொடுப்பாங்க.
திராவிட முன்னேற்றக் கழகத்தை
பொறுத்தவரை வளர்ச்சி வரக்கூடாதுன்னே
மத்திய அரசுக்கு டிபிஆர்-ஐ தவறா கொடுக்குறாங்க.
ஓசூரை பொறுத்தவரை நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கே வரட்டும்.
அவர்களோடு இணைந்து
மத்திய அரசோடு பேசி,
உங்களுக்கு அந்த மெட்ரோ ரயிலுடைய எக்ஸ்டென்ஷனாக இருக்கட்டும்,
வரக்கூடிய விமான நிலையமாக இருக்கட்டும்...
ஏன்னா இளைஞர்கள் அடுத்த கட்டம் சிந்திக்கிறான்,
படிக்கிறான், வேலை வாய்ப்பு உருவாகிக் கொண்டிருக்கிறது,
தொழிற்சாலைகள் வருது.
இதெல்லாம் கனெக்டிவிட்டிங்க ஐயா, கனெக்டிவிட்டி.
21-ஆம் நூற்றாண்டை பொறுத்தவரை
மனிதன் வேகமாக ஒரு இடத்திலிருந்து
இன்னொரு இடத்திற்கு போனால் தான்
வேலை செய்ய முடியும்.
மிக வேகமாக மனிதன் பயணம் செய்யணும்.
அது அரசினுடைய கடமை,
அந்த வேகத்தை அதிகப்படுத்துவது.
அதையும் உங்களுக்குச் செய்வோம்
என்று சொல்லி மேடையில் இருக்கக்கூடிய
எல்லா தலைவர்களுக்கும் கூட இந்த நேரத்தில் நன்றிகலந்த வாழ்த்துக்களை, வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு
பாஜக கட்சியின்
முன்னாள் மாநில தலைவர்
அண்ணாமலை
அவர்கள்
பரப்புரையில் பேசினார்.
இந்த கூட்டத்தில்
பாஜக கட்சியின் மூத்த தலைவர்
திரு. சி. நரசிம்மன். Ex.MP
மேற்கு மாவட்ட தலைவர்
திரு. நாராயணன்
முன்னாள் மாவட்டதலைவர்
திரு. நாகராஜ்
மற்றும் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.
---------------------------------------------.