மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமை.
கிருஷ்ணகிரி. ஜுன். 8. –
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர்
அலுவலக கூட்டரங்கில்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தலைமையில்
இன்று (08.06.2026) நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில்,
வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில்
இன்று (08.06.2026) நடைபெற்ற
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்
பொதுமக்களிடம்,
வீட்டுமனைப் பட்டா,
விலையில்லா தையல் இயந்திரம்,
சலவைப் பெட்டி,
முதியோர் உதவித்தொகை,
சாலை வசதி,
மின் இணைப்பு
மகளிர் உரிமைத்தொகை
போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து
560 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட
மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது
துறை சார்ந்த அலுவலர்கள்
உடனடி நடவடிக்கை எடுக்கவும்,
தகுதியில்லாத மனுக்களுக்கு
உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு
தெரிவிக்க வேண்டும் என
துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என
மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,
அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில்,
மாவட்ட வருவாய் அலுவலர்
திரு.அ.சாதனைக்குறள்,
துணை ஆட்சியர் (பயிற்சி)
திரு.சாய்சைதன்யா ஜாதவ் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியரின்
நேர்முக உதவியாளர் (பொது)
திரு.கிருஷ்ணன்,
தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்)
திருமதி.அபிநயா,
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்
திரு.சிவக்குமார்
மற்றும் அனைத்து துறை
முதன்மை அலுவலர்கள்
கலந்துக்கொண்டனர்.
--------------------------------------------.