கிருஷ்ணகிரி மாவட்ம்
10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில்
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை
உயர்த்துவது குறித்து அனைத்து
தலைமையாசிரியர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி. மே. 27. –
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
10 மற்றும் 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வில்
மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை
உயர்த்துவது குறித்து அனைத்து
தலைமையாசிரியர்களுக்கான
ஆய்வுக் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,
26.05.2026 அன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்
2026- 2027 -ம் கல்வியாண்டில்
10 மற்றும் 12 -ம் வகுப்பு தேர்ச்சி
விகிதத்தை உயர்த்த அனைத்து தலைமையாசிரியர்களும்
பள்ளியின் தேர்ச்சி நிலையை
பாடவாரியாக ஆய்வு செய்து
உடனடி முன்னேற்ற நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
குறைந்த மதிப்பெண் பெறும்
மாணவர்களை தனியாக
அடையாளம் கண்டு
சிறப்பு கவனம்
செலுத்த வேண்டும்.
தினசரி காலை மற்றும் மாலை நேர
சிறப்பு பயிற்சி வகுப்புகளை
முறையாக நடத்த வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும்
பாடவாரியான தேர்ச்சி இலக்குகள்
நிர்ணயிக்கப்பட வேண்டும்.
வாரந்தோறும் அலகு தேர்வு
(Unit Test) மற்றும்
மாதந்தோறும் மாதிரி தேர்வு
(Model Examination) நடத்தி
முடிவுகளை ஆய்வுக்கு
உட்படுத்த வேண்டும்.
ஒற்றை பாடத்தில் தோல்வி
(Single Subject Failure) மற்றும்
இரட்டை பாடத்தில் தோல்வி
(Double Subject Failure)
அடைந்த மாணவர்களுக்கு
தனிப்பட்ட பயிற்சி வழங்க வேண்டும்.
மாணவர்களின் வருகைப் பதிவை
தினசரி கண்காணித்து,
வருகை குறைவான மாணவர்களின்
பெற்றோர்களை
பள்ளி மேலாண்மைக் குழு உதவியுடன்
உடனடியாக தொடர்பு
கொள்ள வேண்டும்.
பாடத்திட்டம் நிர்ணயிக்கப்பட்ட
காலத்திற்குள் முழுமையாக
கற்பிக்கப்படுவதை
உறுதி செய்ய வேண்டும்.
ஆசிரியர்களின் கற்பித்தல்
செயல்பாடுகளை தொடர்ந்து
கண்காணிக்க வேண்டும்.
மாதந்தோறும்
பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடத்தி
மாணவர்களின் கல்வி முன்னேற்றம்
குறித்து விளக்க வேண்டும்.
மாணவர்களுக்கு தேவையான
மனநல ஆலோசனை மற்றும்
ஊக்கப் பயிற்சிகளை
வழங்க வேண்டும்.
தேர்ச்சி குறைவாக வழங்கிய
பாட ஆசிரியர்களுக்கு
பயிற்சி பட்டறை பாடவாரியாக
நடத்தப்பட வேண்டும்.
பள்ளிக் கல்வித் தரவுகளை
முறையாக பராமரித்து
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு
சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
சிறப்பாக முன்னேற்றம் அடைய செய்த
ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களை பாராட்டி
ஊக்குவிக்க வேண்டும்.
2026 - 2027 ம் கல்வியாண்டில் நடைபெறும்
பொதுத்தேர்வில் பள்ளியின்
தேர்ச்சி விகிதத்தை குறிப்பிடத்தக்க
அளவில் உயர்த்த செயல் திட்டம்
தயாரித்து நடைமுறைப்படுத்த
வேண்டும் என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
திரு.மதன்குமார்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
செல்வி.சௌமியா,
மாவட்ட கல்வி அலுவலர்கள்
திருமதி.கௌசர்,
திரு.கிருஷ்ணன்,
உதவி திட்ட அலுவலர்
திரு.மகேந்திரன்,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (கல்வி)
திரு.சர்தார்.
மற்றும் அனைத்து தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.
------------------------------------------.